சந்தனம் இயல்பாகவே குளிர்ச்சியான ஒன்றாகும். இதை முகத்திற்கு பேஸ் பேக் போட்டு வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாகவும், பொலிவோடும், பிரகாசமாகவும் இருக்கும்.
இக்காலக்கட்ட பெண்கள் தங்கள் சருமத்தின் அழகைப் பராமரிப்பதற்கு பல கீரிம்களை உபயோகிப்பதால் தோல் வறண்டு, அலர்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதிலிருந்து எளிதில் விடுபடுவதற்கு சந்தனம் பெரும் உதவியாக உள்ளது. அதிலும் சந்தனத்தைக் கொண்டு முகத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாகவும், பொலிவோடும், பிரகாசமாகவும் இருக்கும்.
சந்தனம் சிவப்பு, மஞ்சள், வெண்மை என மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
சந்தனம் இயற்கையாகவே வலுவான மணம் கொண்டதாக அறியப்படுகிறது. வாசனை மட்டுமல்ல, அதன் கலவை மிகவும் அற்புதமானது, இது நிறைய அழகு சாதன தயாரிப்புகளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. சந்தனக் கட்டைகள், சந்தன எண்ணெய் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. குறிப்பாக அனைத்து விதமான சரும பிரச்சனைகளுக்கும் எதிராக போராடுகிறது. சந்தனத்தை கொண்டு தயாரிக்கப்படும் பேஸ் பேக்குகள் மற்றும் அதன் நன்மைகள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம் வாங்க.
சந்தன் பேஸ் பேக்குகள் :
எண்ணெய் சருமத்திற்கு - ஒரு நிமிடத்திற்குள் நீங்கள் செய்யக்கூடிய எளிதான பேஸ் பேக்கிற்கு ரோஸ் வாட்டர் மற்றும் சந்தன கலவை மட்டும் போதும். ஒரு கிண்ணத்தில் சந்தன பவுடருடன் சிறிது ரோஸ் வாட்டரைக் கலக்கவும். பின்னர் இந்த கலவையை எடுத்து உங்கள் முகத்தில் தடவவும். இந்த பேக் எண்ணெய் பசை சருமம் இருப்பவர்களுக்கு நல்ல பலனை தரும்.
வறண்ட சருமத்திற்கு - உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால் நீங்கள் பால் அல்லது ஆலிவ் எண்ணெய், ஆரஞ்சு பழச்சாறுடன் சந்தனப் பொடியையும் கலந்து, முகத்தில் அப்ளை செய்து அது காய்ந்தவுடன் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவலாம்.
முகப்பருவை குறைக்க - உங்கள் சருமத்தில் முகப்பருவை குறைக்க, சிறிது சந்தனப் பொடியை எடுத்து, அதில் மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட்டை தயாரித்து, அதை உங்கள் முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தை கழுவவும். இது சருமத்தை குளிர்விப்பது மட்டுமல்லாமல், முகப்பருவை ஏற்படுத்தும் சருமத்தில் உள்ள அதிகப்படியான பாக்டீரியா அகற்றவும் உதவுகிறது.
பிரகாசமாக சருமத்திற்கு - டல்லான முகத்தை பிரகாசமாக்க சிறிது தயிர், பால் மற்றும் சந்தனப் பொடியை ஒன்றாக கலக்கவும். இந்த கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்து விட்டு குளிர்ந்த நீரில் கழுவவும். தயிர் ஒரு சிறந்த கிளின்சர் என்று சொல்லலாம். எனவே அந்த தயிரை சந்தனப் பொடியில் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால் சருமம் மென்மையாவதோடு, வெள்ளையாகும்.
இளமையான சருமத்தை பெற - உங்கள் சருமம் வயதான தோற்றத்தில் இருந்தால் முட்டையின் வெள்ளை கரு, தயிர், மற்றும் சிறிது ஆப்பிள் ஜூஸ் மற்றும் சந்தனப் பொடி ஆகியவற்றைக் கலந்து, உங்கள் சருமத்தில் தடவி உலர்ந்த பின்னர் கழுவவும். இதனை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் இளமையான சருமத்தை பெறலாம்.
சந்தனப் பொடியில் தக்காளியை அரைத்து கலந்து, வேண்டுமெனில் சிறிது முல்தானி மெட்டியையும் சேர்த்து கலந்து, முகத்திற்கு ஃபேஸ் பேக் போடலாம்.
சந்தனப் பொடியை முல்தானி மெட்டி பவுடருடனும் சேர்த்து ஃபேஸ் பேக் போடலாம். அதற்கு 1/2 டீஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் 1/2 டீஸ்பூன் சந்தனப் பொடியை சேர்த்து, தயிர் ஊற்றி கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமம் பொலிவாகும்.
சந்தனத்தின் நன்மைகள் :
* சந்தனம் சன் டானைக் குறைக்க உதவுகிறது. சந்தனத்தில் இருக்கும் கிடைக்கும் இயற்கை எண்ணெய்கள் தோலில் சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களின் விளைவுகளை எதிர்த்துப் போராட உதவுகின்றன. மேலும் சருமத்தை குளிர்விக்க உதவுகின்றன, மேலும் கோடைகாலத்தில் அதிக வெப்பத்திலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கின்றன, அதே நேரத்தில் சன் டானைக் குறைக்கவும் உதவுகிறது.
* சருமத்தில் ஏற்படும் அழற்சி, எரிச்சல், வீக்கம் போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய சந்தனம் முக்கிய பங்காற்றுகிறது. இது எரியும் உணர்ச்சிகளை குறைக்க உதவுகிறது மற்றும் பூச்சி கடித்தலால் தோன்றும் தொற்றுநோய்களை எதிர்த்து போராடவும் உதவுகிறது.
* சந்தனம் ஓபன் போர்ஸ் எனும் சருமத் துளைகளை இறுக்குவதோடு, அடைத்து வைக்கப்பட்ட துளைகளை திறந்து சருமத்தில் உள்ள தூசி, அழுக்குகளை நீக்கி சருமத்தை பொலிவாக்கும் அஸ்ட்ரிஜென்டாக செயல்படுகிறது.
* சந்தனம் ஆண்டிசெப்டிக் ஆகும். மேலும் கிருமி நாசினிகள் உள்ளன, அதனால்தான் இது சருமத்தில் இருக்கும் நுண்ணுயிரிகளை நீக்குகிறது. மேலும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களால் ஏற்படும் முகப்பரு மற்றும் பிற ஒவ்வாமை பிரச்சனைகளை நீக்க இது உதவுகிறது.
* சந்தனம் சருமத்திற்கு குளிர்ச்சியை தருகிறது. மேலும் உங்கள் சருமத்திற்கு மிகவும் ஆரோக்கியமான பளபளப்பைக் கொடுக்கவும் உதவுகின்றன. மேலும் சருமத்தின் புத்துணர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.