முகப்பரு, கருவளையம் மறைந்து முகம் மிளிர... கசகசாவை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!

வறண்ட சருமம், பொடுகு மற்றும் கரும்புள்ளிகளை வீட்டில் உள்ள கசகசா கொண்டு எளிதாகப் போக்கும் முறைகள்.
கசகசா
கசகசா Gemini image
Updated on

வீட்டில் எளிதாகக் கிடைக்கும் கசகசாவை அழகு பராமரிப்பில் பல்வேறு முறையில் பயன்படுத்தலாம். பாலில் ஊறவைத்து செய்யும் ஃபேஸ் பேக் முகத்திற்கு உடனடி பொலிவு தர, சர்க்கரை, எலுமிச்சை சேர்த்த ஸ்க்ரப் கரும்புள்ளிகளை அகற்றுகிறது. தயிர், தேன், கஸ்தூரி மஞ்சள், சந்தனப் பொடி சேர்க்கை முகப்பரு, வடுக்கள் குறைக்கிறது. வெந்தயம், தேங்காய்ப் பால், கடலைமாவு, ரோஸ் வாட்டர் சேர்த்து முடி, உடல், கண் சுற்று கருவளையம் பராமரிக்கலாம்.

கசகசாவில் (Poppy seeds) உள்ள இயற்கை எண்ணெய்கள், துத்தநாகம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, பொலிவை அதிகரிக்க உதவுகின்றன. கசகசாவை வைத்துச் செய்யக்கூடிய எட்டு எளிய அழகு குறிப்புகள் இதோ:

1. சரும பொலிவு தரும் ஃபேஸ் பேக்:

1 ஸ்பூன் கசகசாவைப் பாலில் 2 மணி நேரம் ஊறவைத்து, விழுதாக அரைத்துக்கொள்ளவும். இதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், வறட்சி நீங்கி முகம் உடனடி பொலிவு பெறும்.

2. கரும்புள்ளிகள் நீக்கும் இயற்கை ஸ்க்ரப்:

அரைத்த கசகசா விழுதுடன் அரை ஸ்பூன் சர்க்கரை மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு கலக்கவும். மூக்கு மற்றும் கன்னப் பகுதிகளில் மென்மையாகத் தேய்த்துக் கழுவினால் இறந்துபோன செல்கள் மற்றும் கரும்புள்ளிகள் (Blackheads) அகலும்.

3. சரும ஈரப்பதமூட்டி:

கசகசாவைத் தயிருடன் சேர்த்து அரைத்துச் சிறிதளவு தேன் கலக்கவும். இதை முகத்தில் தடவி உலரவிட்டு அலசினால், வறண்ட சருமம் மென்மையாகவும் மிருதுவாகவும் மாறும்.

கசகசா
கசகசாGemini image

4. முகப்பரு மற்றும் வடுக்கள் நீங்க:

கசகசா விழுதுடன் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் மற்றும் சந்தனப் பொடி கலக்கவும். இந்தக் கலவையை பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால், பருக்களால் ஏற்படும் வீக்கம் குறைந்து தழும்புகள் மறையும்.

5. பொடுகு நீக்கும் ஹேர் பேக்:

கசகசா மற்றும் வெந்தயத்தைச் சமஅளவு எடுத்துத் தயிரில் ஊறவைத்து அரைத்துக்கொள்ளவும். இவற்றை தலைமுடியில் தேய்த்து 30 நிமிடங்கள் ஊறவைத்து அலசினால், பொடுகு மற்றும் தலைமுடி அரிப்பு நீங்கும்.

இதையும் படியுங்கள்:
முக சுருக்கம் முதல் கருவளையம் வரை: கோதுமை முளைப்பகுதி தரும் 8 அசத்தல் அழகு குறிப்புகள்!
கசகசா

6. முடி வளர்ச்சியைத்தூண்டும் பேக்:

கசகசாவைத் தேங்காய்ப் பாலில் ஊறவைத்து விழுதாக அரைக்கவும். இந்த விழுதை உச்சந்தலையில் நன்றாகத் தேய்த்து ஊறவைத்துக் குளித்தால், மயிர்க்கால்கள் பலமடைந்து முடிகொட்டுவது நிற்கும்.

7. உடலை மிளிர வைக்கும் 'பாடி ஸ்க்ரப்':

கசகசா விழுது, கடலைமாவு மற்றும் பாலேடு (Milk cream) ஆகியவற்றை ஒன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையை குளிப்பதற்கு முன் உடல் முழுவதும் தேய்த்துக் குளித்தால், உடல் சருமம் மிருதுவாகி இயற்கை மேனி பொலிவு கிடைக்கும்.

8. கண்களைச் சுற்றியுள்ள கரு வளையம் குறைய:

கசகசாவை ரோஸ் வாட்டரில் ஊறவைத்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். கண்களைச் சுற்றி மென்மையாகப் பூசி 10 நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த நீரால் கழுவினால், கண் சோர்வு மற்றும் கரு வளையம் (Dark circles) படிப்படியாகக் குறையும்.

இதையும் படியுங்கள்:
தென்னம்பூவின் அற்புத பலன்கள்: முகப்பரு முதல் சுருக்கம் வரை தீர்க்கும் 8 இயற்கை அழகு குறிப்புகள்!
கசகசா

கசகசா சாதாரணமாக எல்லோர் வீடுகளிலும் புழங்கும் பொருள். வீட்டில் இருக்கும் இதைப் பற்றி இப்படியெல்லாம் அழகுப் படுத்திக் கொள்ளலாம் என்று தெரிந்து வைத்துக்கொண்டால், எப்பொழுதும் குறைந்த செலவில் நிறைவான அழகு குறிப்புகளை தேர்ந்தெடுத்து சமயத்துக்கு தக்கபடி பயன்படுத்தி அழகுடன் மிளிரலாம். இதைப் படிப்பதால் கசகசாவின் அழகு குறிப்புகள் பற்றிய முழுமையை தெரிந்துக் கொள்ளலாம்.

கசகசாவில் உள்ள இயற்கை எண்ணெய்கள் மற்றும் துத்தநாகம் மூலம் செலவில்லாமல் வீட்டிலேயே பளபளப்பான சருமத்தையும் ஆரோக்கியமான கூந்தலையும் பெறலாம்.

logo
Kalki Online
kalkionline.com