உங்கள் முடி அமைப்பிற்கு ஏற்ற Natural Hair Masks!

Hair Mask
Hair Mask

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முடி அமைப்பு இருக்கும். அனைவருமே தங்கள் முடி அமைப்பினை அறிந்துக்கொண்டு அவற்றைப் பராமரிப்பது மிகவும் அவசியமாகும்.

பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் தங்கள் முடிகளைப் பராமரிப்பது அவசியம். அதுவும் இயற்கையான வழியில் பராமரித்தால், நீண்ட காலம்வரை பயனளிக்கும் என்பதோடு, எந்தவொரு பக்க விளைவுகளும் ஏற்படாது. அனைவருக்கும் ஒரே மாதிரியான முடி அமைப்பு இருக்காது. அதேபோல் சிலருக்கு பொடுகு போன்றத் தொல்லை இருக்கும். அவர்கள் மற்றவர்கள் பயன்படுத்தும் முறைகளைப் பின்பற்றுதல் கூடாது. ஏனெனில், அது மேலும் தொல்லைகளைத் தரக்கூடியதாக இருக்கும்.

உதாரணத்திற்கு, பொடுகு இல்லாதவர்களின் ஹேர் மாஸ்க்கை பொடுகு உள்ளவர்கள் பயன்படுத்தினால், அந்தப் பொடுகு மற்ற இடங்களில் பரவும். அல்லது பொடுகு முகத்தில் உதிர்ந்து பருக்கள் வர காரணமாகிவிடும். ஆகையால், அனைத்தையுமே நன்றாக விசாரித்து பயன்படுத்துவது நல்லது.

அந்தவகையில் எந்தெந்த முடி அமைப்பு கொண்டவர்கள் எந்த மாதிரியான ஹேர் மாஸ்க் போடுவது என்று பார்ப்போம்.

டேமேஜான முடி உள்ளவர்களுக்கான மாஸ்க்:

அதாவது முடி உடைதல், உதிர்தல் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இந்த ஹேர் மாஸ்க் செட்டாகும்.

தேவையான பொருட்கள்:

  • தேங்காய் எண்ணெய்: 2 டேபிள் ஸ்பூன்

  • முட்டையின் வெள்ளை கரு: 1

  • பாதாம் பால்: 5 டீஸ்பூன்

இந்த மூன்றையும் ஒன்றாகக் கலந்து கூந்தல் மற்றும் தலை முடியில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து தலைக்கு குளித்தால் முடி பிரச்சனைகள் படிபடியாக நீங்கும்.

பொடுகு உள்ளவர்களுக்கான மாஸ்க்:

தேவையான பொருட்கள்:

  • கற்றாழை ஜெல்: 4 டீஸ்பூன் ( வீட்டு கற்றாழை பயன்படுத்துவது நல்லது)

  • யூகலிப்டஸ் எண்ணெய்: 3 ட்ராப்ஸ்

இவை இரண்டையும் நன்றாக கலந்து முடியில் அப்ளே செய்யவும். ஊறவைத்த பின்னர் தலைக்கு குளிக்க வேண்டும்.

எண்ணெய் பசையுள்ள முடிக்கான மாஸ்க் :

இயற்கையாகவே சிலரின் கூந்தலில் அதிக எண்ணெய் பசை இருக்கும். அவர்கள் மேலும் ஈரப்பதத்தைக் கொடுக்கும் மாஸ்க் போட்டால் பிரச்சனைகள் வரும். ஆகையால் அவர்கள் இந்த மாஸ்க்கைப் பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் சைடர் வினிகர்: ½ கப்

எலுமிச்சை சாறு: 2 லெமன்

தேன்: 2 டீஸ்பூன்

இந்த மூன்றையும் நன்றாகக் கலந்து முடியில் தேய்க்கவும். பின்னர் சிறிது நேரம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும்.

சுருட்டை முடி உள்ளவர்களுக்கான மாஸ்க்:

இவர்களுடைய முடி சிக்கலாகாமல் இருக்கும்படியான மாஸ்க்கைப் பயன்படுத்த வேண்டும்.

இதையும் படியுங்கள்:
Carrot Hair Mask: வலிமையான கூந்தலுக்கு சிம்பிளான கேரட் ஹேர் மாஸ்க்!
Hair Mask

தேவையான பொருட்கள்:

க்ரீக் தயிர்: 1கப்

தேன்: ½ கப்

ஆலிவ் எண்ணெய்: 5 டீஸ்பூன்

இந்த பொருட்களை கலந்து தேய்த்து குளிக்க வேண்டும். மேலும் சுருட்டை முடி உள்ளவர்கள் சிகை அலங்காரம் செய்பவர்களிடம் ஆலோசனை கேட்டுக்கொள்வது நல்லது.

வறண்ட முடி உள்ளவர்கள்:

இவர்களின் முடிக்கு ஈரப்பதம் கொடுக்கும் அளவிற்கு மாஸ்க் இருக்க வேண்டும்.

தேவையான பொருட்கள்:

தேன்: ½ கப்

ஆலிவ் எண்ணெய்: 2 டீஸ்பூன்

இவை இரண்டையும் நன்றாகக் கலந்து தலை மற்றும் கூந்தலுக்கு தேய்த்து குளித்தாலே போதும், கூந்தல் அழகாகவும் ஆரோக்கியமாகவும் மாறும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com