
டீனேஜ் பெண்கள் நகத்தை முகத்துக்குத் கொண்டு போகவே கூடாது.
அடிக்கடி குளிர்ந்த நீரால் (சோப் உபயோகிக்காமல்) முகம் அலம்பணும்.
இனிப்பு, மசாலா பொருள்களைச் சேர்க்கக்கூடாது.
இளநீரைக் குடித்து விட்டு, அதன் வழுக்கையை அரைத்து முகத்தில் பூசி வர, சருமம் குளிர்ச்சியாக, மிருதுவாக இருக்கும்.
சம்பங்கிப் பூவை அரைத்துப் பூசினால், தொல்லை தரும் முகப்பரு மாயமாய் மறைந்து போகும்.
இரவில் படுக்கப் போகும்போது, வெள்ளைப் பூண்டு விழுதை பிளாக்ஹெட்ஸ் மீது தடவி வந்தால், அவை மறைந்துவிடும் என்பதோடு தழும்பும் காணாமல் போகும்.