சருமத்திற்கு நிறத்தையும், அழகையும் அள்ளித்தரும் வெங்காயத் தோல் டீ!

சருமத்திற்கு நிறத்தையும், அழகையும் அள்ளித்தரும் வெங்காயத் தோல் டீ!

பொதுவாக அனைவரும் வெங்காயம் உரித்து விட்டு தோலை வெளியே எறிவது தான் வழக்கம். ஆனால் அவை சருமத்திற்கு தேவையான அத்தனை நன்மைகளையும் கொண்டது என்ற ரகசியம் தெரிந்தால் யாரும் தோலைத் தூக்கி எறிய மாட்டார்கள். காய்கறிகளை விட ஏராளமான சத்துக்களை உள்ளடக்கியதே இந்த வெங்காயத் தோல்கள்.

வெங்காயத் தோல்களில் உள்ள நன்மைகள்;

தில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடன்ட்டுகள் உடலை பாதிக்கும் பேக்டீரியாக்களை எதிர்த்துப் போராடுகின்றன. உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. கொழுப்பை கரைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியைத் தந்து உடலுக்கு ஆற்றலையும் தருகிறது.

கடுமையான வெயிலில் வெளியில் செல்லும் போது, புற ஊதாக்கதிர்கள் தோலிற்கு பாதிப்பை உண்டாக்கி, கருமை நிறத்தையும் சுருக்கங்களையும் ஏற்படுத்துகிறது. ஆனால் வெங்காயத்தோல் டீயைக் குடிப்பதால், தோலை மென்மையாகவும் சுருக்கங்கள் இன்றியும் பாதுகாக்கிறது. மேலும் தோலுக்கு பளபளப்பான தோற்றம் தந்து, நிறத்தையும் வெளுக்கச் செய்கிறது.

வெங்காயத்தோல் டீயை தயாரிக்கும் விதம்

கைப்பிடி அளவு வெங்காயத் தோல்களை சேகரித்து அவற்றை தண்ணீரில் நன்றாக அலசிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இரண்டு லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் சுத்தம் செய்த வெங்காயத்தோலை போடவும். நன்றாக கொதிக்க விடவும். அடுப்பை சிம்மில் 15 நிமிடங்கள் வரை வைக்க வேண்டும். பின்பு இந்த  நீரை  வடிகட்டி இதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்,  நான்கு துளி எலுமிச்சை சாறு, சிறிதளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலந்து குடிக்கவும். தொடர்ந்து இந்த டீயை குடித்து வர, விரைவில் தேகம் பொலிவு பெறும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com