கர்ப்பகால சருமப் பிரச்சனைகளைப் போக்க சில டிப்ஸ்!

Pregnant Lady
Pregnancy Skin Issue Tips

கர்ப்ப காலம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிகவும் அழகான தருணமாகும். இருப்பினும் இது பெண்களுக்கு சில சவால்கள் மற்றும் கவலைகளையும் ஏற்படுத்துகிறது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், பல்வேறு தோல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இச்சமயத்தில் நீங்கள் சரும பிரச்சனைகளை எதிர்கொண்டால் அவற்றை நிர்வகிப்பதற்கும் நிவர்த்தி செய்வதற்கும் ஏற்ற சில உதவிக் குறிப்புகளை இப்பதிவில் காணலாம். 

முகப்பரு: ஹார்மோன் மாற்றங்கள் கர்ப்ப காலத்தில் முகப்பருக்களைத் தூண்டும். முகப்பருவை நிர்வகிப்பதற்கு உங்கள் முகத்தை தினமும் இரண்டு முறை நன்றாகக் கழுவும். குறிப்பாக சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க மாய்ஸ்சரைசர் பயன்படுத்தவும். 

Stretch Marks: கர்ப்ப காலத்தில் குறிப்பாக வயிறு, மார்பகங்கள் மற்றும் தொடைகளில் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் ஏற்படுவது சகஜம். அவற்றை முற்றிலுமாக தவிர்ப்பது கடினம் என்றாலும், விட்டமின் ஈ அல்லது கோகோ வெண்ணெய் நிறைந்த கிரீம்களை சருமத்தில் தேய்ப்பதன் மூலமாக அவற்றைக் குறைக்க முடியும். மேலும், கர்ப்ப காலத்தில் நீரேற்றத்துடன் இருந்து ஆரோக்கியமான எடை அதிகரிப்பைப் பராமரிக்கவும். 

Melasma: இதை கர்ப்ப முகமூடி என்பார்கள். அதாவது சிலருக்கு முகத்தில் கருமைகள் உண்டாகும். இதைத் தவிர்ப்பதற்கு அதிக SPF அளவு கொண்ட சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது. இது உங்களை சூரிய ஒளியின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும். வெயிலில் செல்லும்போது குடை பயன்படுத்துங்கள். சூரிய ஒளி நேரடியாக மேலே படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். 

வறண்ட சருமம்: ஹார்மோன் மாற்றங்கள் கர்ப்ப காலத்தில் தோல் வரட்சி மற்றும் அரிப்புக்கு வழிவகுக்கும். மென்மையான மற்றும் நறுமணம் இல்லாத மாய்ஸ்சரைசரை தவறாமல் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கலாம். சூடான நீரில் குளிப்பதைத் தவிர்க்கவும் ஏனெனில் அவை உங்களது சருமத்தின் ஈரப்பதத்தை மேலும் அகற்றும். 

சிலந்தி நரம்புகள்: கர்ப்ப காலத்தில் இரத்த அளவு அதிகரிப்பதால் சிலந்தி நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கும். எனவே நீண்ட நேரம் நிற்பதையோ அல்லது உட்காருவதையோ தவிர்க்கவும். ஓய்வெடுக்கும்போது உங்கள் கால்களை உயர்த்தவும். கால்களுக்கு ஆதரவாக சாக்ஸ் அணிந்து கொள்ளுங்கள். வழக்கமான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான எடையைப் பராமரிப்பது இத்தகைய நரம்புகளின் தோற்றத்தைக் குறைக்க உதவும். 

Chloasma: குளோஸ்மா என்பது மார்பகங்கள், அக்குள் மற்றும் உள் தொடைகள் போன்ற பகுதிகளில் தோல் கருமையாக இருப்பதைக் குறிப்பதாகும். கர்ப்ப காலத்தில் இது மிகவும் சாதாரணமான ஒன்றுதான். எனவே சுவாசிக்கக் கூடிய ஆடைகளை அணிவதால், அவை மேலும் கருமையாவதைத் தடுக்கலாம். 

இதையும் படியுங்கள்:
யாரெல்லாம் பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாம், குடிக்கக் கூடாது? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 
Pregnant Lady

மேலே, குறிப்பிட்டுள்ள பிரச்சினைகள் எல்லா கர்ப்பிணிகளுக்கும் ஏற்படும் என சொல்ல முடியாது. இது குறித்த மேற்கொண்ட ஆலோசனையைப் பெற சுகாதார வல்லுநர் அல்லது தோல் மருத்துவரை அணுகுவது முக்கியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com