வேப்பிலை சிகிச்சை: உங்கள் சருமத்தை மாற்றி அமைக்க ஒரு எளிய வழி!

முகப்பரு மற்றும் சரும அரிப்பை வேரோடு நீக்கும் வேப்பிலையின் மகத்தான ரகசியங்கள்!
வேப்பிலை பலன்கள்|a women using neem
வேப்பிலை பலன்கள்AI image
Updated on

ங்களுக்கு  முகப்பருவா?  எண்ணை வடியும் முகமா? அரிப்பு பிரச்னையா? இவை அனைத்தையும் போக்கக்கூடியது வேப்பிலை.‌ பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது‌. வேப்பிலையில் உள்ள  நிம்பிடின் மற்றும் நிம்பின் போன்ற பொருட்கள் முகச்சிவத்தல், வீக்கம் மற்றும் அழற்சியை போக்கும் பண்புடையது.‌ மேலும் கொழுப்பு அமிலங்களும் வைட்டமின் ஏ சத்தும் இதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் சருமத்தைக் காக்கிறது.  

ஆரோக்கியமான சருமத்திற்கு வேப்பிலை பலன்கள் தரும் நன்மைகள்.

இதன் நிம்பிடின் மற்றும் நிம்பின் அழற்சியைக் குறைப்பதால் வெயில் காலத்தில் ஏற்படும் முகச்சிவத்தல், முகப்பிளவுகளை, தடுக்கிறது.‌ நீங்கள் வேப்பிலை கலந்த க்ரீம்களை பயன்படுத்துவது சிறந்தது‌.

முகத்தை வேப்பிலை நீர் கொண்டு அலசுவதால் இதன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் முகப்பருவை தடுக்கிறது. முகப் பருவிற்குக் காரணமான பாக்டீரியாவை வளரவிடாமல் தடுக்கும்‌‌. எண்ணைப் பசை சருமத்திற்கு சிறந்த தீர்வாக கருதப்படுகிறது வேப்பிலை.

வேப்பிலை பலன்கள்|neem
வேப்பிலை பலன்கள்AI image

வேப்ப எண்ணையில் ஒலிக் மற்றும் ஸ்டியரிக் போன்ற கொழுப்பு அமிலங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைக்கின்றன. இதன் லிபிட் சருமத்தின் வெளிப்புறத்தை நன்கு பாதுகாக்கும். சருமத்தை நீரேற்றத்துடன் வைக்கும். வேப்ப எண்ணை சருமத்தின் ஈரத்தன்மையை தக்க வைப்பதில் மிகுந்த பயன் அளிக்கிறது.‌ சரும ஆரோக்கியத்தையும் இது மேம்படுத்தும்‌.

நீங்கள் விலையுயர்ந்த கெமிக்கல்கள் கலந்த க்ரீம்களை நாடுவதை விட  வேப்பிலையை பயன்படுத்த  இதன் ஆன்டி ஆக்சிடண்டுகள் சுற்றுச்சூழல் மற்றும் கடும் சூரிய வெளிச்சத்தில் இருந்து பாதுகாப்பு தருகிறது.‌ இந்த ஆன்டிஆக்சிடண்டுகள் ப்ரீராடிகல்களின் சேதத்திலிருந்து காத்து முகத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கிறது.‌ இது சருமத்தின் நெகிழ்வுத் தன்மையைக் காத்து முகத்தில் கோடுகள் விழாமல் காக்கிறது. இதன் ஆன்டிஆக்சிடன்ஸ் கொலாஜனை பாதுகாக்கிறது. இளமையை இது தக்க வைக்கிறது‌.

முகப் பொலிவு குறைவதற்கு முக்கிய காரணம் எண்ணை வடியும் முகம் தான்‌. கெமிகல் கலந்த முக வாஷ், க்ரீம்களை பயன்படுத்தும் போது அவை முகத்தின் இயற்கை எண்ணையை எடுத்து விடுகிறது. ஆனால் வேப்பிலை இயற்கையான ஆஸ்ட்ரின்ஜென்டாக செயல்பட்டு  உங்கள் முகத்தில் எண்ணையை சமச்சீராக வைத்து வறண்ட சருமத்தைத் தடுக்கின்றது. இது மேலும் முகத்துளைகளை நீக்கி நாள் முழுவதும் புத்துணர்வுடன் வைக்கிறது. முகம் பொலிவாகிறது.

வேப்ப எண்ணை,வேப்பிலை வேப்பிலை பௌடர் இவற்றில் எதை பயன்படுத்துவது?

வேப்பிலைகளை அரைத்துப் பேஸ்டாக்கி  முகத்தில் தடவுவதால் முகப் பருக்கள் நீங்குவதுடன் முக அரிப்பையும் போக்குகிறது‌. வேப்பங்கொட்டையிலிருந்து எடுக்கப்படும் வேப்பெண்ணையில் நல்ல பாக்டீரியா எதிர்ப்பு வேப்பிலை மில் இருப்பதைவிட அதிகமாக உள்ளது.‌ இது முகத்தின் சருமத்தில் ஊடுருவிச் சென்று பருக்கள் மற்றும் வறண்ட தன்மையை நீக்குகின்றன. வேப்பிலை பௌடருடன் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து முகத்தில் தடவிக் கழுவ முகம் கண்ணாடி போன்று பளபளக்கும். 

இதையும் படியுங்கள்:
பார்லர் ரகசியம் லீக்.. வீட்லயே முடி மற்றும் உடலை பளபளப்பாக மாற்றும் ட்ரிக்!
வேப்பிலை பலன்கள்|a women using neem

பயன்படுத்தும் வழிமுறைகள்

வேப்பிலை பௌடருடன் சிறிது தயிர் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்துக் குழைத்து முகத்தில் தடவிக்கழுவ உங்கள் முகம் பொலிவாக்கும்.

நீங்கள் வேப்ப எண்ணையை அப்படியே பயன்படுத்த வேண்டாம். இத்துடன் சிறிது தேங்காய் எண்ணை அல்லது பாதாம் எண்ணை சொட்டுக்கள் கலந்து பயன்படுத்தவும். ‌நீங்கள் வேப்பிலை நீரில் ஊறவைத்து அந்த நீரால் முகம் கழுவ முகம் மென்மையாகும்‌.

இதையும் படியுங்கள்:
நீடா அம்பானி ஸ்டைலிஸ்ட் சொன்ன ரகசியம்.. தலைக்கு குளிக்கும்போது இந்த தப்பு பண்ணாதீங்க!
வேப்பிலை பலன்கள்|a women using neem

எந்த வித பக்க விளைவுகளும் இல்லாத இயற்கையின் ஆசீர்வாதமாக வேப்பிலையை முழுமையாக பயன்படுத்தி சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.‌

உங்கள் சருமத்தின் இயற்கையான PH சமநிலையை மீட்டெடுத்து, நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும், நச்சுக்களற்ற ஆரோக்கியத்துடனும் திகழும் சருமத்தைப் பெறுவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com