
பெண்கள் கர்ப்பமானதும் அவர்களுடைய உடலில் நிறைய மாற்றங்கள் நேருவது இயற்கை. குறிப்பாக வயிறு பெரிதாகப் பெரிதாக, அடிவயிறு, தொடைகளில் நமைச்சல் எடுக்கும். சொரிந்துவிட்டால், கோடுகள் விழுந்துவிடும். பிரசவத்துக்குப் பின் கேட்கவே வேண்டாம். சருமம் தொய்ந்து வரிவரியாகத் தழும்புகள் காணப்படும். இதற்கு நீங்கள் நமது பாட்டிக் கால அழகுக் குறிப்பை ஃபாலோ செய்வதுதான் நல்லது... நம்பகமானது!
செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் அரை கப், பூசு மஞ்சள் தூள் அரை கப் எடுத்துக் கலந்து, வயிறு, தொடைகளில் பூசி, சூடான வெந்நீர் விட்டுக் குளிக்க வேண்டும். (சீயக்காய்த் தூள் போட வேண்டாம்). நமைச்சல் எடுக்காது. தழும்புகள் மறைய ஆரம்பிக்கும். கூடவே, வயிற்றிலுள்ள ரத்தக் கசடுகள் பூரணமாக வெளியாகி, பெரும் வயிறு தழைய ஆரம்பிக்கும்.