கூந்தல் வேர்களை வலுப்படுத்தும் இயற்கையின் அருமருந்து!

beauty tips
Natural beauty tips
Updated on

ரு கைப்பிடி துளசி இலை, இரண்டு ஸ்பூன் மிளகு கால் லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி ஆறிய பின் தலையில் தேய்த்து கால் மணிநேரம் ஊறவிட்டு சீயக்காய் போட்டு அலசினால் வறண்ட கூந்தல் மிருதுவாகவும். பொடுகு தொல்லை இருக்காது. இதனை புருவ முடியில் தடவினால் அடர்த்தியாக வளரும்.

தலையில் திட்டு திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்த இடங்களில் சின்ன வெங்காயத்தை 2 துண்டுகளாக நறுக்கி அங்கு தினமும் தேய்த்து வந்தால் முடிவளரும்.

கசகசா பொடி, முடி அதிமதுர பொடி இரண்டையும் சம அளவில் எடுத்து பசும்பாலில் கரைத்து தலையில் பூசி ஊறவிட்டு 5 நிமிடங்கள் கழித்து அவசி குளித்தால் பித்த நரை பரவாது முடி கொட்டுவது குறையும்.

தேங்காய் எண்ணெயில் சிறிது கருவேப்பிலை போட்டு எண்ணெயை கொதிக்கவைத்து, அறிய பின் இந்த எண்ணையை தலையில் தடவி வந்தால் இளநரைப் பிரச்னை குறையும்.

சின்ன வெங்காயத்தை பச்சையாக அரைத்து சாறு எடுத்து தலையில் எண்ணெய்போல ஊற்றி தேய்த்து அரைமணி நேரம் ஊற விட்டு குளித்தால் பேன்கள் வராது.

செம்பருத்தி இலை, துளசி இலை இரண்டையும் கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் சுத்தம் செய்த 4 புங்க காய் தோல்களை கலந்து மிக்ஸியில் விழுதாக அரைத்து இதை தலையில் தேய்த்து குளித்தால் கூந்தல் மிருதுவாகும். கூந்தலுக்கான அருமையான கண்டிஷனர் இது.

இதையும் படியுங்கள்:
வீட்டிலேயே திரிபலா பொடியை வைத்து அழகை மெருகேற்றுவது எப்படி?
beauty tips

துளசிசாறுடன், சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒருமணி நேரம் ஊறவிட்டு குளித்தால் பொடுகு, பேன் தொல்லையே வராது.

ஒரு கைப்பிடி கொழுந்து வெப்பிலை அதே அளவு துளசி இலை இரண்டையும் விழுதாக அரைத்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு குளித்தால் வாரம் இரண்டு முறை இது மாதிரி செய்தால் யேன் பிரச்னையே வராது.

புளித்த தயிரை உச்சந் தலையில் தடவி ஒருமணி நேரம் ஊற விட்டு வெதுவெதுப்பான தண்ணீரில் தலை முடியை அவசி குளித்தால் பொடுகுபோகுவதோடு, தலைமுடியும் பளபளப்பாகச் செய்யும். தயிர்.

கூந்தல் வேர்களை வலுப்படுத்தவும் ,பொடுகு தொல்லையை போக்கவும், எலுமிச்சை சாறை பஞ்சில் நனைத்து , முடியில் நல்லெண்ணெய் தடவி அதன் மேல் பஞ்சில் நனைத்த சாறை தலையில் நன்கு படும்படி 15 நிமிடம் ஊறவிட்டு தலையை அலசினால் கூந்தல் நல்ல ஆரோக்கியமாக இருக்கும் முடி உதிராது.

இதையும் படியுங்கள்:
முடி கொட்டுவதை நிறுத்தி, காடு போல வளரச் செய்யும் 5 இயற்கை ரகசியங்கள்!
beauty tips

தலைக்கு குளித்த பின் கடினமான துண்டு, அதிகசூடு அதிக துவட்டல் இவை கூந்தலை சீக்கிரமாக பாழடையச் செய்துவிடும்.

இதை கவனத்தில் கொண்டு கூந்தலை பராமரித்தால் முடி நன்றாக வளரும். கூந்தலுக்கு எந்த பிரச்னையும் வராது.

logo
Kalki Online
kalkionline.com