
ஒரு பெண்ணின் முழு அழகும் முகத்தில் தெரியும் ; அந்த முகத்தின் முழு அழகும் கண்களில்தான் தெரியும். கண்ணழகி ஆக என்ன செய்யலாம்?
* ஆலிவ் ஆயில் + விளக்கெண்ணெய் எடுத்து, புள்ளிப் புள்ளியாக புருவம் 'ஷேப்'பிலேயே வைத்துத் தடவி வர, அடர்த்தியான, 'வில்' போன்ற வளைந்த புருவங்கள் காண்போர் மனத்தைக் கவரும்.
* நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் கரிசலாங்கண்ணித் தைலம், மல்லிப்பூ தைலத்தைத் தடவி வந்தாலும் கண் இமை, புருவ முடிகள் நீண்டு அழகாக வளரும்.
* இந்தக் காலத்து இளம் பெண்கள் நிறைய படிக்கிறார்கள். கம்ப்யூட்டரில் வேலை செய்கிறார்கள். எனவே இவர்கள் கண்கள் வறண்டு டயர்டாகி விடும். கைப்பிடி அளவு குண்டுமல்லிப் பூவை, வெந்நீரில் போட்டு, தட்டால் மூடிவிடவும். நன்கு ஆறியதும் பூவைக் கசக்கி, வடிகட்டி, அந்த நீரால் கண்களைக் கழுவி வர, கண்கள் ஃப்ரெஷ்ஷாகப் பளபளக்கும்.