
* பெண் குழந்தைகள் வயதுக்கு வரும் பருவத்தில் வாரம் ஒரு முறையாவது உளுத்தம்பருப்பை சிவக்க வறுத்து பனைவெல்லம் - நெய் கலந்து உருண்டை பிடித்துச் சாப்பிட தரவேண்டும். அப்போது இறுக்கமான இடுப்பு அமையும் டீனேஜைத் தாண்டிவிட்ட மற்ற பெண்கள் அடிக்கடி உளுத்தம் கஞ்சி, உளுத்தம் பருப்பு பச்சடி (டாங்கர் பச்சடி) செய்து சாப்பிட, இடுப்பு வலுவாகும்.
* சில பெண்களுக்கு இடுப்பில் டயர்டயராக மடிப்பு விழுந்திருக்கும். இவர்கள் வாழைத்தண்டு ஜூஸுக்கு 'ஹாய்' சொல்லி அருந்தினால், இடுப்பு 'சிக்' என்று ஆகும். குறிப்பாக பிரசவித்த இளம் பெண்கள், உணவுக்குப் பிறகு நிச்சயம் தாம்பூலம் போட்டுக்கொள்ள வேண்டும். வெற்றிலைப் பாக்கு சாப்பிட்டால் பற்கள் கறையாகிவிடும் என்ற பயமிருந்தால், நான்கு வெற்றிலையை அரைத்து அந்த ஜூஸில், வெல்லப்பாகு சேர்த்து அருந்தலாம். இதனால் உடம்புக்குத் தேவையான கால்ஷியம் சேரும். வயிறு உப்புசம் ஏற்படாது. உணவும் செரிமானமாகும்.