
* உங்களுடைய கண்ணும் மூக்கும் எவ்வளவு நேர்த்தியாக இருந்தாலும் கறுத்த உதடும், கோணல் மாணலான பற்களும் அமைந்துவிட்டால், முக லட்சணமே மாறிவிடுமே! சிறு வயது முதலே உதடு-வாய்-பற்களின் பராமரிப்பு மிக மிக அவசியம்.
* கறுத்த, வெடித்த உதடுகளுக்கு உடல் சூடும், உள் வறட்சியுமே முக்கியக் காரணம். அதனால் நிறைய தண்ணீர் குடிக்கணும். குளிர்ச்சியைத் தரக்கூடிய காய்கறி, கீரை, பழங்களைச் சாப்பிடணும். தினமும் சுத்தமான நெய்யை ஒரு துளி எடுத்து மூன்று-நான்கு தடவை உதடுகளில் தடவி வர, மென்மையான உதடுகள் அமையும்.
நான்கைந்து உலர் திராட்சையை நசுக்கி உதடுகளில் தடவி வந்தால் உதடுகள் மினுமினுப்பாக வசீகரிக்கும்.
பீட்ரூட் சாறை காட்டன் பட்ஸில் தோய்த்துப் பூசி வந்தாலும், உதடுகள் இயற்கையான சிவப்பழகு பெறும்.
தினமும் படுக்கும்போது, ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உதடுகளில் தடவினால், காய்ந்து வெடிக்காதிருக்கும்.