மழைக் காலம் வந்தாச்சு... என்ன மாதிரி ட்ரஸ், காலணிகள் போடலாம் தெரிஞ்சுக்கோங்க!

மழைக் காலம் வந்தாச்சு... என்ன மாதிரி ட்ரஸ், காலணிகள் போடலாம் தெரிஞ்சுக்கோங்க!

ருடத்திற்கு 4 காலங்கள் வரும். அந்தந்த காலங்களுக்கு ஏற்றவாறு நமது உடல்நிலையும் மாறும். அதற்கேற்ப நாம் நம் ஆடைகளை மாற்றி கொள்வதே சிறந்ததாகும். அப்போது தான் அந்தந்த பருவ காலங்களை நம் உடல் ஆற்றல் எதிர்கொள்ள முடியும். குளிர்காலம் வந்தால் நன்றாக டைட்டாக இருக்கும் ஆடைகளை அணிய வேண்டும். வெயில் காலம் என்றால் லேசான ட்ரஸ், காட்டன் ஆடைகளை அணிய வேண்டும். அதே போன்று தற்போது மழைக் காலம் வந்துவிட்டது. இந்த காலத்திற்கேற்ப நாம் எந்த மாதிரி ஆடை அணியலாம், காலணிகள் போடலாம் என பார்க்கலாம்.

மழைக்காலம் வந்தாலே நமக்கு குளிரும் உடன் வந்துவிடும். ஒரு பக்கம் சளி, காய்ச்சல் மறுபக்கம் சாலை எங்கும் தண்ணீர் அதில் நடந்து செல்வதற்குள் போதும் போதும் என்றே ஆகிவிடும்.

மழை பெய்தால் உங்கள் ஆடைகள் ஈரம் மட்டுமல்ல, சீக்கிரம் அழுக்காகிவிடும் அபாயமும் இருப்பதால், மழைக்காலத்தின் போது ஸ்டைலாக உடை அணிவது கொஞ்சம் சிக்கலானது தான். ஆனால் மழைக் காலத்தில் அணிய பொருத்தமான துணிகள், அதன் வண்ணங்கள் மற்றும் துணி மெட்டீரியல்களை மாற்றி உங்களுக்கு சொல்கிறோம்.

என்ன கலர் ஆடை சிறந்தது?

ழைக் காலத்தில் வெளியில் செல்லும்போது சேறு, மண், படும் வாய்ப்புகள் அதிகம் இருக்கும் அதனால் உங்கள் உடைகளின் நிறமும் முக்கியமானது. கருப்பு, பிரவுன், பழுப்பு, சிவப்பு, பச்சை போன்ற நிறங்கள் அழுக்கு பட்டாலும் அதிகம் வெளியில் தெரியாமல் பார்த்துக் கொள்ளும்.

மஞ்சள், நீலம், இளஞ்சிவப்பு போன்ற பிற பாப் வண்ணங்கள் உங்கள் தோற்றத்தை பிரகாசமாகவும், புத்துணர்ச்சியுடனும், துடிப்பாகவும் காட்ட உதவும். அதே நேரம் வெள்ளை மற்றும் வெளிர் வண்ணங்களை அணிவதைத் தவிர்க்கவும், ஏனெனில் மழையின் போது அவை அழுக்கு மற்றும் வெளிப்படையானதாக மாறும் அபாயம் அதிகம்.

என்ன வகை துணி சிறந்தது?

மழைக் காலத்தில் உடைகள் நனைவதை தவிர்ப்பது சாத்தியம் இல்லாத விஷயம். ஈரப்பதத்திலிருந்து பாதுகாப்பாக இருக்க எளிதில் காயக்கூடிய மெல்லிய துணியை அணியுங்கள். சரியான வண்ணங்களைத் தேர்ந்தெடுப்பத்தோடு, அணிவதற்கு பொருத்தமான துணி மெடீரியலைத் தீர்மானிப்பது முக்கியம்.

என்ன காலணி போடலாம்?

தோல், மெல்லிய தோல், கேன்வாஸ் அல்லது மழையால் நனையக்கூடிய வேறு எந்தப் பொருட்களாலும் செய்யப்பட்ட காலணிகளை அணிவதைத் தவிர்க்கவும். குதிகால் மூடும் படியான ஸ்னீக்கர்களை அணிவது சரியான தேர்வாக இருக்கும். அதே போல தண்ணீர் புகாத பூட்ஸ் அணிவதும் நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com