

பாதங்களில் இருக்கும் வெடிப்புகளை தினமும் சிறிது நேரம் ஒதுக்கி பராமரித்தால் சில நாட்களில் வெடிப்புகள் நீங்கும் (cracked heels home remedies). காலும் அழகாகும். மென்மையான பாதங்கள் ஆகும்.
வெந்நீர் - எலுமிச்சை சாறு + உப்பு
ஒரு அகன்ற பாத்திரத்தில் மிதமான வெந்நீர் ஊற்றி அதில் எலுமிச்சை சாறு பிழிந்து கல் உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் உங்கள் உள்ளங்கால்களை அதில் நனையுங்கள்.
இதனால் கால் வெடிப்பின் உள்ளே எலுமிச்சை கலந்த நீரால் கண்ணுக்குத் தென்படாத கிருமிகளை அகற்றி பாதம் மென்மையாகும்.
தேங்காய் எண்ணெய் + மஞ்சள் பொடி
தேங்காய் எண்ணெயுடன் மஞ்சள் சேர்த்து குழைத்து வெடிப்பு மேல் மசாஜ் செய்து வந்தால் பாதங்கள் மிருதுவாவதுடன் வெடிப்பும் வராது.
விளக்கெண்ணெய் + கடுகு எண்ணெய் + நல்லெண்ணெய்
விளக்கெண்ணெய், கடுகு எண்ணெய், நல்லெண்ணெய் மூன்றும் தலா 2 டீஸ்பூன் சேர்த்து 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து பாதங்கள் முழுவதும் மசாஜ் செய்து பின் கழுவி வந்தால் பாதங்கள் வறண்டு நீங்கி கடினமான பாதத்தை மென்மையாக்கும்.
வேப்பிலை+ மஞ்சள் + மருதாணி இலை
வேப்பிலை, மருதாணி, மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து நைசாக அரைத்து பாதத்தில் வெடிப்பு இருக்கும் இடத்தில் தடவி விட்டு காய்ந்த பின் ஸ்கிரப் செய்யவும். வாரம் இரண்டு நாட்கள் இரவில் தடவி இதை செய்து கழுவி வந்தால் பாதவெடிப்பு நீங்கும்.
கற்றாழை + எலுமிச்சை சாறு.
கற்றாழையின் ஜெல்லை எடுத்து நைசாக அரைத்து எலுமிச்சை சாறு சேர்த்து உள்ளங்கால் முழுவதும் தடவி காயும் வரை வைத்திருந்து மிதமான நீரில் உள்ளங்காலை கழுவி விட்டு சுத்தமாக துடைத்து மாயசைரைஸ் போட்டு மசாஜ் செய்யுங்கள். இதனால் வெடிப்பு நீங்கி கால்கள் மென்மையாகிகி பளிச்சென்று இருக்கும்.
காலுறை
வெடிப்பு அதிகம் இருப்பவர்கள் காலுறை அணிந்து கொள்ளலாம் பகலிலும், இரவும் இரண்டு வேளை எலுமிச்சை சாறு சேர்த்த சுத்தமான நீரால் கழுவி பாதத்தை உலர வைத்து மாய்சரைசர் செய்வதை கடைப்பிடியுங்கள்.
வெளியில் சென்று திரும்பி வந்ததும் கால்களை நன்றாக கழுவி துடையுங்கள் இதனால் பாதவெடிப்பு குறையும்.
அரிசி மாவு + தேன்
அரிசி மாவு பாதத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி மென்மையாக இருக்கச் செய்கிறது. மூன்று ஸ்பூன் அரிசி மாவுடன், ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துசிறிது வினிகர் சேர்த்து கலக்கி பாதத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து ஸ்கிரப் செய்து கழுவவும்.
வாரம் இரண்டு முறை இதை செய்து வந்தால் பாத வெடிப்புகள் நீங்கும்.