அழகைக் கூட்ட உதவுமா அரிசி வடித்த கஞ்சி?

Rice drained porridge
Rice drained porridgeImg Credit: Pinterest
Published on

பொதுவாக நாம் அனைவருக்கும் முகத்தை அழகுப்படுத்திக் கொள்வதில் ஒரு அலாதியான ஆர்வம் உண்டு. அவ்வாறு அழகுபடுத்திக் கொள்வதற்கு பெரும்பாலும் அழகு நிலையங்களையே நாட வேண்டிய தேவை உள்ளது. ஆனால் அழகு நிலையங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து முகத்தை எவ்வாறு அழகுப்படுத்த முடியும்? என்பதை  இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நம் அன்றாட சமையல் பழக்க வழக்கங்களில் முக்கிய உணவாக இருக்கக்கூடிய சாப்பாடு வடித்த கஞ்சியை பயன்படுத்தி நம் முகத்தை அழகாக மாற்ற முடியும். அரிசி வடித்த கஞ்சியில் விட்டமின் பி1, பி2, அமினோ ஆசிட், பி காம்ப்ளக்ஸ்  போன்ற பல்வேறு சத்துக்கள் உள்ளன. அரிசி வடித்த கஞ்சியை ஒருநாள் அப்படியே வைத்திருந்து மறுநாள் அந்த புளித்த கஞ்சியுடன் இரண்டு ஸ்பூன் காய்ச்சாத பால் மற்றும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில்  மாஸ்க் போன்று அப்ளை செய்து 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து ஈரத் துணியால் துடைத்து எடுத்தால் முகம் பளபளப்பாக இருக்கும். இந்த மாஸ்க் போடும்போது இரண்டு முதல் மூன்று கோட்டிங்  போடுவது நல்லது.

இந்த ஃபேஸ் மாஸ்க்கை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வரும் போது முகத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்படுவதோடு கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவையும் நாளடைவில் மறைவதற்கு வாய்ப்பு உண்டு. மேலும் முகம் பளபளப்பாகவும் மென்மையாகவும் மாறும். கழுத்துப் பகுதியில்  இருக்கக்கூடிய கருமையான கோடு போன்ற பகுதிகளும், வாய் பகுதியை சுற்றியுள்ள கருமை நிறத்தையும் இந்த வடித்த கஞ்சியை பயன்படுத்துவதன் மூலம் சரி செய்ய முடியும்.

வடித்த கஞ்சி இரண்டு ஸ்பூன், கற்றாழை ஜெல்லி இரண்டு ஸ்பூன் கலந்து  முகத்தில் மாஸ்க் போன்று போட்டு 20 நிமிடங்கள் கழித்து ஈரத் துணியால் துடைத்து எடுக்கும் போது முகம்  பளபளப்பாக மாறும்.

வடித்த கஞ்சி இரண்டு ஸ்பூன் அதனோடு பச்சரிசி மாவு 2 ஸ்பூன் சேர்த்து நன்றாக குழைத்து மாஸ்க் போன்று முகத்தில் அப்ளை செய்து 25 நிமிடங்கள் கழித்து சுத்தமான நீரில் கழுவும் போது முகம்  பளபளப்பாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
Janhvi kapoor beauty tips: ஜான்வி கபூரின் அழகின் ரகசியம் இதுதான்!
Rice drained porridge

அதேபோன்று அரிசி கழுவிய தண்ணீரை இரண்டு மணி நேரம் அப்படியே வைத்திருந்து அதில் சிறிதளவு எடுத்து அதனோடு ரோஸ் வாட்டர் மற்றும் கடலை மாவு சேர்த்து நன்கு கலந்து முகத்தில் பேஸ்ட் போல் அப்ளை செய்தால் முகம் பளபளப்பாக மாறுவதோடு இறந்த செல்கள் நீக்கப்பட்டு கரும்புள்ளிகள் வருவது தடுக்கப்படுகிறது.

இந்த பேஸ்டை முகத்தில் அப்ளை செய்வதற்கு முன் கைகளில் சிறு பகுதியில் தடவி ஏதேனும் அலர்ஜி போன்று அரிப்புகள் எதுவும் ஏற்படுகிறதா என்று பரிசோதனை செய்துவிட்டு அதன் பிறகு  முகத்திற்கு தடவுவது மிகவும் நல்லது. ஏனெனில்  ஒவ்வொரு உடலமைப்பும்  ஒவ்வொரு விதமான பண்புகளைப் பெற்று இருப்பதால் நேரடியாக முகத்தில் அப்ளை செய்வதற்கு முன்பு பரிசோதனை செய்து  பார்த்துக் கொள்வது  தேவையில்லாத சிறு தொந்தரவுகளில் இருந்து தற்காத்துக் கொள்ள உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com