இரவில் இத மட்டும் செஞ்சா போதும்.. உங்க சருமம் ஜொலி ஜொலிக்கும்!

Night Skin Care Routine
Night Skin Care Routine

இன்றைய காலத்தில் அனைவருக்குமே தங்களது முகத்தை பளபளப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக பல ப்ராடக்டுகளை முகத்தில் பயன்படுத்துகிறார்கள். இத்தகைய சருமத்தை பாதுகாக்கும் விஷயங்கள் பெரும்பாலும் பகல் நேரங்களிலேயே செய்யப்படுகின்றன. ஆனால் இரவு நேரத்தில் நாம் நமது சருமத்தில் கவனம் செலுத்தினால், அது பல்வேறு விதமான நன்மைகளை சருமத்திற்கு வழங்கும். 

சரி வாருங்கள் இந்த பதிவில், தூங்குவதற்கு முன் நாம் அனைவருமே செய்ய வேண்டிய பெஸ்ட் Night Skin Care Routine பற்றி பார்க்கலாம். 

  • இரவில் தூங்குவதற்கு முன் முகத்தை சுத்தமாக கழுவுவது அவசியம். இதற்கு வெறும் தண்ணீரை மட்டும் பயன்படுத்தாமல், உங்கள் முகத்திற்கு ஏற்ற ஃபேஸ் வாஷ், குளிர்ந்த நீர் மற்றும் மென்மையான துணியைத் தேர்வு செய்து முகம் கழுவுங்கள். 

  • குறிப்பாக முகம் கழுவுவதற்கு முன்பாக உங்கள் கைகள் சுத்தமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் கைகளில் உள்ள கிருமிகள் மற்றும் அழுக்கு மூலமாக முகத்தில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படலாம். எனவே முகம் கழுவுவதற்கு முன் கைகளை சுத்தமாக கழுவிக் கொள்ளுங்கள். 

  • ஒருவேளை நீங்கள் அன்று மாலைதான் மேக்கப் போட்டுக்கொண்டு ஏதேனும் நிகழ்வுக்கு சென்றுவிட்டு வந்தீர்கள் என்றால், முகம் கழுவுவதற்கு முன் மேக்கப்பை முற்றிலும் அகற்ற வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுங்கள். ஏனெனில் முகம் கழுவ வெந்நீர் பயன்படுத்தினால் அது சருமத்தை சேதப்படுத்தி, வறட்சி பாதிப்பை ஏற்படுத்தலாம். 

  • அதன் பிறகு எப்போதும் போல ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி, முகத்தை லேசாக மசாஜ் செய்து சுத்தமாகக் கழுவுங்கள். குறைந்தது 30 நொடிகள்வது முகத்தை தேய்த்து, எல்லாம் அசுத்தங்களையும் நீக்க வேண்டும். அதே நேரம் தேய்க்கும் போது மென்மையாக தேய்க்கவும். மிகக் கடினமாக அழுத்தி தேய்த்தால் சருமத்தில் எரிச்சல் உண்டாகும் வாய்ப்புள்ளது. 

  • முகத்தை கழுவியதும் மென்மையான துண்டை பயன்படுத்தி மெதுவாக முகத்தில் ஒத்தி எடுங்கள். துண்டை முகத்தில் போட்டு தேய்க்க வேண்டாம். அடுத்ததாக உங்களிடம் மாய்ஸ்சரைசர் இருந்தால், அதை முகத்தில் பூசிக்கொண்டு தூங்கச் செல்லுங்கள். இது உங்கள் சருமத்தை பளபளப்பாக மாற்ற உதவும். 

இதையும் படியுங்கள்:
Stan Wawrinka: தன்னம்பிக்கை, மன உறுதி மற்றும் தைரியத்தின் அடையாளம்!
Night Skin Care Routine

இந்த இரவு நேர ரொட்டீனை நீங்கள் தினசரி செய்து வந்தால், கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் முகம் பளபளப்பாக மாற ஆரம்பிக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com