தக்காளி முதல் ரோஸ் வாட்டர் வரை முகப்பொலிவை கூட்டும் ரகசியங்கள்!

கிரீம்களின் பக்கவிளைவுகளைத் தவிர்த்து, இயற்கை பொருட்களால் சருமத்தை சுத்தம் செய்து, இறந்த செல்களை நீக்கி, சுருக்கம் குறைத்து, இளமையான முகத்தை தரும் சந்தன அடிப்படையிலான ஃபேஸ் மாஸ்க் குறிப்புகள்.
skin-whitening-secrets
skin-whitening-secrets
கலைமதி சிவகுரு

I am so thankful for kalki in my life. I am graduate from Holy Cross college in Nagercoil in the year 1983.I also tailaring work and make some bags, pouches. My writing were published in mangayarmalar, and Devathai, kudumbamalar with thinathanthi and received some prizes. Now I am writing in kalki publications. Cooking, Writing, reading anmigam books, playing chess are my hobbies.

Updated on: 
strip

பெண்கள் தங்கள் சருமத்தின் அழகைப் பராமரிப்பதற்கு பல கீரிம்களை உபயோகிப்பதால் தோல் வரண்டு, அலர்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இயற்கை பொருள்களை வைத்து செய்யப்படும் மருத்துவம் நல்ல தீர்வை தந்திருக்கிறது. மேலும் சந்தனம் சருமத்தில் ஏற்படும் பிரச்னைகளை எளிதில் நீக்க வல்லது.

தக்காளி:

சந்தனப் பொடியில் தக்காளியை அரைத்து கலந்து, வேண்டுமெனில் சிறிது முல்தானி மெட்டியையும் சேர்த்து கலந்து, முகத்திற்கு ஃபேஸ் பேக் போடலாம்.

எலுமிச்சை சாறு:

எலுமிச்சை சாற்றுடன் சந்தனப் பொடியை சேர்த்து கலந்து, முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, பருக்கள் வராமலும் இருக்கும்.

தயிர்:

தயிர் ஒரு சிறந்த கிளின்சர் என்று சொல்லலாம். எனவே அந்த தயிரை சந்தனப் பொடியில் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமம் மென்மையாவதோடு, வெள்ளையாகும்.

முட்டை மற்றும் தேன்:

மற்றொரு சந்தன ஃபேஸ் பேக்தான் இது. இதற்கு முட்டையை நன்கு அடித்து, தேன் மற்றும் சந்தனப் பொடியை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி, அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம் அழகாக இளமையுடன் காணப்படும்.

மஞ்சள் தூள்:

சந்தனப் பொடியை மஞ்சள் தூள், ஒரு துளி எலுமிச்சை சாறு மற்றும் பால் ஊற்றி கலந்து, சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் முகமானது பொலிவோடு காணப்படும்.

இதையும் படியுங்கள்:
வலியற்ற முறையில் முகத்தில் உள்ள முடிகளை அகற்ற இந்த ஒரு சிம்பிள் ட்ரிக் போதும்!
skin-whitening-secrets

முல்தானி மெட்டி:

சந்தனப் பொடியை முல்தானி மெட்டி பவுடருடனும் சேர்த்து ஃபேஸ் பேக் போடலாம். அதற்கு 1/2 டீஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் 1/2 டீஸ்பூன் சந்தனப் பொடியை சேர்த்து, தயிர் ஊற்றி கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

ரோஸ் வாட்டர்:

பொதுவாக சந்தன ஃபேஸ் பேக்கில், சந்தனப் பொடியை ரோஸ் வாட்டரில் கலந்து, சருமத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும்.

logo
Kalki Online
kalkionline.com