
பெண்மையின் ஆகச் சிறந்த உறுப்பு - மார்பகம். பூரித்த முன் அழகு இருந்தால் எந்தப் பெண்ணுக்கும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
* டீனேஜ் ப்ரா, டி-ஷர்ட் ப்ரா, ஸ்போர்ட்ஸ் ப்ரா, சீம்லெஸ் ப்ரா என தற்போது விதவிதமாகக் கிடைக்கின்றன. இரவு தூங்கும் நேரம் தவிர்த்து, மற்ற நேரங்களில் தரமான பொருத்தமான ப்ரேஸியர் அணிவதை மஸ்ட் ஆக்கிக்கொண்டால் மார்பகம் தளராது இருக்கும்.
* கூடுதல் எடை மற்றும் வயதின் காரணமாக மார்புப் பகுதியில் சுருக்கமும் தொய்வும் ஏற்படுவது சகஜம்தான். இதற்கு அருமையான பேக் ஒன்றை சொல்கிறேன்.
ஜவ்வரிசி, கோதுமை, பார்லி மூன்றையும் சம அளவில் எடுத்து வெயிலில் உலர்த்தி மிஷினில் மாவாக அரைக்கவும். இதை வெந்நீரில் கலந்து சூடு பொறுக்கும் அளவுக்குக் குழைத்து, இடுப்பிலிருந்து கழுத்துவரைப் பூசவும். கைகளை நீட்டி ஸ்ட்ரெச் செய்தபடி படுத்து ரிலாக்ஸ் செய்யவும். அரை மணி நேரம் கழித்துக் குளிக்கவும்.