கண்களை 'பொன்னைப் போல்' பாதுகாக்க...இரவு தூங்கும் முன் செய்ய வேண்டிய முக்கியமான ஒரு செயல்!

eye care tips
Protect your eyes 'like gold'.
Published on

ண்களை பொறுத்தவரை புருவம் தீட்டினாலும் , கண்மையிட்டாலும் இயற்கை அழகு மிக முக்கியம். கண்களின் ஆரோக்கியம்தான் கண்களின் அழகைப் பேணிக்காப்பதில் முன்னோடி . கண்களை எப்படி எல்லாம் பாதுகாக்க வேண்டும் என்பதை இப்பதிவில் காண்போம்.

வெளியில் சென்று வரும்பொழுது அதிக தூசுகள் பறப்பதால் கண்களுக்கான அலர்ஜி ஏற்படுகிறது. அதனால் கண்கள் சிவப்பாகும். சிவந்த கண்களை எப்போதும் கசக்கி கொண்டிருக்க வேண்டும்போல் தோன்றுவது அப்பொழுதுதான். இதனால் கண்ணில் இருந்து நீர் கொட்டுவது நடக்கும் .இதெல்லாம் கண்களில் ஏற்படும் அலர்ஜி நோயின் வெளிப்பாடு.

இதனால் எப்போதுமே பெண்கள் வெளியே போய்விட்டு வந்தால் உடனே கண்களையும், முகத்தையும் சுத்தமான நீரால் கழுவ வேண்டும். அதனால் கண்களில் விழுந்த தூசுகளை அப்புறப்படுத்தி விடலாம். கண்களில் துகள்கள் விழுந்தால் கண்களை கசக்கவே கூடாது. சிலர் நன்றாக உறங்காததாலும் கண் சிவப்பாக இருப்பதுண்டு. ஏழு எட்டு மணி நேரம் தூங்கும் பொழுது கண்களை அடைத்து வைத்திருப்பதால் தேவையான அளவு ஈரத்தன்மை கண்களுக்கு கிடைக்கும். இதனால் சிவப்பு நிறம் மாறி இயல்பான நிலைமைக்கு திரும்புவதை பார்க்க முடியும். தூக்கம் குறையும் போது சரியான அளவு ஈரத்தன்மை கண்களுக்கு கிடைக்காமல் போகும் போதுதான் வறட்சி ஏற்பட்டு கண்கள் சிவந்து காட்சியளிக்கிறது. ஆதலால் கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டியது அவசியம். மற்றும் சிலருக்கு காண்டாக்ட் லென்ஸ் புதிதாக பொருத்தினாலும் அது ஒத்துக்கொள்ளும் வரை கண்கள் சிவக்கும். பின் சரியாகிவிடும்.

இதையும் படியுங்கள்:
சருமம் முதல் கூந்தல் வரை... இயற்கையாக அழகு பெற சில எளிய டிப்ஸ்!
eye care tips

வைரஸ், பாக்டீரியா மூலமாக கண் நோய்கள் ஏற்படும். இது கண்களில் இருந்து சீழும் வெளிவந்தபடி இருக்கும். இதற்கு டாக்டரை பார்ப்பதே சிறந்தது.

அடிக்கடி மேக்கப் சாதனங்களை பயன்படுத்துகிறவர்களுக்கு சில நேரங்களில் காலையில் எழுந்து வரும்பொழுதே கண்கள் சிவந்து காணப்படும். அப்படிப்பட்டவர்கள் தங்கள் கண் இமைப்புருவங்களை இரவு தூங்கச் செல்வதற்கு முன்பாக கொதித்து ஆறிய நீரால் இமைப்புருவங்களை கழுவவேண்டும். அதுபோல் செய்து வந்தால் அதில் இருக்கும் பொடித்துகள்கள் நீக்கப்பட்டு கண்கள் சுத்தமாகி சிவப்பு மாறிவிடும்.

எம்பிராய்டரி வேலை செய்பவர்கள், கம்ப்யூட்டரில் வேலை பார்க்கும் பெண்கள் இடை இடையே கண்களை அடைத்து ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். கண்களுக்கு ஓய்வு மிகவும் தேவை. தொடர்ந்து அதிகநேரம் கண்களுக்கு வேலை கொடுக்கக்கூடாது. அப்படி வேலை செய்யும் சூழ்நிலை இருந்தால் சிறிது நேரம் ஜன்னல் வழியாக வெளிப்பகுதியை பார்த்து மரங்களை, பூஞ்செடிகளை பார்த்து பார்வையில் ஓரளவு அமைதியை ஏற்படுத்திக் கொண்டால் கண்பார்வை மங்காமல் இருக்கும்.

படுத்துக்கொண்டே படிப்பது, போதிய வெளிச்சம் இல்லாத சூழ்நிலையில் புக் படிப்பது, நேரடியாக வெளிச்சம் கண்ணில்படும் விதத்தில் படிப்பது, பயணத்தின் பொழுது படிப்பது, உடலின் எல்லா பகுதிகளும் ஓய்வெடுத்துக் கொள்ளும் பொழுது கண்களுக்கு மட்டும் வேலை கொடுத்தால் இது போன்ற கண் சோர்வு ஏற்படும். ஆதலால் கண்களுக்கு சோர்வு ஏற்படும்போது கண்களை நன்றாக மூடி அமைதியாய் உட்கார்ந்து இருந்து, பிறகு வேலைகளை கவனிக்கலாம். கண் இமைகளின் மீது ஓர் ஈரத்துணியை வைத்து சிறிது நேரம் ஒத்தி எடுத்தால் கண்கள் குளிர்ச்சி பெற்று சோர்வும் நீங்கும். வெள்ளரிக்காயை அரிந்து கண்களின் மீது வைத்தால் கண்ணிற்கு குளிர்ச்சியும், பிரகாசமும் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
அழகை அளிக்கும் லிப்ஸ்டிக்: மறைந்திருக்கும் ஆரோக்கிய ஆபத்துகள்!
eye care tips

உடல் சூட்டினால் ஏற்படும் கண் எரிச்சல் மற்றும் கண் சிவப்புக்கு கருஞ்சீரகத்தில் நல்லெண்ணெய் சேர்த்து புகை வரும்படி காய்ச்சி அந்த எண்ணையை கண்ணின் மேலும், கண்ணைச் சுற்றியும் தேய்த்துக் கழுவினால் கண் எரிச்சலும், சிவப்பும் மாறும். இதுபோல் எளிமையான முயற்சிகளை கையாண்டு கண்ணை பொன்னைப் போல் காப்போமாக!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com