

பொதுவாக நீங்கள் உங்கள் உடலின் சருமப் பராமரிப்பிற்காக அதிகளவு சிரமம் எடுத்துக்கொள்வதும் அதிகமான செலவை ஏற்றுக்கொள்வதும் சாதாரணமான நிகழ்வாக உள்ளது. குறிப்பாக, உங்கள் முகத்தின் சருமத்தைப் பராமரிக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.
முகத்தில் தோன்றும் கரும்புள்ளி, வெண்புள்ளி, பருக்கள், கருந்திட்டுக்கள் போன்றவற்றை நீக்கவும், தேவையான நீரேற்றம் தரவும், தோலுக்கு அடியில் சுரக்கும் செபம் (Sebum) என்ற எண்ணெய்ப் பசையின் அளவை சமநிலைப்படுத்தி, டல்லான தோற்றமுடைய சருமத்தை பிரகாசமடையச் செய்யவும், சருமத்தில் உண்டாகும் மேடு பள்ளங்களை சமப்படுத்தவும் தற்போது சந்தைக்கு வந்திருக்கும் 'மில்க் பவுடர் ஃபேஸ் வாஷ்' (Milk Powder Face Wash) என்னும் ஒரு பொருள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
ஆம்... இந்த ஒரே ஒரு பொருள், உங்கள் முகத்தில் உண்டாகும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு தருகிறது. இதில் கலந்திருக்கும் பொருட்கள் மற்றும் அவை செயல் புரியும் விதம் பற்றி இப்போது பார்க்கலாம்.
கரும்புள்ளிகளை நீக்கும் மில்க் பவுடர் சக்தி!
ரைஸ் மில்க் பவுடர், அரிசி சில்க் பவுடர், தவிடு (Rice Husk Powder) ஹையாலுரோனிக் ஆசிட் (Hyaluronic Acid), பாப்பைன் என்சைம்ஸ் (Papain Enzymes) மற்றும் குங்குமப் பூ சாறு (Saffron Extract) ஆகிய கூட்டுப் பொருட்களின் கலவையில் தயாரிக்கப்படுகிறது இந்த 'மில்க் பவுடர்.'
இந்த மில்க் பவுடரை சாதாரண சருமம், வறண்ட மற்றும் எண்ணெய்ப் பசை கொண்ட சருமம் போன்ற எல்லா வகையான சருமத்தின் மீதும் பயன்படுத்தலாம். பாப்பைன் என்சைம், முகத்தில் படியும் அதிகப்படியான எண்ணெய் பிசுக்கு, வியர்வை மற்றும் இறந்த செல்களை நீக்கவும், கரும்புள்ளி, வெண் புள்ளிகளை மறையச் செய்யவும் உதவி புரிகிறது.
இதன் மூலம் சருமத்திலுள்ள சிறு துவாரங்களை சுத்தமாகவும் அடைப்பின்றியும் வைத்துப் பராமரிக்க முடியும். முகத்தில் தோன்றியிருக்கும் சிறு சிறு சுருக்கங்கள் மறைந்து முகம் இளமைத் தோற்றத்துடன் காணப்படவும் பாப்பைன் என்சைம்ஸ் துணை புரிகின்றன.
மேலும் இது அரசியை அடிப்படையாகக் கொண்ட பொருட்களுடன் இணைந்து செயல்புரிகையில் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் முற்றிலுமாக நீக்கப்படுகின்றன. மேலும் சருமம் மென்மைத் தன்மை பெற்று, நீரேற்றம் குன்றாமல் ஆரோக்கியமான தோற்றம் தரும்!
ஹையாலுரோனிக் ஆசிட்டானது சருமத்தின் ஆழப் பகுதிகளுமே குறைவில்லாத நீர்ச் சத்து பெற உதவி புரிகிறது. குங்குமப் பூவின் சாறு முகத்திலுள்ள கருந்திட்டுக்களை மறையச் செய்து முகம் பிரகாசமான தோற்றம் பெற உதவுகிறது.
இளமையான தோற்றத்திற்கு மில்க் பவுடர் மசாஜ்!
இந்த மில்க் பவுடரில் இரண்டு டீஸ்பூன் எடுத்து உள்ளங்கையில் வைத்து சில தூளி தண்ணீர் சேர்த்து கலந்தால், பவுடர் நன்கு நுரைத்து வரும். அதை அப்படியே முகத்தில் பூசி நன்கு மசாஜ் செய்து, பிறகு தண்ணீரால் முகத்தை கழுவவிட, முகம் பிரகாசமடைந்து உங்களை வெளியில் செல்ல தயார்படுத்திவிடும். தினமும் காலையிலும் மாலையிலும் ஒருமுறை இந்த பவுடரால் முகத்தை கழுவிக்கொள்வது நல்ல பலன் தரும்.
ஆழமான நீர்ச்சத்தை சருமத்திற்கு வழங்குவதன் மூலம், உங்கள் சருமத்தில் உள்ள மேடு பள்ளங்கள் சீராகி, நீண்ட நாட்களாக நீங்காத கரும்புள்ளிகள் மறைந்து முகம் இளமையாகக் காட்சி தரும்.