
இந்த இதழில் கணுக்கால் முதல் முழங்கால் வரையான அழகுப் பராமரிப்பு டிப்ஸ்களைத் தந்துள்ளேன். முயன்று பாருங்களேன்!
* ஜீன்ஸ், சுரிதார், ஸ்கர்ட் என எவ்வித மாடர்ன் டிரஸ் அணிந்தாலும், கால்களின் ஷேப் அழகாக இருந்தால், நளினமானத் தோற்றம் பளிச்சிடும். அதற்கு டீன்ஏஜ் பெண்கள், வீட்டில் சும்மா இருக்கும்போது 'Toe walk' செய்யவேண்டும். அதாவது வழுக்காத தரைமீது கால் விரல்களை மட்டுமே ஊன்றி, கெண்டைக்கால் சதையை இலேசாக 'ஸ்ட்ரெச்' செய்தபடி நடந்தால், ஸ்லிம்மான கால்கள் அமையும்.
* இஸ்லாமியர்கள் தொழுகையில் அமர்வதுபோல, முழந்தாளிட்டு அமர்ந்து, தலையால் தரையைத் தொடும் ஆசனத்துக்கு 'வஜ்ராசனம்' என்று பெயர். இதை முறைப்படி செய்து வந்தாலும் அழகிய கால்களைப் பெறலாம்.