

முகப்பரு வருவதற்கு நமது தினசரி பழக்கங்கள் ஒரு காரணமாகும். பலர் குளித்த பிறகு எண்ணெய்யை தலையில் தடவுவார்கள். அப்படி செய்யக்கூடாது. குளித்த உடனேயே தடவுவதால் தலையில் உள்ள ஈரமும் காய்வதில்லை எண்ணெய்ப் பசையாலும் ஈரத்தாலும் வெளிக்காற்று அழுக்குகளும் சுலபமாய் தலையில் ஒட்டிக் கொள்ளும். இதனால் தலையில் பொடுகு ஏற்படவும் வழி பிறக்கிறது. எனவே எண்ணெயை முதலில் தடவி விட்டு சிறிது நேரம் கழித்து குளிக்கவேண்டும். சிலர் தாராளமாக எண்ணெயை அதிகமாக தடவி வைத்திருப்பார்கள்.
இதுவும் முகப்பரு தோன்றுவதற்கான ஒரு அபாய அறிகுறி அதிக எண்ணெயானது முகங்களிலும் கழுத்தின் பின்பகுதியிலும் வழியத் தொடங்கும். இப்படி வழிந்த எண்ணெயானது முகங்களிலும் கழுத்தின் பின்பகுதியில் வழிய தொடங்கும் இப்படி வழிந்த எண்ணையானது தோலின் மேல் அழுத்தமாக படிந்து வியர்வை சுரப்பிகளை அடைத்துக்கொள்ளும். எனவே எண்ணெயை அதிகமாக தடவக்கூடாது தெரியாமலேயே இப்படிப்பட்ட நமது பழக்கங்களால் தான் நாம் முகப்பருவை வரவழைத்துக் கொள்கிறோம். காலையில் எழுந்ததும் நமது கடன் முடிந்துவிட்டது என்று நினைத்து ஒரு முறை குளித்துவிட்டால் மட்டும் போதாது.
ஒரு நாளில் குறைந்தது ஐந்து முறையாவது முகத்தை நன்றாக கழுவவேண்டும். கடலை மாவு போட்டு கழுவவேண்டும். அப்போதுதான் எண்ணெய் பொருள்களும் வியர்வை நீரும் போக்கப்படும்.
ஒரு நாளைக்கு இரண்டு தடவை ஐஸை தடவி வந்தால் கூட இந்த பருக்கள் வராது. ஐஸ் தடவுவதால் முகம் அழகாகவும் வழுவழுப்பாகவும் இருக்கும்.
குளித்த பின்பும் முகம் கழுவிய பின்பும் உடம்பை துடைக்கிறீர்கள் அல்லவா அப்போது முகத்தை மட்டும் தனியே வேறொரு டவுலால் துடைக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த பழக்கம்தான் உடலின் மற்ற பாவங்களில் இருக்கும் சொரி சிரங்கு பொடுகு போன்றவற்றை முகத்தை தாக்காது. இந்த பழக்கம் முகப்பருவை வரவேற்காது.
முகப்பரு உள்ளவர்கள் முகத்தை எப்படி கழுவவேண்டும் தெரியுமா? அவர்கள் சூடான தண்ணீரையே உபயோகிக்க வேண்டும். பரு வந்த பின் அது ஆறும் வரை சோப்பை உபயோகிக்க கூடாது. கடலை மாவு போட்டு கழுவி வரலாம் கடலை மாவு பருக்களின் பக்குகளையும் எடுக்கும் குளிர்ச்சியையும் தரும் முகம் கழுவிய பிறகு காலமின்லோஷன் போடுவது நல்லது.
முகப்பருக்கள் உள்ள இடத்தை விரல்களால் அடிக்கடி தொட்டுப் பார்க்கக் கூடாது. பருக்களை முரட்டு துணியாலும் அழுத்தி தேய்க்க கூடாது. இதனால் பரு உடைந்து நீர் வெளியே வந்துவிடும். அந்த நீர் அடுத்த இடத்தில் படுவதால் பருவானது மேலும் பரவ தொடங்கும். எனவே வலியெடுக்கும்போது போரிக் ஆசிட் கரைசலை பஞ்சில் நனைத்து லேசாக ஒற்றி எடுக்கலாம். இப்படி செய்வதன் மூலம் பரு உதிர்ந்துவிடும்.
மாறாக பருவை கிள்ளி விடுவதன் மூலம் முகம் இரண்டு மடங்காக வீங்கி பேராபத்தை விளைவிக்கும். முகப்பரு உள்ளவர்கள் கிரீம்கள் பவுடர்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இவைகளில் உள்ள இரசாயன பொருட்கள் பருக்கள் மேல்பட்டதும் எதிர்வினை ஆற்றுகிறது. எனவே முகப்பரு உள்ளவர்கள் முடிந்தவரை அழகு பொருட்களை தவிர்ப்பது நல்லது.
குளிர்ச்சியான பொருட்களை சாப்பிடுவது என்பது பொதுவாக உடலுக்கு நல்லது. தினமும் காலையில் பதநீரோ அல்லது நீராகாரமோ சாப்பிட்டு வருபவர்களுக்கு பருக்கள் வருவதில்லை. புதினா சட்னி கருவேப்பிலை சட்னி பச்சை கீரைகள் அடிக்கடி சேர்த்துக்கொள்ளலாம்.
உடலில் உஷ்ணம் இருந்தாலும் பருக்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. உடலில் உஷ்ணத்தை குறைக்க வாரம் ஒரு முறையாவது எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். எண்ணெய் தேய்த்து குளிப்பதால் தோலானது குளிர்ச்சி பெறும் செம்பருத்தி பூ குப்பைமேனி இலை கீழாநெல்லி இலை ஆகியவை கிடைத்தால் அவற்றை எண்ணையில் போட்டு காய்ச்சி அதை தேய்த்து குளிக்கலாம்.
உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள சிறு நெல்லிக்காயை சாப்பிடலாம். உணவில் கொழுப்பு சத்து அதிகம் சேராமலும் இனிப்பு பண்டங்களை அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் இருந்தாலே முகப்பருக்கள் வருவது கட்டுப்பட்டுவிடும்.