
பட்டுப் போன்ற பளபளக்கும் கூந்தலுக்குச் சொந்தக்காரி ஆகணுமா? உங்களுக்கான எளிய டிப்ஸ் இதோ:
இளம் தலைமுறையினரிடையே ஊட்டச்சத்து பற்றாக்குறை, ஜெனிடிக் பிரச்னைகள், இரும்புச் சத்து குறைபாடுகளால் இளநரை, தலைமுடி உதிர்தல், பொடுகு, முடியில் பிளவு போன்ற பல பிரச்னைகள் உண்டாகின்றன.
இரும்புச் சத்துள்ள உணவு அதிக அளவில் சாப்பிட்டால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். இளநரையும் காணாமல் போகும்!
இளநரையைத் தவிர்க்க:
நல்லெண்ணெய்-300 மி.லி, பெரிய நெல்லிக்காய்-100 கிராம், மருதாணி, கறிவேப்பிலை தலா 1 கப், ஒன்றிரண்டாக உடைத்த பிஞ்சு கடுக்காய்-25 கிராம்.
நெல்லிக்காய், கறிவேப்பிலை, மருதாணியை அரைக்கவும். நல்லெண்ணெய் சூடானதும் அரைத்த விழுதைப் போட்டு அடுப்பை 'சிம்'மில் வைத்து பச்சை நிறம் இருக்கும்போதே இறக்கவும். மறுநாளும் இதேபோல் 'சிம்'மில் வைத்து 'சடசடப்பு' அடங்கியதும் ஆறவைத்து வடிகட்டி வாரம் இருமுறை தலையில் தேய்த்து ஊறவிட்டு குளிக்கவும்.