
பழைய டூத் பிரஷ் இல் சில சொட்டுகள் எலுமிச்சம்பழ சாற்றை விட்டு விரல் நகங்களில் தடவி சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம்.
கை நகங்களை நன்கு டிரிம் செய்து விட்டு நகங்களில் சிம்பிளாக தேங்காய் எண்ணெய், வாசலின், லிக்விட் பாரபின் இவற்றில் ஏதேனும் ஒன்றை தடவி இரவில் விட்டு மறுநாள் கழுவ கை நகங்கள் அழகாக இருக்கும்.
சமைக்கும்போது, துணி துவைக்கும்போது கைகளுக்கு க்ளவுஸ் போட்டுக்கொள்ள நகத்தில் கீறல் விழாது.
அடிக்கடி விரல்களை சொடுக்கினால் சுருக்கங்கள் ஏற்படும். கடிகாரச்சுற்று, கடிகார எதிர்ச் சுற்றாக கைகளை சுற்ற கைகளுக்கு நல்ல பயிற்சியாகும்.
தேனை கை நகங்களில் தடவி பின் ஊறிய பிறகு கழுவலாம். கை விரல்களுக்கு தரமான நெயில் பாலீஷ் போட்டு வர கை நகங்களில் கோடு, வெடிப்பு வராமல் தடுக்கிறது.
தோட்டவேலை பார்க்கும்போது சோப்பின் மீது நகங்களை தேய்த்து நக இடுக்குகளில் சோப் படுமாறு வைத்து பின் வேலை செய்ய நகங்களில் கறை படியாது.
நகங்களில் படும் இங்க் , துணி நீலம் போன்ற கறைகளை டூத் பேஸ்ட் தடவி, பிரஷ் கொண்டு தேய்த்து கழுவ கறை நீக்கிவிடும்.
வாழைப்பூ, வாழைக்காய் போன்ற கறை ஏற்படுத்தும் காய்கறிகளை சுத்தம், அரியும் முன்பு கைகளில் எண்ணெய் தடவிக்கொண்டு பின் சுத்தம் பண்ண கறை ஏற்படாது.
நகங்களில் ஏற்படும் சுருக்கங்கள், நிறமாற்றம் முதலியவை உடலில் உள்ள நோய் அறிகுறிகளை காட்டக் கூடியதாக இருக்கும். நல்ல சமச்சீர் உணவு, தண்ணீர் குடித்தல், கெமிக்கல்ஸ் கை வைக்காமல் கிளவுஸ் போட்டுக் கொள்ளுதல் மூலம் நக அழகை, ஆரோக்யத்தை பாதுகாக்கலாம்.