

வெந்தயத்தை முதல் நாளிரவு தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீருடன் மருதாணி பொடி_2டேபிள் ஸ்பூன், தயிர்-1டேபிள் ஸ்பூன் கலந்து நன்கு பேஸ்ட் ஆக்கி அதை தலையில் வேர்க்காலில் தடவி சற்று ஊறியதும் தலைக்கு குளித்து வர இளநரை மறையத் தொடங்கும்.
தேங்காய் எண்ணையில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து, அதனை தலையில் தடவி மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் இளநரை கட்டுப்படும்.
கறிவேப்பிலையை மோர் கலந்து மிக்ஸியில் அரைத்து பேஸ்ட் ஆக்கி அதனை முடியின் வேர்கள் காலில் நன்கு தடவி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசி விடவும்.இதை வாரமிரு முறை செய்து வந்தால் நரைமுடி வராமல் தடுக்கலாம். இளநரை இருந்தால் மறைய ஆரம்பிக்கும்.
நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசிலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தனப்பொடி இவற்றை தலா பத்து கிராம் எடுத்து 1லி ந எண்ணையில் அல்லது தேங்காய் எண்ணெயில் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். இக்கலவையை நான்கு நாட்கள் வெயிலில் வைக்கவும். பின்பு வெள்ளை துணியில் வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில் தேய்த்து சற்று ஊறியதும் குளித்து வர இளநரை மறைந்து முடி கருப்பாக வளர ஆரம்பிக்கும்.
நெல்லிக்காயை நறுக்கி வெயிலில் காயவைத்து தே எண்ணையில் ஊறவிட்டு அந்த எண்ணையை இலேசாக சூடேற்றி தலைமுடியின் வேர்க்கால்களில் படும்படி நன்கு தேய்த்து வந்தால் நரைமுடி குறையும்.
பூந்திக்காய், வெந்தயம், வேப்பிலை, ரோஜா இதழ், ஆரஞ்சு பழத் தோல், மல்லிகைப்பூ, வெட்டிவேர், செண்பக மொட்டு, நெல்லிக்காய் சேர்த்து 100கி எடுத்து அனைத்தையும் நன்கு காயவைத்து அரைக்கவும். 100கிராம் பொடியை 200மிலி தயிரில் கலக்கவும். முதலில் தலையில் சிறிது எண்ணெய் தடவி விட்டு இந்த எண்ணையை தடவி 45நிமிடம் கழித்து அலசிவிடவும். இந்த பேக் இளநரை வராமல் தடுப்பதுடன் முடி உதிர்வையும் கட்டுப்படுத்தி கூந்தலுக்கு பளபளப்பைமும், ஆரோக்கியத்தையும் தரும்.
வேம்பாளப்பட்டையுடன், கரிசிலாங்கண்ணி பொடி, கடுக்காய் பொடி -1டீஸ்பூன்சேர்த்து தே எண்ணையில் காய்ச்சி சாறு இறங்கியதும் வடிகட்டி தலைக்கு தேய்த்து வர நல்ல மாற்றம் தெரியும். இளநரை மறைந்து முடி கருப்பாக ஆவதுடன் முடி உடைதல் ,சொரசொரப்பு இன்றி மென்மையாக, பளபளப்பாக வளரும்.
இவற்றோடு சரிவிகித உணவை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான அனைத்து வகையான சத்துக்களும் கிடைத்து முடி வளர்ச்சியோடு,உடல் நலமும் மேம்படும்.
தலைக்கு குளிக்கும்போது தரமான ஷாம்பூ போட்டு குளிப்பதுடன், கண்டிஷனர் உபயோகிக்க முடி பட்டு போல் சாஃப்ட் ஆக இருக்கும். தலையில் பொடுகு, அழுக்கின்றி சுத்தமாக வைத்துக்கொள்ள முடி வளர்ச்சி நன்றாக இருக்கும். இளநரை வராது.