வெள்ளை முடி எட்டிப்பார்க்கிறதா? இளநரையை வேரோடு கருமையாக்க இதோ ஒரு இயற்கையான வழி!

natural-hair-dye
natural-hair-dye
ஆ.நர்மதா

வணக்கம்! என்னுடைய பெயர் ஆ.நர்மதா. நான் ஒரு முதுநிலை வேதியியல் பட்டதாரி. விருதுநகர் அருகில் இருக்கும் பாளையம்பட்டி என்னும் கிராமத்தில் இருந்து எழுதி வருகிறேன். நான் பள்ளியில் படிக்கும் போது இருந்தே எனக்கு தமிழின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. தமிழின் மீது இருந்த ஆர்வத்தினால் கவிதைகள்,கட்டுரைகள், சிறுகதைகள் எழுத கற்றுக் கொண்டேன்.இந்த சமுதாய சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் என்னுடைய எழுத்துக்கள் எப்போதும் வீரியத்துடன் இருக்கும். இல்லத்தரசியாக இருந்து கொண்டு என்னுடைய எழுத்தாற்றலை படைத்து வருகிறேன்.

Updated on

ன்றைய நவீன உலகில் குழந்தைகள் முதல் இளைஞர்கள் முடியானது விரைவில் வெள்ளை நிறத்தில் மாறிவிடுகிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்? சாப்பிடும் உணவு முறை மற்றும் நவீன வாழ்க்கை முறை இதற்கு முதன்மை காரணமாக இருக்கலாம். இதனை சரி செய்ய அனைவரும் செயற்கை முறைகளை நாடுகின்றனர்.

கடைகளில் கிடைக்கும் கருஞ்சாயங்கள், ஷாம்பூ இவற்றை பயன்படுத்தும்போது அது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தி உடலுக்கு கேடு விளைவிக்கும். இதுபோன்று இல்லாமல் இயற்கையான பொருட்களைக் கொண்டு முடியை கருமைப்படுத்துவது எப்படி என்பதை பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 

மருதாணி - 200 கிராம் 

செம்பருத்தி. - 10 பூக்கள் 

கருவேப்பிலை - 250 கிராம் 

கற்றாழை - 50 கிராம் 

கரிசலாங்கண்ணி - 100 கிராம் 

வேப்பிலை - 30 கிராம்

செய்முறை: 

“மருதாணி,செம்பருத்தி, கருவேப்பிலை,  கரிசலாங்கண்ணி, வேப்பிலை” இவற்றை மேலே கூறியவாறு தேவையான அளவு எடுத்துக்கொண்டு நன்கு அலசி மிக்ஸியில் சேர்த்து மை ஆகும் வரை அரைத்துக் கொள்ளவும். பின் இதில் கற்றாழையின் தோள்களை நீக்கிவிட்டு அதன் சதைப்பகுதியை தேவையான அளவு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

இதில் நீர் சேர்க்க தேவையில்லை. கற்றாழையில் உள்ள சதை போன்ற பகுதியை இதற்கு போதுமான அளவு நீர்ச்சத்தை  கொடுக்கும். தலைய அலசும்போது இந்த பேஸ்ட்டை தலையில் முழுவதும் நன்கு தேய்த்து மசாஜ் செய்து இரண்டு மணி நேரம் அப்படியேவிடவும். பின் சீகக்காய் பயன்படுத்தி தலைய அலசி குளிக்கவேண்டும். இது இயற்கையாகவே முடியை கருமையாக்குகிறது மற்றும் இதில் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது. செயற்கையாக பயன்படுத்தும் பொருட்களைவிட இது ஆரோக்கியமானதாகவும், உடலை குளிர்ச்சியாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. வாரத்திற்கு மூன்று முறை இதனை பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
காசு செலவில்லாத அழகு: உங்கள் கிச்சன் பொருட்களே போதும்... முகம் ஜொலிக்க!
natural-hair-dye

இதன் மூலம் முடி கருமையாகவும், அடர்த்தியாகவும், மென்மையாகவும் இருக்கும். இதில் உள்ள கரிசலாங்கண்ணி, கருவேப்பிலை முடியை கருமையாக வைத்துக்கொள்ள உதவுகிறது. செம்பருத்தி பூ முடியை மென்மையாகவும்,அடர்த்தியாகவும் வளரச் செய்கிறது. கற்றாழை உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது.  வேப்பிலை பயன்படுத்தும்போது அது ஒரு ஆரோக்கியமான கிருமி நாசினியாகவும் பொடுகு போன்ற தொல்லைகளுக்கு நிவாரணமாகவும் பயன்படுகிறது.

இவ்வாறு இயற்கையான பொருட்களைக் கொண்டு நாம் தலை அலசி குளிக்கும்போது முடி பளபளவென்று ஆரோக்கியமாக இருக்கும். இதனை குழந்தைகள் முதல் இளைஞர்கள், பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம். இவ்வாறு இயற்கையாகவே  நாம் வீட்டிலேயே அரைத்து பயன்படுத்துவதன் மூலம் உடல் வெப்பநிலை குறைந்து உடல் ஆரோக்கியமானதாக இருக்கும். மேலும் இது ஒரு பாரம்பரியமான முறையாகும்.

logo
Kalki Online
kalkionline.com