அழகு நிலையம் வேண்டாம்! பட்டுப் போன்ற கூந்தலுக்கு வீட்டிலேயே தயாரிக்கும் ரகசிய ஹேர் ஸ்ப்ரே!

Hair care spray
Hair care spray
Published on

பாட்டி வைக்கும் வெந்தயக் குழம்பிலும், குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய பீட்சாவிலும் பொதுவாக ஒரு விஷயம் இருக்கிறது. உங்கள் முடிவளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் இரண்டிலும் இருக்கிறது. ஒன்று வெந்தயம் இன்னொன்று பீட்சாவில் பிளேவருக்காக சேர்க்கப்படும் ரோஸ்மேரி.

ரோஸ்மேரி நன்றாக வாசனையோடு இருப்பது மட்டுமில்லாமல் carnosic acid என்ற இயற்கையான கெமிக்கல் இதில் இருக்கிறது. இந்த கெமிக்கல் தூங்கி கொண்டிருக்கும் முடியின் Hair follicles-ஐ தட்டி எழுப்பக்கூடியது என்பது ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. 2015 ல் செய்த ஆராய்ச்சியில் முடி வளர்ச்சிக்கு அதிகம் உதவும் Minoxidil மருந்துக்கு நிகரான இயற்கையான சத்துக்கள் இந்த ரோஸ்மேரி எண்ணெய்யில் உள்ளது என்று கண்டுப்பிடித்துள்ளனர்.

வெந்தயத்தில் இயற்கையாக Nicotinic acid என்ற கெமிக்கல் இருக்கிறது. இது வேறொன்றும் இல்லை வைட்டமின் B3 தான். முடிகளுக்கு ஒரு Personal trainer என்றால் அது வைட்டமின் B3 தான். மேலும் வெந்தயத்தில் 23 சதவீதம் புரதம் உள்ளது. நம் முடிகளும் Keratin என்ற புரதத்தால் ஆனது. பண்டைய எகிப்திய பாப்பிரஸ் வெந்தயத்தை முடிக்கு பயன்படுத்தியதற்கு குறிப்புகள் உள்ளன.

வெந்தயம் மற்றும் ரோஸ்மேரிக்கு Anti fungal மற்றும் Anti inflammatory பண்புகள் உண்டு. முடிகளில் சொரியாசிஸ் வருவது, நிறைய எண்ணெய் உற்பத்தியாகி திட்டுத்திட்டாக அழுக்குகள் உருவாவது இதையெல்லாம் குறைக்கக்கூடியது தான் இந்த Anti fungal மற்றும் Anti inflammatory பண்புகள் ஆகும்.

தினமும் தலைமுடிக்கு (Hair care) பயன்படுத்த ஹேர் ஸ்பிரே செய்வது எப்படி?

முதலில் ரோஸ்மேரி 10 கிராம் அத்துடன் 2 தேக்கரண்டி வெந்தயம் எடுத்துக் கொள்ளவும். இப்போது அடுப்பில் பாத்திரம் வைத்து 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். இப்போது இதில் வைத்திருக்கும் வெந்தயம் மற்றும் ரோஸ்மேரி இலைகளை சேர்த்துக் கொள்ளவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை லோ பிளேமில் வைத்துவிட்டு 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். நன்றாக சுண்டியதும் அதை ஆறவிட்டு வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

இப்போது இந்த நீரை ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி பயன்படுத்திக் கொள்ளலாம். இதை தலைக்கு குளித்த பிறகு ஸ்பிரே செய்து மசாஜ் செய்துவிட வேண்டும். என்ன தான் ஹேர் ஸ்பிரே நன்றாக இருக்கிறது என்றாலும் அலர்ஜி டெஸ்ட் செய்ய வேண்டியது முக்கியம். இதை முடிகளுக்கு உபயோகப்படுத்துவதற்கு முன்பு கைகளுக்கு பின்னாடியோ அல்லது காதுகளுக்கு பின்னாடியோ பயன்படுத்தி பாருங்கள். அடுத்த 24 மணி நேரத்தில் அரிப்பு, சிவந்து போதல் போன்றவை ஏற்படவில்லை என்றால் எந்த பிரச்னையும் இல்லை என்று அர்த்தம்.

இதையும் படியுங்கள்:
பால் குடித்தால் முகப்பரு வருமா? ஆய்வுகள் சொல்வது என்ன?
Hair care spray

இதை எண்ணெய்யாக பயன்படுத்த நினைத்தால், ஒரு கப் தேங்காய் எண்ணெய்யில் 3 தேக்கரண்டி ரோஸ்மேரி, 2 தேக்கரண்டி வெந்தயம் எடுத்துக் கொள்ளவும். முதலில் லோ பிளேமில் தேங்காய் எண்ணெய்யை சூடுப்படுத்திக் கொள்ளவும். இதில் ரோஸ்மேரி மற்றும் வெந்தயத்தை சேர்த்து எண்ணெய் நிறம் மாறியதும் எடுத்துவிட வேண்டும். இந்த எண்ணெய்யை இரவு பயன்படுத்துவது நல்லது. இந்த ஹேர் ஸ்பிரே மற்றும் ஆயிலை தொடர்த்து பயன்படுத்தி வந்தால் முடிவளர்ச்சியில் நல்ல பலன் கிடைப்பதை கண்கூடாக காணலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com