ஆரோக்கியமான முறையில் தழும்புகளுக்கு டாடா சொல்லுங்க!

Say Ta ta to Scars in a Healthy Way!
Scars Treatment Image credit - pixabay
Published on

பரு தழும்பு

பருக்களை கிள்ளக் கூடாது. கறிவேப்பிலையை நீரில் கொதிக்கவைத்து ஆறியதும் குடியுங்கள். பரு வந்த பிறகோ அம்மை வந்து போன பிறகோ சிலருக்கு முகமெல்லாம் பள்ளமாக இருக்கும். வேப்பந்தளிர், துளசி, புதினா மூன்றிலும் சமஅளவு சாறு எடுக்கவும். அதில் கடலை மாவு அல்லது பார்லி பொடி கலந்து தழும்புகள்  மேல் ஆழமாக வைத்து, இரண்டு விரல்களால் அழுத்தி  மேல் பக்கமாக இழுத்து விடவும்.  தொடர்ந்து இப்படிச் செய்து வர பள்ளங்கள் சமமாகும். அதன் பிறகு பாதாம் எண்ணையை தடவி வர, சருமம் ஒரே நிறத்துக்கு மாறும். 

பொட்டு வைத்த தழும்பு

சிலருக்கு குங்குமப்பொட்டு, சாந்து, ஸ்டிக்கர் பொட்டு என எதுவுமே ஒத்துக் கொள்ளாமல் அந்த இடம் நிறம் மாறி தழும்பாகும். வெள்ளை எள்ளுடன் கசகசா, பயத்தம் பருப்பு சேர்த்து ரவை மாதிரி பொடித்து பொட்டு வைக்கிற மாதிரியே திக்கான இரவு வைத்துக் கொண்டு. காலையில் கழுவவும். இதை தினசரி செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

டீன் ஏஜ் தழும்பு

டீன் ஏஜ் பருவத்தினருக்கு தோள்பட்டையிலும், முதுகிலும் திடீரென வரி வரியாகத் தெரிய ஆரம்பிக்கும். இதற்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை. சமதளத் தரையில் படுத்துக் கொண்டு மூச்சை இழுத்து வெளியே விடுகிற மாதிரி பயிற்சி செய்யவும். கைகளை கடிகாரச் சுற்றிலும், பிறகு அதற்கு எதிர்த் திசையிலும் சுழற்றுகிற பயிற்சியை செய்தால்  கைகளில்  உள்ள  தழும்பு வரிகள் சரியாகும்.

இதையும் படியுங்கள்:
முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 
Say Ta ta to Scars in a Healthy Way!

பிரசவத் தழும்பு

கர்ப்பம் தரித்து 6ம் மாதத்திலிருந்து வயிறு பெரிதாகத் தொடங்கியதும் தினமும் குளிக்கும்போது வயிற்றுப் பகுதியில் நல்லெண்ணை தடவி, பொறுக்கும் அளவு சூடான வெந்நீரை அதன் மேல் ஸ்ப்ரே செய்ய வேண்டும். இது பிரசவத்துக்குப் பிறகு தழும்புகள் வராமலிருக்க உதவும்.

கண்ணின் கரு வளையம் நீங்க

வாழைப்பழத்தை மைய அரைத்து கரு வளையத்தின்மீது தடவலாம்.

வெந்த உருளைக்கிழங்கு டன் பால் சேர்த்து மசித்துக் தடவலாம்.

வெள்ளரிப் சாற்றில் பருத்தித் துணியை நனைத்து அதை கண்கள் மீது போடலாம்.

தேனுடன் பால் பௌடரைக் கலந்து கண்களைச் சுற்றித் தடவலாம்.

ஒன்றிரண்டு பாதாம்  ஊறவைத்து அரைத்துவைட்டமின் ஈ எண்ணையுடன் கலந்து கருவளையத்தில் தடவலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com