எண்ணெய் பசை சருமம்: இயற்கை தரும் இனிய தீர்வுகள்!

beauty tips
Oily skin - beauty tips
Published on

முகத்தில் வடியும் எண்ணெயை, சல்பேட் இல்லாத கிளென்சர் கொண்டு கழுவலாம்.

ரோஸ் வாட்டர் பயன்படுத்தி முகத்தை கழுவி, சருமத்தின் பி.ஹெச் அளவை பராமரிக்கலாம்.

ளிமண்ணை மாஸ்க்  செய்து வாரத்திற்கு ஒருமுறை முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவினால் அதிகப்படியான எண்ணெய் சருமத்தில் தங்குவதை குறைக்கலாம்.

யில் இல்லாத, சருமத்தில் துளைகளை ஏற்படுத்தாத வகையில் பிரத்யேகமாக தயாரிக்கப்படுதோல் பராமரிப்பு ஹைட்ரேஷன் அல்லது அழகுசாதன க்ரீம்களை பயன்படுத்தலாம்.

ருமத்தில் உள்ள இறந்த சருமத்தை அகற்ற எக்ஸ்போலியேசனை பயன்படுத்துவதால் இறந்த செல்களை நீக்குவதுடன், இது சருமத்தில் உள்ள துளைகளை மூட உதவும்.

டீ ட்ரீ எண்ணெயில், இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு தன்மை இருப்பதால், சருமத்தில் உள்ள எண்ணெய் பிசுபிசுப்பை கட்டுப்படுத்த உதவுவதுடன், மற்ற பாதிப்புகளை தடுக்க உதவுகிறது.

வீட்டில் கிடைக்கும் எளிமையான பொருட்களை கொண்டு கலவை தயாரித்து ஹோம்மேட் பேஸ் மாஸ்க் செய்து சருமத்தில் தடவலாம். 

இதையும் படியுங்கள்:
நெல்லிக்காய்: ஆரோக்கியத்தின் ரகசியம், அழகின் பொக்கிஷம்!
beauty tips

யிர், எலுமிச்சை சாறு மற்றும் தேனை கலந்து சருமத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து முகம் கழுவினால், எண்ணெயை உறிஞ்சுவதுடன், சருமத்தில் உள்ள துளைகளை அடைக்க உதவும்.

திகப்படியான எண்ணெய் வழிவதை தடுக்க, ஆயில் இல்லா மேக்கப் / ஆயில் இல்லா அழுகு சாதனப் பொருட்களை பயன்படுத்தவும்.

காய்கறிகள், பழங்கள் மற்றும் ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த ஆரோக்கியமான சரிவிகித உணவுகளை எடுத்து கொள்வதால், சருமத்தில் எண்ணெய் வழிவதை கட்டுப்படுத்தலாம்.

திகளவில் குடிநீரை அருந்துவதால்,  சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்கலாம். எனவே இது அதிகளவில் எண்ணெய் வழிவதை தடுக்க உதவும்.

-செளமியா சுப்ரமணியன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com