
கடுகு எண்ணெயில் வைட்டமின் ஏ, ஈ ,கே மற்றும் ஒமேகா3 கொழுப்பு அமிலம் உள்ளதால் முடியில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. இதன் ஆன்டிஆக்சிடண்ட் மற்று ஆன்டி பாக்டீரியல் பண்பு முடி வளர்ச்சிக்கு ஏற்றது. வழுக்கை மற்றும் முடி உதிர்வை தடுக்கிறது.
எப்படி பயன்படுத்துவது
இரண்டு டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெயை வழுக்கை உள்ள இடங்களில் தடவவும். வட்டவடிவில் கைகளால் பத்து நிமிடம் தடவியபின்அரைமணி நேரம் ஊறியபின் வெதுவெதுப்பான நீரில் ஷாம்பூ போட்டு அலசவும்.
கடுகு எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்
கடுகு எண்ணெயில் ஒரு வாசம் இருக்கும். இது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் கடுகு எண்ணை மற்றும் தேங்காய் எண்ணெயை சம அளவு கலந்து லேசாக சூடுபடுத்தி தலையில் மசாஜ் செய்யவும். முப்பது நிமிடங்கள் ஊறிய பிறகு தலையை ஷாம்பூ வால் அலசவும்.இதை வாரம் இரண்டு முறை செய்யலாம்.
கடுகு எண்ணெய் மற்றும் ஆலோவேரா
ஆலோவேரா வறட்சியைப் தடுக்கும். கடுகு எண்ணெயில் மற்றும் ஆலோவேரா இரண்டையும் சேர்த்துப் பயன்படுத்தலாம். இரண்டு டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணைமற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து இதை தலையில் வழுக்கை உள்ள இடங்களில் நன்கு மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் கழித்து தலையை அலசவும். வாரம் ஒருமுறை செய்யலாம்.
கடுகு எண்ணெய் மற்றும் வெங்காய ஜுஸ்
இது முடியை பளபளபாக்கும். வெங்காயத்தில் உள்ள சல்ஃபர் கொலாஜனை அதிகரிக்கச் செய்யும். வழுக்கை பிரச்னைக்கு மிகச்சிறந்தது.ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணை மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் வெங்காய ஜுஸ் கலந்து தலையில் நன்கு மசாஜ் செய்யவும். அரைமணி நேரம் கழித்து அலசவும். வாரத்தில் இரண்டுமுறை இதை செய்யலாம்.
கடுகு எண்ணெய் மற்றும் வெந்தயம்
பரதமும் நிகோடினிக் அமிலமும் நிறைந்தது வெந்தயம். இந்த இரண்டையும் கலப்பதால் வழுக்கை பிரச்னை தீரும். ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை முதல் நாள் இரவு ஊறவைக்கவும். மறுநாள் இதைபேஸ்டாக அரைக்கவும் இதில் ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெய் சேர்த்துக் கலந்து தலையில் குறிப்பாக வழுக்கை உள்ள இடங்களில் மசாஜ் செய்யவும். அரை நேரம் கழித்து ஷாம்பூ போட்டு அலசவும் வாரம் ஒருமுறை இதை செய்யலாம்.
கடுகு எண்ணையில் இயற்கையாகவே வழுக்கையை நீக்கக் கூடிய பண்பு உள்ளது. இதை தேங்காய் எண்ணெய், ஆலோவேரா, வெங்காய ஜுஸ் மற்றும் வெந்தயத்தோடு சேர்ப்பதால் வழுக்கைப் பிரச்னை தீருவதுடன் முடி வளர்ச்சியும் அபாரமாக இருக்கும்.