
நன்கு பராமரிக்கப்பட்ட 'பளிச்' பாதங்கள் பெண்களின் தன்னம்பிக்கையை சரேலென உயர்த்தும். வெண்புறா இறகு பாதங்கள் பெற இதோ சில டிப்ஸ்:
* பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை டீ.வி. பார்த்துக்கொண்டே செய்யலாம்!
ஒரு அகலமான பிளாஸ்டிக் டப்பில், முழங்கால் மூழ்கும் அளவுக்கு வெந்நீர் நிரப்பி, அதில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு, 1 டீஸ்பூன் பாதாம் ஆயில் போட்டு, இரண்டு பாதங்களையும் வைத்துக்கொள்ளவும். கால்களுக்கு நல்ல ஓய்வு கிடைப்பதோடு, இறந்த சரும செல்கள் உதிர்ந்து, பாதங்களில் இயற்கையான ஈரப்பதம் உருவாகும்.