பார்வைத்திறன் கூர்மையாக்க இயற்கையான சிகிச்சை முறைகள்!

குளிர்ச்சியான தண்ணீரில் முகம் கழுவினால்...
குளிர்ச்சியான தண்ணீரில் முகம் கழுவினால்...beminimalist.co

ழகான முகத்திற்கு கண்கள்தான் முக்கியமான  விசிட்டிங் கார்டு எனலாம். அதற்குரிய சிகிச்சையோ, மருந்துகளோ சில எளிமையான வீட்டு சிகிச்சை முறையில் செய்யலாம்.

ரத்த ஓட்டத்தின் சமநிலை சரியாக்க சில சமயங்களில் சிலருக்கு கண்களின் அடியில் வீங்கி பைகள் போல தொங்குவதற்கு முகத்தில் ரத்த ஓட்டத்தில் சமநிலை குலைவதே காரணம்.

இதற்கு கண்களைச் சுற்றியும் தண்ணீர் படுமாறு குளிர்ச்சியான தண்ணீரில் முகம் கழுவினால் முகத்தில் உள்ள ரத்தக் குழாய்கள் சுருங்கி ரத்த ஓட்டம் சீராகும். இதனால் வீக்கம் நாளடைவில் வடியும்.

ஸ்பூனால் இயல்பு தோற்றம்

ஃப்ரிட்ஜிலிருந்து சில ஐஸ் கட்டிகளை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதற்குள் இரண்டு எவர்சில்வர் ஸ்பூன்களை வைத்து ஜில்லென்று ஆனதும் அந்த ஸ்பூன்களை எடுத்து கண்களை மூடிக் கொண்டு ஸ்பூனின் உள்பக்கம் படுமாறு கவிழ்ந்து வைத்து குளிர்ச்சி குறைந்தவுடன் திரும்பவும் வைத்து நான்  கைந்து முறை செய்ய வேண்டும். இப்படி செய்து வந்தால் கண்கள் இயல்பு நிலைக்குத் திரும்பும்.

தேநீர்ப்பை  முறை

தேநீர்ப்பையாலும் இதனை சரி செய்யலாம். பாலில் நனைத்துக்குடிக்கும் மூலிகை டீ பேக்குகள் இரண்டை ஜில் தண்ணீரில் இரண்டு டீ பேக்குகளை ஊறவிட்டு ஒரு நிமிடம் ஊறியதும் சாறைப் பிழிந்து விட்டு குளிர்ச்சியோடு கண்கள் மீது ஒவ்வொரு டீ பேக்கை வைத்து எடுக்கவும். டீ பேக்கின் குளிர்ச்சி இரத்த ஓட்டத்தை இயல்பாக்கியும், அதில் உள்ள மூலிகை பொருட்கள் கண்களைச் சுற்றியுள்ள பகுதி வீங்கியிருப்பதை குணமாக்கும்.

வெள்ளரிக்காய் சிகிச்சை...
வெள்ளரிக்காய் சிகிச்சை...

வெள்ளரிக்காய் குளிர்ச்சி

வெள்ளரிக்காயை வட்ட வட்டமாக நறுக்கி ஃபிரிட்ஜில் வைத்து அரை மணி நேரம் கழித்து எடுத்து ஜில்லென ஆனதும் இரண்டு கண்களிலும் வைத்து எடுக்கவும். வெள்ளரியின் குணமும்  குளிர்ச்சியும் கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் ரத்த ஓட்டத்தை இயல்பாக்கும்.

உருளைக்கிழங்கு முறை

ரண்டு உருளைக்கிழங்கை  தோல் சீவி துண்டு துண்டாக அரிந்து சாறு எடுத்து அந்த சாற்றில் பஞ்சை நனைத்து மூடிய கண்களில் மேல் வைத்து எடுத்து  திருப்பி பஞ்சில் நனைத்து  போட்டு அரைமணி நேரம் தசைகளை நனைக்குமாறு செய்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். உருளைக்கிழங்கை பசை போல அரைத்து துணியில் கட்டி கண்கள் மீது வைத்து சிறிது நேரம் கழித்து கண்களை கழுவினால் இயல்பாகும்.

இதையும் படியுங்கள்:
நம் உடலில் க்ளூட்டாதையோன் குறைந்தால் என்ன ஆகும் தெரியுமா?
குளிர்ச்சியான தண்ணீரில் முகம் கழுவினால்...

விரலால் மஜாஜ் முறை

ம் வலது கை ஆள்காட்டி விரலால் கண்களைச் சுற்றி மஜாஜ் செய்வதுதான். கண்களில் சுற்றி வட்டமாக மிருதுவாக மென்மையாக பத்து முறை செய்ய கண்கள் இயல்பு தோற்றம் பெறும்.

தண்ணீர். தூக்கம் புத்துணர்வு போதுமான தண்ணீர் குடிக்காததும்  ஒரு முக்கிய காரணம்.  ஒழுங்காகத் தண்ணீர் குடித்தால் இயல்பாக தண்ணீரை வெளியேற்றி கண்களை இளமையாக  வைத்திருக்கும்.

நிறைவான தூக்கம் உங்கள் உடலுக்கு மட்டுமல்ல, கண்களுக்கும் அவசியம். தூங்காவிட்டாலும் கண்கள் நீர் கோர்த்து முதுமைத் தோற்றம் பெறுகிறது. நிறைவாக தூங்குங்கள். கண்களுக்கு ஓய்வு கொடுத்து இயல்பான நிலையில் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com