ராஜஸ்தானின் நந்தினி குப்தா ஃபெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட் 2023 பட்டம் வென்றார்!

ராஜஸ்தானின் நந்தினி குப்தா ஃபெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட் 2023 பட்டம் வென்றார்!

ராஜஸ்தானின் நந்தினி குப்தா ஃபெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட் 2023 ஆக முடிசூட்டப்பட்டார் மற்றும் மிஸ் வேர்ல்ட் போட்டியில் இந்தியாவின் பிரதிநிதியாகக் கலந்து கொள்வார் என்றும் அந்த விழாவில் அறிவிக்கப்பட்டது.

கோட்டாவைச் சேர்ந்த 19 வயது நந்தினி, இம்பாலில் சனிக்கிழமை இரவு நடந்த கிராண்ட் பைனலே நிகழ்வில் வெற்றியாளராக முடிசூட்டப்பட்டார், டெல்லியைச் சேர்ந்த ஷெரியா பூஞ்சா ஃபெமினா மிஸ் இந்தியா 2023 - 1 வது ரன்னர்-அப்பாக அறிவிக்கப்பட்டார், மற்றும் மணிப்பூரின் தூனோஜம் ஸ்ட்ரெலா லுவாங் 2 வது ரன்னர் அப் ஆக அறிவிக்கப்பட்டார்.

போட்டியின் முன்னாள் வெற்றியாளர்களான சினி ஷெட்டி, ரூபல் ஷெகாவத், ஷினாதா சவுகான், மானசா வாரணாசி, மனிகா ஷியோகாந்த், மன்யா சிங், சுமன் ராவ் மற்றும் ஷிவானி ஜாதவ் உள்ளிட்டோர் நேர்த்தியான ஆடை அலங்காரங்களுடன் வெகு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட லெஹெங்காக்களை அணிந்து கொண்டு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த அந்த மாலை நேரமானது நட்சத்திரங்களின் ஜொலிப்புடன் கண்களைக் கவர்ந்தது.

இந்த நிகழ்வின் 59வது பதிப்பில் பாலிவுட் நடிகர்களான கார்த்திக் ஆர்யன் மற்றும் அனன்யா பாண்டே ஆகியோரும் கலந்து கொண்டனர், மணீஷ் பால் மற்றும் பூமி பெட்னேக்கர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.

ட்ரெண்ட்ஸ், ராக்கி ஸ்டார் மற்றும் ராபர்ட் நௌரெம் ஆகியோருடன் பாரம்பரிய உடைகளை காட்சிப்படுத்திய நம்ரதா ஜோஷிபுராவின் சேகரிப்பில் 30-மாநில வெற்றியாளர்களை உள்ளடக்கிய பல சுற்று ஃபேஷன் காட்சிகள் இந்த நிகழ்வில் இடம்பெற்றன.

ஃபெமினா மிஸ் இந்தியா யுனிவர்ஸ் 2002 & வழிகாட்டியான நேஹா தூபியா, குத்துச்சண்டை ஐகான் லைஷ்ராம் சரிதா தேவி, பிரபல நடன இயக்குனர் டெரன்ஸ் லூயிஸ், திரைப்பட இயக்குநரும் எழுத்தாளருமான ஹர்ஷவர்தன் குல்கர்னி மற்றும் ஆடை வடிவமைப்பாளர்களான ராக்கி ஸ்டார் மற்றும் நம்ரதா ஜோஷிபுரா ஆகியோர் அடங்கிய குழு வெற்றியாளர்களை தேர்வு செய்தது.

மணிப்பூர் மாநில முன்னாள் வெற்றியாளர்களான சோய்பம் காஞ்சன், ஊர்மிளா ஷகோல்செம், மரியா சானு பங்கம்பம் மற்றும் அங்கோபி சானு லௌக்ரக்பம் ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர்.

ஃபெமினா மிஸ் இந்தியா 2023 இன் இறுதிப் போட்டி மே 14 அன்று காலை 10 மணிக்கு கலர்ஸில் ஒளிபரப்பப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com