பனிக்காலத்தில் உள்ளங்கை மற்றும் கை விரல்கள் பராமரிப்பு!

கை விரல்கள்
கை விரல்கள் pixabay.com

பொதுவாக பனிக்காலத்தில் மிகவும் வறண்ட வானிலை நிலவுகிறது. காற்றில் நிலவும் குறைந்த அளவு ஈரப்பதம் நம் உடலில் உள்ள தண்ணீரை வேகமாக உறிஞ்சுகிறது அதனால் கைகளும் கால்களும் உடலும் மிகவும் வறண்டு விடுகின்றன. உள்ளங்கைகளும் விரல் நுனிகளும், விரல்களும் தோல் உரிந்து மிகவும் வறட்சியாக காட்சி அளிக்கும். மேலும் நாம் உபயோகிக்கும்  ரசாயனம் கலந்த  ஹேண்ட் வாஷ்கள், சோப்புகள், பாத்திரம் தேய்க்கும் லிக்விடுகள் டிஷ் போன்றவை கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதை நடைமுறை வாழ்க்கையில் எப்படி தவிர்ப்பது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

உள்ளங்கை மற்றும் கை விரல்களைப் பராமரிப்பது எப்படி?

துணி துவைக்க சோப்பை பயன்படுத்தாமல் பவுடரை பயன்படுத்தலாம்.  துணிகளை ஊற வைத்து பத்து நிமிடங்கள் கழித்து துவைத்து விடலாம். நீண்ட நேரம் சோப் நுரையில் கைகள் இருப்பதை தவிர்க்க வேண்டும்.

கை கழுவ உபயோகப்படுத்தும் லிக்விட் சோப்பில் ஐந்து மடங்கு தண்ணீர் கலந்து தான் உபயோகிக்க வேண்டும். நிறைய பேர் அதை குறைந்த அளவு தண்ணீர் அல்லது  தண்ணீர் கலக்காமல்  அப்படியே உபயோகிக்கும் வழக்கம் கொண்டிருக்கின்றனர். இது இவர்கள் கைவிரல்களையே அரித்துவிடும். லிக்விட் சோப்பிற்கு பதிலாக உடலுக்கு குளிக்கும் சோப்பு சிறியதாகி விட்டால் அதை கை கழுவ உபயோகப்படுத்தினாலே போதும்.

உள்ளங்கை பராமரிப்பு
உள்ளங்கை பராமரிப்புwww.freepik.com

பாத்திரம் தேய்க்க சோப்பு அல்லது லிக்விட் தேவையில்லை. சாம்பல் அல்லது பவுடர் போதும். அதிலும் சிறிது நீர் சேர்த்துக் கொண்டு பாத்திரம் தேய்க்கலாம் பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் பிரஷ்களில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். கம்பி பிரஷ் அல்லது துளைகள் உள்ள பிரஷ்கள் பயன்படுத்தினால் கைகளும், விரல்களும் பாதிப்படையும். பாத்திரம் தேய்க்கும் பிரஷ் மென்மையானதாக ஸ்பான்ச் வைத்ததாக இருக்க வேண்டும்.  இரண்டடுக்கு உள்ள ஸ்பாஞ்ச் வைத்த பிரஷ்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும். கைகளின் புறம் அந்த ஸ்பான்ஜ் இருக்க வேண்டும். கடினமான பகுதி பாத்திரத்தின் மேல் படுமாறு வைத்து உபயோகிக்க வேண்டும். பாத்திரம் தேய்க்கும் முன்பு கைகளில் தேங்காய் எண்ணெய் தடவிக் கொண்டு அதன் பின்பு தேய்த்தால்  கை விரல்கள் மற்றும் உள்ளங்கைகள் உறிந்து போவதைத் தடுக்கலாம். 

இதையும் படியுங்கள்:
மழைக்காலத்தில் மின் விபத்தைத் தவிர்க்க சில யோசனைகள்!
கை விரல்கள்

வீடு துடைக்கும் போது நிறைய பெண்கள் செய்யும் பெரும் தவறு. மாப்பை கைகளால் பிழிவதுதான். தரை துடைக்க பயன்படுத்தப்படும் ரசாயனம் கலந்த தரை துடைப்பான்களில் மாப்பை முக்கி எடுத்த பின்பு அதை கைகளால் பிழியும் போது கை விரல்களும் உள்ளங்கைகளும் மிகுந்த பாதிப்படையும். தற்போது மாப்பை அந்த குச்சியிலேயே வைத்துப் பிழியுமாறு உள்ள மாடல்கள் கிடைக்கிறது. அதைப் பயன்படுத்தலாம். எந்தக் காரணம் கொண்டும் கைகளால் மட்டும் மாப்பை பிழிந்து விடக்கூடாது. சிறிது கல் உபபு சேர்த்து துணி துவைக்கும் பவுடரையே சிறிதளவு நீர்க்க கரைத்துக் கொண்டு அதிலேயே வீடு துடைத்தால் போதுமானது.

வெந்நீரில் குளிப்பவர்கள் மிகவும் சூடான, கொதிக்கும் நீரில் குளிக்க கூடாது. இளம் சூடான தண்ணீரில் குளிப்பது தான் நல்லது. பனிக்காலத்தில் குளிர்சாதனத்தை பயன்படுத்தாமல்  மின்விசிறியை பயன்படுத்தலாம். இரவில் கைகளுக்கு மாய்ஸ்ரைசர் பயன்படுத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com