-நூர்ஜஹான், அழகுக் கலை நிபுணர் மற்றும் சித்த மருத்துவர்.
க்ளிசரின் சோப்
தேவை: க்ளிசரின் சோப் - 100 கிராம், அலோவேரா ஜெல் - 5 கிராம், தேங்காய்ப்பால் - 5 கிராம், பேப்பர் கப் - 1.
செய்முறை: சிறிதளவு சோப்பைத் துருவி எடுத்து டபுள் பாய்லரில் மெல்ட் செய்யவும். அதில் அலோவேரா ஜெல், தேங்காய்ப்பால், ஜவ்வாது போன்ற வாசனை திரவியம் ஏதேனும் சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை பேப்பர் கப்பில் ஊற்றி 2 மணி நேரம் காய வைத்து உபயோகிக்கலாம்.
தினமும் இரு வேளைகளில் இந்த சோப்பை உபயோகிக்கலாம். கருவளையம், முகப்பரு, தோய் வறட்சி போன்றவை நீங்கி, முகம் பொலிவுறும். முகத்தில் ஈரப்பதம் உண்டாகும்.
ஃபேஸ் க்ரீம்
தேவை: Bées wax
(வெள்ளை நிறத் தேன் மெழுகு) - 10 கிராம். க்ளிசரின் - 5 கிராம், பாதாம் ஆயில் - 2 கிராம், தேங்காய் எண்ணெய் - 2 கிராம், விட்டமின் ஆயில் - 3 கிராம், பப்பாளி + கேரட் ஜூஸ் - 10 மில்லி, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் - 70 மில்லி.
செய்முறை: 70 மில்லி சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் 10 மில்லி பப்பாளி+கேரட் ஜூஸினைக் கலந்து சுடவைக்கவும். நன்கு சூடானதும், மேற்குறிப்பிட்ட பொருட்களை இதே ஆர்டரில் ஒவ்வொன்றாகச் சேர்க்கவும். இதை நன்கு கிளறி, ஆறவிடவும். வெதுவெதுப்பான பதத்திற்கு வந்ததும், ப்ளெண்டர் கொண்டு க்ரீம் பதத்திற்கு ப்ளெண்ட் செய்துகொள்ளவும். இதனைத் தயாரித்த மறுநாள் முதல் உபயோகிக்கலாம்.
இதனைத் தினமும் உபயோகித்து வர, மிருதுவான சருமம், சருமப் பொலிவு எனப் பல நல்ல மாற்றங்கள் முகத்தில் உண்டாகும்.