கெமிக்கல் வேண்டாம்... இயற்கை போதும்! முகம் ஜொலிக்க சில ரகசியங்கள்!

skin-care-tips
skin-care-tips
Published on

நம் சருமத்தை வீட்டில் இருந்தபடியே எப்படி பாதுகாக்கலாம், முகம் பொலிவு பெறவும் இயற்கை வழிகள்.

எலுமிச்சை சாறு

சருமத்தை எப்படி இயற்கையாக வெளிவரச் செய்ய எலுமிச்சை சாறு கொஞ்சம் சர்க்கரை சேர்த்து முகத்தில் தடவி பத்து நிமிடங்கள் நன்றாக சுழற்சி முறையில் தேய்த்துவிட்டு பின் இதமான குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் உங்கள் முகம் தானாகவே அழகாக பொலிவடையும்.

வெள்ளரி + எலுமிச்சை

எலுமிச்சையும் வெள்ளரியும் ஒரு சிறந்த மூலப் பொருட்கள் ஆகும். அதில் இருக்கும் சிட்ரிக் அமிலம் உங்களது சருமத்தை தெளிவாக பொலிவாக சருமத்தில் தங்கியிருக்கும் இறந்த செல்களை நீக்க உதவுகிறது. கரும்புள்ளிகளை குறைக்கவும் உதவுகிறது.

எலுமிச்சை சாறை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து இதமான நீரில் முகம் கழுவினால் முகம் பொலிவாகும். சிறிது நேரம் கழித்து வெள்ளரியை துண்டுகளாக்கி முகத்தில் வைத்து எடுத்தால் சருமம் மிருதுவாகும். இதனை தினசரி செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும் பொலிவும் அடையும்.

கடலைமாவு + மஞ்சள் தூள்

கடலை மாவுடன் மஞ்சள் தூள் அல்லது சிறிது பால், நீர் விட்டுக் கலந்து முகத்தில் தடவி உலரவிட்டு இதமான நீரில் முகம் கழுவி, பின் சுழற்சி முறையில் முகத்தை நன்கு தேய்த்து மசாஜ் செய்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.

ஓட்ஸ் + தயிர்

ஓட்ஸில் தயிர் கலந்து முகத்தில் தடவி சுழற்சி முறையில் தேய்த்து மசாஜ் செய்து முகம் கழுவி வந்தால் முகத்தில் தங்கி இருக்கும் இறந்த செல்கள் நீங்கி முகம் பொலிவு பெறும்.

இதையும் படியுங்கள்:
விலையில் இல்லை ஃபேஷன்: எலைட் லுக் தரும் நிறங்களின் ரகசியம்!
skin-care-tips

தயிர் - முட்டை வெள்ளைக்கரு

தயிரில் சிறிது முட்டையின் வெள்ளைக்கருவை கலந்து முதத்தில் மாஸ்க் மாதிரிபோட்டு 15 நிமிடம் கழித்து இதமான நீரில் முகம் கழுவினால் முகத்தில் உள்ள சுருக்கம் நீங்கி முகம் பொலிவு பெறும்.

பன்னீர்+தேன்

தேனில் பன்னீர் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து நீரில் கழுவினால் முகம் பொலிவடையும். தேனில் உள்ள ஆன்டிபயாடிக் தொற்று கிருமிகளிடம் இருந்து சருமத்தை காத்தும் பன்னீர் கலப்பதால் சருமம் பொலிவு பெறும்.

கற்றாழை

கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து நீரில் கழுவினால் முகம் பொலிவு பெறும். கற்றாழையில் உள்ள பூச்சிக்கொல்லியால் முகத்தில் உள்ள கிருமிகளை

அழிக்க உதவுகிறது. இதனால் முகப்பரு நீங்கி சருமம் பிரகாசித்து நல்ல பல பயன்களை அளிக்கிறது கற்றாழை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com