

வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாகி மிக்ஸியில் போட்டு கூழாக்க வேண்டும். அதை ப்ரிஜ்ஜில் வைத்து ஜில்லாகவேண்டும். தினமும் குளிப்பதற்கு முன்னால் இந்த விழுதை உடல் முழுவதும் பூசி குளித்தால் சருமம் புதுப்பொலிவுடன் ஜொலிக்கும்.
பாதாம் பருப்பு பிஸ்தா பருப்பு இரண்டையும் ஊறவைத்து அதனுடன் வெள்ளரி விதை ஓட்ஸ் மாவு சந்தனம் படிகாரம் போன்றவற்றை கலந்து பூசி வர இயற்கையாக ப்ளீச் கிடைக்கும் இதை பூசுவதால் சருமத்தில் பக்க விளைவுகள் ஏற்படாது.
ஆரஞ்சுபழச்சாற்றில் பஞ்சை நனைத்து எடுத்து முகம் முழுவதும் லேசாக தடவ வேண்டும் அப்படியே பதினைந்து நிமிடங்கள் இருக்க வேண்டும் அப்புறம் முகத்தை பயத்த மாவினால் தேய்த்து கழுவினால் முகம் பளபளவென இருக்கும்.
சர்க்கரையுடன் ஒரு ஸ்பூன் சுத்தமான கிளிசரின் சேர்த்து நுரைத்து வரும்படி குழைய வைக்க வேண்டும் இந்த கலவையை உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் தடவி கால் மணி நேரம் ஊறவிட வேண்டும் பிறகு வெதுவெதுப்பான நீரால் அலம்பினால் உள்ளங்கை உள்ளங்கால்கள் மென்மையாக இருக்கும்.
காய்ந்த எலுமிச்சையை துண்டாக்கி தோல்களை மிக்ஸியில் போட்டு தூளாக்கிக்கொள்ள வேண்டும் முகம் கழுவுவதற்கு பத்து நிமிடம் முன்பு இந்த பொடியை சிறிதளவு எடுத்து பாலுடன் கலந்து ஊறிய பின் முகம் கழுவினால் பளிச்சென்று இருக்கும்.
கஸ்தூரி மஞ்சள் சந்தனம் ஆவாரம் பூ ரோஜா மொட்டு வேப்பிலை எலுமிச்சம்பழத் தோல்இவைகளை காயவைத்து அரைத்துக்கொள்ள வேண்டும் இதில் பசும்பால் விட்டு கழுத்தில் தடவி சிறிது நேரம் ஊறிய பிறகு தடவிவிட வேண்டும் இதை தினமும் தேய்த்து வந்தால் சருமம் கருமை நீங்கி அழகு பெறும்.
தேங்காய் எண்ணெயில் மஞ்சள் தூளை போட்டு குழைத்து உடலில் தடவி ஊறிய பின் வெந்நீரில் மிதமான சூட்டு வெந்நீரில் குளித்து வந்தால் சருமம் பொன்னிறமாகவும் மென்மையாகவும் பட்டுப்போலவும் இருக்கும்.
படுக்கும்போது சந்தனத்தைக் குழைத்து முகத்தில் தடவி காலையில் எழுந்திருக்கும்போது பன்னீரால் முகத்தை கழுவவேண்டும் எண்ணெய் பசை உள்ள முகம் பளபளப்புடன் இருக்கும் தவிர பருக்களும் வராது.
அரைக்கரண்டி பாதாம் எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி கடலை மாவு சிறிதளவு பால் மற்றும் ஐந்து சொட்டு எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி உலர்ந்த பின் வெந்நீரில் முகம் கழுவி கடைசியாக குளிர்ந்த நீரை எடுத்து முகத்தில் கழுவினால் முகம் பளிச்சென்று மின்னும்.
ரோஜா இதழ்களை முதல் நாள் இரவே தண்ணீரில் போட்டு ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த தண்ணீரை சருமத்தில் தடவி சிறிது நேரம் ஊறிய பிறகு குளித்து வந்தால் சருமம் பட்டு போன்று மென்மையாக இருக்கும்.
குளிர்காலங்களில் மேல் சருமம் வறண்டுபோய் கோடு கோடாக் காட்சி அளித்தால் சோப்பு உபயோகிக்காமல் குளிக்கும் முன்பு தேங்காய் எண்ணெய் தடவி பயத்த மாவு அல்லது கடலை மாவு தேய்த்து குளித்தால் சரும வறட்சி போய்விடும்.
கடலை மாவு மஞ்சள் தூள் இவற்றை சரியான விகிதத்தில் கலந்து தேய்த்து குளிப்பதற்கு அதை மட்டும் உபயோகித்தால் சருமம் மிருதுவாகும் பளபளப்பாகவும் இருக்கும்.