வறண்ட சருமம் முதல் சொத்தை நகம் வரை: உணவே மருந்தாகும் இயற்கை அழகு சிகிச்சைகள்!


Natural beauty treatments
Natural beauty treatments
Published on

சில உணவுகளை தினசரி எடுத்துக்கொள்வதன் மூலம் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு உறுப்பையும் அழகாக பராமரிக்கலாம். உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருந்தால் அழகு படுத்துவது எளிமையாக மாறிவிடும். அதற்கு நாம் சாப்பிட வேண்டிய பொருட்கள் என்ன? அது எந்தெந்த  அங்கத்தை அழகு ப்படுத்தும் என்பதை இப்பதிவில் பார்ப்போம். 

வாலிப வயதினருக்கு முகப்பரு ஒரு பிரச்னை. அதிக பழம், பச்சை காய்கறிகள் சாப்பிடுதல் இவை பருவின் பாதையை மறைக்க செய்து விடும். 

ஒரு ஸ்பூன் வெந்தயத்தை இரவில் ஊறவைத்து காலை எழுந்தவுடன் அதில் மோரை சேர்த்து குடித்துவர உதடு வெடிப்பு நீங்கி பழைய பொலிவுக்கு வந்துவிடும். தினமும்  உப்பு சேர்க்காத வெண்ணெய், கேரட், பீட்ரூட் ரோஜா இதழ்களை உதட்டில் படும்படி சாப்பிடுவதால் உதடு அழகு பெறும் . 

பழங்கள், சாலட்வகை, புரதச்சத்து நிறைந்த பருப்பு வகைகள். நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவதால் பற்கள் அழகு பெறும்.

முக அழகிற்கும் தோலின் பராமரிப்பிற்கும் பழங்கள், பழச்சாறு, தண்ணீர் நிறைய குடிக்கவேண்டும். 

தினசரி ஒன்றரை ஸ்பூன் வீதம் கஷாயம் வைத்து 10 நாட்கள் குடித்து வந்தால் விழுந்துபோன நகமும், சொத்தை விழுந்த நகமும் புதிதாக முளைக்கும். அது நக பாலிஷ் போடும் பொழுது  நகங்களில் அழகை மெருகூட்டும். 

வறண்ட சருமம் உள்ள பெண்கள் தேங்காய் பால் குடிப்பதும் சமையலில் தேங்காய் பால் சேர்ப்பதும் அவர்களின் சருமம் ஈரப்பதம் நிறைந்து பளபளக்க உதவும். இதனால் அதிக கிரீம் போட வேண்டிய அவசியம் இருக்காது. இயற்கை அழகு மிளிரும்.

நெல்லிக்காய் அளவு பசு வெண்ணையை எடுத்து அதில் 5 அல்லது 6 மிளகை வைத்து கலந்து தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் தலைமுடி உதிர்வது நிற்கும். 

இதையும் படியுங்கள்:
பளபளப்பான சருமம்... நீளமான கூந்தல்... அரிசித் தண்ணீர் தரும் 5 மேஜிக் பயன்கள்!

Natural beauty treatments

வாழைத்தண்டு, முள்ளங்கி, வெள்ளரி ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் அதிக உடல் எடை குறைந்து சீரான உடல் எடை வரும். 

உணவில் அதிக அளவு கறிவேப்பிலை துவையல், பசும் பால், வெங்காயம், கீரை, பூசணிக்காய் சேர்த்துக்கொள்ள வேகமாக நரைப்பது கட்டுப்படுவதுடனன் முடி அழகு பெறும்.

இளநரையைப் போக்க தாமரைப் பூ இரண்டை 100 மில்லி தண்ணீரில்சுட வைத்து லேசாக வற்றியதும் வடிகட்டி வைத்து இருவேளை சாப்பிடலாம். வாரத்துக்கு ஒருமுறை இப்படி செய்து வந்தால் இளநரை போயே போச்சே. இதனால் தலை அலங்காரத்தை சட்டென்று முடித்துவிடலாம். 

காலையில் எலுமிச்சை ஜூஸ் பருகினால் நேர்த்தியான மெல்லிய உடல்வாகை பெறலாம். இதனால் ரெடிமேடு மாடர்ன் டிரஸ் வாங்குவதும் போடுவதும் எளிமையாகும்.

ஜிங்க் அதிகம் உள்ள உணவுப் பொருட்களான கோதுமை மாவு, ரொட்டி, கொட்டைகள், பயறுகள், ஒயிஸ்டர்கள், கோதுமைத் தவிடு ஈரல், நண்டு போன்ற உணவுப் பொருட்களை உண்டால் தலைமுடி இரண்டாகப் பிரிவதையும் உதிர்வதையும் தடுக்கலாம். 

தினசரி உணவுக்குப் பிறகு நெல்லிக்காய் சாப்பிட்டு, அத்துடன் ஒரு சிட்டிகை கடுக்காய் பொடியையும் சாப்பிட்டு வெந்நீர் குடிக்க, எப்பொழுதும் இளமையுடன் ஜொலிக்கலாம். 

ஆப்பிள் பழத்தை நறுக்கி தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வர கண்கள் அழகு பெறும். 

சருமம் வறண்டு போனால் கொய்யா, பப்பாளி, வெள்ளரி மூன்றையும் சமஅளவு எடுத்து சாறு எடுத்து குடித்து வர சருமம் பொலிவு பெறும். 

இதையும் படியுங்கள்:
பர்பியூம் வாங்கும்போது இந்தத் தப்பை மட்டும் பண்ணாதீங்க! - எக்ஸ்பர்ட் டிப்ஸ்!

Natural beauty treatments

உடல் மெலிந்தவர்கள் தேனில் பேரிச்சம் பழத்தை ஊறவைத்து தினம் சாப்பிட்டு வந்தால் சதை பிடிக்கும். அது தேஜஸ்சை கூட்டும். 

இடை அழகு பெற பாதாம், முந்திரி, பிஸ்தா பருப்புகள், பப்பாளி, வாழைப்பழம், சப்போட்டா பழங்கள், பால், சோயா உணவுகள், கீரை, ராகி, எள், கொண்டைக்கடலை, காராமணி, முளைக்கட்டிய பயிறு, உலர்திராட்சை, பேரீட்சை, வெல்லம் சாப்பிட்டு வர இடை அழகு பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com