Max Alexander: 7 வயதிலேயே பிரபல ஆடை வடிமைப்பாளரான சிறுவன்!

Max Alexander.
Max Alexander.

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த மேக்ஸ் அலெக்சாண்டர் என்ற சிறுவன் தனது 4 வயதிலிருந்தே ஆடை வடிவமைப்பைக் கற்று வருகிறார். தற்போது 7 வயதாகும் இவர் சர்வதேச அளவில் இவரின் ஆடைகளை விற்பனை செய்வதோடு பல பிரபலங்களையும் தனது வாடிக்கையாளர்களாக வைத்திருக்கிறார்.

சிறு வயதிலேயே கண் கவரும் ஆடைகளை வடிவமைத்து வரும் இவர் தன்னம்பிக்கையுடன் தான் ஒரு Gucci ( சர்வதேச அளவில் பெரிய brand நிறுவனத்தின் தலைவர்) என்று கூறுகிறார். அவரது தாய் மேடிசன், மேக்ஸின் தனித்துவமான திறமையை முதலில் கண்டுக்கொள்ளவே இல்லை. மேக்ஸ் நான்கு வயதாக இருக்கும்போது அவராகவே தன் தாயிடம் ஆடை வடிவமைப்பாளராக ஆக வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அங்கு ஆரம்பமானதுதான் இந்த கதை. மேடிசன் இது அவனுடைய கனவு மட்டுமில்லை லட்சியம் என்று மேக்ஸின் செய்கைகள் மூலம் உணர்ந்துக்கொண்டார். ஆம்! மேக்ஸ் முதன்முதலாக அவர் தாயிடம் கேட்டது ஆடை ஆணிந்து காட்சிக்காக வைக்கப்படும் பொம்மைத்தான். அவர் தாய் இதை கேட்டவுடன் சிரித்தார். அப்போது மேக்ஸ், "என்னிடம் அந்த பொம்மை இல்லை. ஒருமுறை வாங்கிக் கொடுங்கள். நான் யார் என்பதை நிரூபிக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

அவரது தாய் கார்ட் போர்டு பயன்படுத்தி பொம்மை செய்து கொடுத்தார். முதலில் மேக்ஸ் ஆடை வடிவமைக்கும்போது அனைவருக்கும் சிரிப்பாகவும் ஒரு சிறுபிள்ளை தனமாகவும் தான் இருந்தது. ஆனால் மேக்ஸின் தாயாருக்கு பின்னர் தான் தெரிந்தது, மேக்ஸின் இந்த திறமை அவரின் முன்னோர்களிடமிருந்துதான் வந்திருக்கிறது என்று. ஆனால் மேக்ஸுக்கு தனது முன்னோர்கள் ஆடை தைப்பவர்கள்தான் என்று தெரியவே தெரியாது.

Max
MaxImage credit: Dailyo

மேக்ஸ் தையல் இயந்திரத்தில் அவர் அம்மாவின் மடியில் உட்கார்ந்து "எதையும் தொடாமல் நான் என்ன செய்யப் போகிறேன் என்று மட்டும் பார்" என்று தாயிடம் கூறிவிட்டு தையல் செய்ய ஆரம்பித்தார். அதன்பின்னர் வேக வேகமாக தைக்க ஆரம்பித்தார். இதனைப் பார்த்து வியந்த அவரது தாயார், அவரை ஒரு சிறிய கடை தையல்காரரிடம் விட்டு பயிற்சியளிக்க கூறியிருக்கிறார். தினமும் வடிவமைப்பில் எதோ ஒரு தவறு செய்துவிட்டு அதனை எப்படி சரி செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருப்பார், மேக்ஸ்.

மேக்ஸ் மிகவும் ஈடுபாடுடன் ஆடை வடிமைத்து வந்தார். அதேபோல் அவரின் நிம்மதியான மற்றும் சந்தோசமான இடம் அவர் தையல் செய்யும் இடம் தானாம். முதல் இரண்டு வருடங்களில் தான் ஒரு சமையல் நிபுணராக ஆக வேண்டும் என்று கூறிக்கொண்டிருந்த மேக்ஸ், அந்த எண்ணத்தை முழுவதுமாக விட்டு விட்டு ஆடை வடிவமைக்கவே முழு நேரத்தையும் செலவிட்டார். இன்னும் சொல்ல போனால், மேக்ஸுக்கு அவரது ஆடை அலங்காரத்தின் மேலும் ஆண்கள் ஆடைகள் மேலும் சிறிதும் விருப்பம் இல்லை. பெண்களுக்கான வித விதமான ஆடை செய்வதில்தான் அவருக்கு மிகுந்த விருப்பம் என்று அவரின் தாயார் கூறினார்.

Fashion designer max
Fashion designer maxImge credit: Meaww

சில வருடங்களிலேயே 100க்கும் மேற்பட்ட விதவிதமான ஆடைகளை வடிவமைத்து சொந்தமாக கண்காட்சி ஒன்றை நடத்தியிருக்கிறார், மேக்ஸ். மேக்ஸின் விருப்பங்கள் என்றால் அது Gucci நிறுவனத்திற்கு தலைவராக வேண்டும் என்பதும் சொந்தமாக Max Italian என்ற ஆடை நிறுவனமும் தொடங்க வேண்டும் என்பதுதான்.

இதையும் படியுங்கள்:
ஆண்களுக்கான முறையான சட்டை - பேன்ட் மேட்சிங் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
Max Alexander.

மேக்ஸுக்கு ஒரு சகோதரி மற்றும் ஒரு குட்டி சகோதரனும் உள்ளார்கள். முதலில் அரை டஜன் ஆடைகளை அவர்களுக்கு வடிவமைத்து கொடுத்தே அவர் கற்றுக்கொண்டிருக்கிறார். மற்றவர்களை அழகாகப் பார்க்க வேண்டும் என்ற அவரது ஒரே கொள்கையே அவரை சாதனையாளராக மலர வைத்துள்ளது. இதன்மூலம் ஆடை வடிவமைப்பாளராக ஆக வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு அவர் கூறும் ஒரு தத்துவம் ‘Practice makes perfect’.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com