நேச்சுரல் ஹேர் கேர்: மினுமினுக்கும் ரகசியம்..!

Natural hair care
Natural hair care
Published on

ளபளப்பான கூந்தலுக்கு கூந்தலை நீரேற்றத்துடனும் (Hydrated), ஈரப்பதத்துடனும் (Moisturized) வைத்திருப்பது மிகவும் அவசியம். அந்த வகையில் இயற்கை மூலப்பொருட்களை (Natural hair care) பயன்படுத்தி கூந்தலை பளபளப்பாகும் இயற்கை சிகிச்சைகள் குறித்து இப்பதிவில் காண்போம் .

1.தேங்காய் எண்ணெய் எலுமிச்சை சாறு வைத்தியம்

தேங்காய் எண்ணெயுடன் சிறிதளவு எலுமிச்சை சாறை சேர்த்து நன்கு கலக்கி ,கூந்தலுக்கு தடவினால் கூந்தல் நன்கு பளபளப்பாகும். மேலும் இந்த கலவையை தலையில் தேய்க்கும் போது பொடுகு தொல்லையிலிருந்தும் விடுபடலாம்.

2. தேன் மற்றும் ரோஸ் வாட்டர் கலவை

தேன் மற்றும் ரோஸ் வாட்டரை நன்கு கலந்து பேஸ்ட் ஆக உருவாக்கி உச்சந்தலை மற்றும் கூந்தலில் மென்மையாக தடவி மசாஜ் செய்து 10-15 நிமிடங்களுக்கு பிறகு தலை முடியை வெதுவெதுப்பான நீரில் அலச முடி பளபளப்பாக மாறும் .தேனில் வெண்மையாக்கும் பண்புகள் இருப்பதால் அதிக நேரம் தலைமுடியில் வைத்திருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

3.முடி பளபளப்பிற்கு கற்றாழை ஜெல்

இயற்கையான கற்றாழை ஜெல்லை நேரடியாக தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தடவுவதன் மூலம் முடி பளபளப்பாக மாறுகிறது. கற்றாழை ஜெல்லில் உள்ள வைட்டமின் சி கூந்தலில் காணப்படும் வறட்சியை நீக்குவதோடு பொடுகு தொல்லையையும் போக்குகிறது.

4. பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெயுடன் 5 சொட்டு தேயிலை மர எண்ணெயைக் கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறை தடவினால் தலைமுடியை ஆழமாக ஈரப்பதமாக்கி, மந்தநிலையை நீக்கி முடி வளர்ச்சியை மேம்படுத்த உதவும்.

5.வாழைப்பழத்தைப் பயன்படுத்தலாம்

வாழைப்பழத்தில் தேனைச் சேர்த்து இந்த கலவையை தலைமுடியின் நீளத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் தலைமுடி ஓரளவு நேராவதோடு இயற்கையான கண்டிஷனராகவும் செயல்பட்டு முடியை பளபளப்பாக்குகிறது .

இதையும் படியுங்கள்:
50 வயதிலும் "மின்னும்" அழகு - இதோ உங்களின் ஸ்பெஷல் கைடு!
Natural hair care

6.நெல்லிக்காய் பொடி பயன்படுத்தலாம்

நெல்லிக்காய் பொடியை தேயிலைகளுடன் கலந்து, ஒரு இரும்பு பாத்திரத்தில் இரவு முழுவதும் அப்படியே வைத்து மறுநாள் இந்த கலவையை தலைமுடியில் தடவி 30 முதல் 45 நிமிடங்கள் வரை அப்படியே வைத்து பின்னர் தலைமுடியைக் கழுவினால் இழந்த பளபளப்பை பெறலாம் .வாரத்திற்கு ஒரு முறை இதைச் செய்ய முன்கூட்டியே நரைமுடி பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும்.

7. தயிர் மற்றும் முட்டை கலவை

தலைமுடி வறண்டு இருந்தால் முட்டையின் மஞ்சள் கருவையும், எண்ணெய் பசையாக இருந்தால் முட்டையின் வெள்ளை கருவையும் தடவ தலைமுடி ஆழமாக கண்டிஷனர் செய்து முன்பை விட பளபளப்பாக தோன்றும்.

8. தேங்காய் நீர் பயன்படுத்தவும்

தேங்காய் நீரில் சிறிது எலுமிச்சை சாற்றைக் கலந்து, வேர்களிலும், தலைமுடியின் முழு நீளத்திலும் வாரத்திற்கு ஒரு முறை தடவ முடி நீரேற்றமடைந்து பளபளப்படையும்.

9. ஆப்பிள் சைடர் வினிகர் பயன்படுத்தலாம்

தலைமுடி மந்தமாகிவிட்டால், ஆப்பிள் சைடர் வினிகரை தண்ணீரில் கலந்து, உச்சந்தலையில் தடவி பிறகு கழுவினால் சிறந்த உச்சந்தலை எக்ஸ்ஃபோலியேட்டராக செயல்பட்டு கூந்தலுக்கு பளபளப்பை சேர்க்கிறது.

மேற்கூறிய முறைகளை கையாள கூந்தல் இயற்கையான முறையில் வசீகரமடைந்து பளபளப்பாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com