அளவற்ற பயன்கள் தரும் அரிசி களைந்த நீர்!

Hair care
அரிசி கழுவிய நீரில்...Image credit - pixabay.com
Published on

ரிசி கழுவிய நீரில் கார்போஹைட்ரேட்டுகள், அமினோ அமிலங்கள், ஆன்டி ஆக்சிடண்டுகள், தாதுக்கள், வைட்டமின்- பி மற்றும் வைட்டமின் இ போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

தலை முடிக்கு ஷாம்பூ பயன்படுத்திய பின் அரிசி களைந்த தண்ணீர் கொண்டு அலசினால், முடிக்கு வலிமையும், இயற்கையான பொலிவும் கிடைப்பதுடன் கூந்தல் பளபளப்புக்கும் துணை புரிகின்றது.

அரிசி கழுவிய நீர், அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவுகிறது, முகத்தில்  எண்ணெய் வழியும் சருமம் கொண்ட நபர்களுக்கு இது நன்மை பயக்கும்.

உடல் வெப்பநிலையை சீராக்க நீங்கள் இதைப் பயன்படுத்தலாம். கோடைகாலத்தில், உடலில் அதிக நீரிழப்பு ஏற்படும். அப்போது அரிசி தண்ணீரை உட்கொள்வது உடலை குளிர்விக்க ஒரு சிறந்த வழியாகும்.

பாகற்காய், சுண்டைக் காய் போன்ற கசப்புச் சுவை கொண்ட காய் கறிகளை அரிசி களைந்த நீரில் சில மணி நேரம் ஊற வைத்து பிறகு சமைத்தால், அவற்றின் கசப்பு சுவை குறைந்து ருசியாக இருக்கும்.

கிழங்கு வகைகளை அரிசி கழுவிய நீரில் வேகவைத்தால், சீக்கிரம் வெந்து விடும்.

கருணைக் கிழங்கு, சேனைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு போன்றவற்றை இந்த நீரில் ஊற வைத்து சமைத்தால், அவற்றின் அரிப்புத் தன்மை நீங்கி விடும்.

அரிசி கழுவிய நீரை வீணாக கிச்சன் சிங்க்கில் கொட்டாமல், அருகிலுள்ள கோசாலையில் உள்ள பசு மாடுகளுக்கோ, அல்லது தெருவில் சுற்றித் திரியும் மாடுகளுக்கோ பருகத் தரலாம். புண்ணியம் கிட்டும்.

அரிசி கழுவிய நீர்...
அரிசி கழுவிய நீர்...Image credit - pixabay.com

தூய்மையான பருத்தித் துணியை அரிசி நீரில் நனைத்து, அதை முகத்தின் மீது சிறிது நேரம் மென்மையாக தேய்த்தால், சருமத் துளைகள் மறைந்து சர்மம் பொலிவு பெறும்.

குளிக்கும்போது சிறிது அரிசி கழுவிய நீரை உங்கள் குளியலில் சேர்க்கலாம். இது அன்றைய மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் போக்கும் தன்மை கொண்டுள்ளது. மேலும் உங்களை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும்.

இதையும் படியுங்கள்:
கோடை வெப்பத்தைத் தணிக்கும் அருமருந்து வெள்ளரிக்காய்!
Hair care

அரிசி கழுவிய தண்ணீருடன், கொஞ்சம் சாதாரண தண்ணீரை சேர்த்து குழந்தைகளை குளிப்பாட்ட பயன்படுத்தலாம். இது அவர்களுக்கு சரும நோய்கள் வராமல் தடுப்பதுடன் நல்ல தூக்கத்தையும் கொடுக்கும்.

தேங்காய் எண்ணெய், ரோஸ் எண்ணெய் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுடன், சிறிது அரிசி நீரைக் கலந்து தடவும்போது, சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள் நீங்கும். இளமைப் பொலிவு அதிகரிக்கும்.

அரிசி களைந்த நீரில் துருப்பிடித்த இரும்புப் பொருட்களை, சில மணி நேரங்கள் ஊற வைத்து எடுத்தால், துரு நீங்கிவிடும்.

அரிசி களைந்த நீர் செடிகளுக்கு நல்ல உரமாக பயன்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com