
ஜோஜோபா ஆயில் மிக இயற்கையானது. உங்கள் தலைமுடி வறண்டதாக இருந்தாலும் அதைப்போக்கி ஈரப்பதத்தை அளித்து ஆரோக்கியமாக வைக்கக் கூடியது. ஜோஜோபா ஆயிலில் வைட்டமின் ஈ சத்து மற்றும் பி சத்துக்கள் உள்ளதால் முடியின் வேர்கள் காலை நன்கு வலுவாக்கும் கூடிய பண்பைப் பெற்றது. இதை பயன்படுத்துவதன் மூலம் முடியின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது.
ஆர்கான் ஆயில்
ஆர்கான் ஆயில் ஜோஜோபா ஆயிலை விட அடர்த்தியானது. இதில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடண்டுகளும் மற்றும் கொழுப்பு அமிலங்களும் நிறைந்துள்ளதால் இது முடிக்கு நல்ல பளபளப்பைத் தருகிறது. உங்கள் முடி உடைதல் பிரச்னை மற்றும் பொலிவற்று இருந்தாலும் மற்றும் முடியில் அரிப்பு பிரச்னை இருந்தாலும் அவைகளையெல்லாம் போக்கக் கூடியது இந்த ஆர்கான் ஆயில். மேலும் இது முடியை ஆரோக்கியமாக வைக்கக் கூடியது.
இந்த ஆயில்களை எப்படி பயன்படுத்தவது
ஜோஜோபா ஆயில் மென்மையாக உள்ளதால் தினந்தோறும் இதை பயன்படுத்தலாம். நீங்கள் ஷாம்பூவுடன் சில சொட்டுக்கள் கலந்து பயன்படுத்தலாம். ஆனால் ஆர்கான் ஆயில் அடர்த்தி மிகுந்ததாக இருப்பதால் வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ பயன்படுத்தலாம்.
உங்கள் முடி எண்ணைப்பசையோடு இருந்தால் ஜோஜோபா ஆயில் உபயோகிப்பது சிறந்தது. உங்கள் முடி மிக வறண்ட நிலையில் இருந்தால் ஆர்கான் ஆயில் பயன்படுத்துவது சிறந்தது. எந்த ஆயில் பயன்படுத்தினாலும் இதை நன்கு முடியில் மசாஜ் செய்வதன் மூலம் இரத்த ஓட்டம் மேம்பட்டு முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
முடி வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கும் Tea tree oil
இந்த ஆயில் உடன் தேங்காய் எண்ணை அல்லதுஆல்மண் ஆயில் சேர்த்து தடவலாம்.
இதன் பயன்கள்
Tea tree oil தலைமுடியில் அதிக எண்ணையை நீக்கியும், பொடுகு பிரச்னை தடுத்தும் முடியை செழிப்பாக வளரவைக்கும்
இது தலைமுடியில் அரிப்பு மற்றும் அழற்சியை பல் போக்கி வேர்க்காலில் முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது.
இதில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு உள்ளதால் தலையில் அரிப்பு மற்றும் செதில்கள் உதிர்தல் போன்றவற்றைத் தடுத்து காக்கிறது. இது தலைமுடியில் நல்ல இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
முடி பிளவு மற்றும் முடி உதிர்தலை தடுத்து முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது.