Scarfs, Shawls and Stoles!

Scarfs, Shawls and Stoles!
Published on

Fashion - Scarfs, Shawls and Stoles

ஃபேஷன் உலகில் பயன்படுத்தப்படும் சொற்கள் பெரும்பாலும் நமக்கு குழப்பமாகவே இருக்கும். பிளாட்ஸ், ஹீல்ஸ், பிளேசர், புல் ஓவர், ஜாக்கெட், ஜெர்கின் போன்ற வார்த்தைகள் அவற்றுக்கிடையே உள்ள வித்தியாசங்களை நமக்கு புரியவைப்பதில்லை. அதேபோல உடைகளைத் தாண்டி அதற்கான ஆக்சஸரீஸ் வகைகளும் நம்மை குழப்பமடையச் செய்கின்றன. இதில் நமக்கு அதிகம் குழப்பம் ஏற்படுத்துபவை Scarfs, Shawls, மற்றும் Stoles  இடையேயான வித்தியாசங்களாகும். இவை ஒவ்வொன்றும் அதன் தனித்துவமான பண்புகள் மற்றும் நோக்கங்களைக் கொண்டுள்ளவை.

Scarfs: பன்முகத்தன்மை

Scarfs என்பது பல ஆண்டுகளுக்கு முன்பாகவே வழக்கத்தில், பழக்கத்தில் இருந்த ஓர் ஆடை வகை. பருத்தி, பட்டு மற்றும் கம்பளி போன்ற பொருட்களால் செய்யப்படும் இலகுவான சதுரம் அல்லது செவ்வக வடிவில் இருக்கும் துண்டுகளாகும். இவை பலவிதமான அளவுகள் மட்டும் வடிவங்களில் வருகின்றன.

பெண்களின் உடைக்கு கூடுதல் அழகு சேர்ப்பதற்கும், கழுத்தைச் சுற்றி அணியும்போது வெதுவெதுப்பாக வைக்கவும். அல்லது ஹெட் பேன்ட் மற்றும் பெல்டாக பயன்படுத்துவதற்கும் ஸ்கார்ஃப் மிக ஏற்றவை. இவற்றின் பன்முகத்தன்மை இதை பெண்களின் பிரதான உடையாக மாற்றுகிறது.

●    Pashmina Scarf - சிறந்த காஷ்மீர் கம்பளியில் தயாரிக்கப்படும் இந்த ஸ்கார்ஃப், மென்மையாகவும் இருக்கும். பார்ப்பதற்கு ஆடம்பரமாகவும் இருக்கும். அதிக வெதுவெதுப்பைத் தந்து சுகமாகவும் இருக்கும்.

●    Infinity Scarf - வலை போல பின்னப்பட்ட ஸ்கார்ஃப், பெண்களின் ஸ்டைலை எடுப்பாக்கிக் காட்டும்.

●    Bandana scarf - சதுரமான வடிவத்தில் இருக்கும் இந்த வகை ஸ்கார்ஃப் பெண்களால் பெரும்பாலும் தங்கள் தலையில் அணியப்பட்டு கழுத்தின் கீழ் முடியப்பட்டு தலை முடியை கலையாமல் பார்த்துக்கொள்ளப் பயன்படுகிறது. காதுகளை மூடி கட்டப்படுவதால், குளிருக்கு அடக்கமாகவும் இருக்கும். ஆண்கள் இதனை தங்கள் கழுத்தைச் சுற்றி அணிகிறார்கள்.

Shawls: நேர்த்தி; மதிப்பு

Shawls எனப்படும் சால்வைகள் பொதுவாக தோள்களுக்கு மேலே பயன்படுத்தும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் இதில் எம்ப்ராய்டரி செய்து அதன் நேர்த்தியைக் கூட்டலாம். சால்வைகள் பெரும்பாலும் குளிர்காலத்தில் நம்மை சுகமாக வைத்திருக்கின்றன. மேடை நிகழ்ச்சிகளிலும் மற்ற விழாக்களிலும் சால்வைகள் தோள்களைச் சுற்றிப் போர்த்தப்பட்டு மரியாதைச் சின்னங்களாக பயன்படுத்தப் படுகின்றன.

●    Woollen Shawl - குளிர்காலத்தில் பயன்படுத்தப்படும் இந்த சால்வை உடலோடு ஒன்றி ஓர் அரவணைப்பை ஏற்படுத்துகிறது.

●    Pashmina Shawl - பஷ்மினா சால்வைகள் மென்மையானவை. ஆடம்பரமானவையும்கூட.

●    Lace Shawl - நுட்பமான வேலைப்பாடுகள் கொண்ட சரிகை இழைகள் இவ்வகை சால்வைகளுக்கு அழகு சேர்க்கின்றன.

Stoles: நவீன ஆளுமை

சால்வைகளை விட நீளமாகவும், அகலம் குறைவாகவும் இருக்கும் இந்த ஸ்டோல்கள்! இவை பொதுவாகவே ஆடம்பர பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. திருமணங்கள், விழாக்கள் மற்றும் பிற சிறப்பு நிகழ்வுகளில் பெண்கள் இதை அணிவதைப் பார்த்திருப்பீர்கள். பாரம்பரிய நிகழ்வுகளுக்கென்று பிரத்தியேகமான ஸ்டோல்கள் இருந்தாலும், ஜீன்ஸ், ஸ்கர்ட், ஷார்ட்ஸ் – டீ-சர்ட் போன்ற நவீன ஆடைகளை உடுத்தும்போதும் இவை அணியப்படுகின்றன. அணிபவரின் ஆளுமையை உயர்த்திக் காட்டும் ஸ்மார்ட்-வேர் இந்த ஸ்டோல்கள். சமீப கால அறிமுகம் என்றும் சொல்லலாம்.

●    Wedding Stole - மிகவும் ஆடம்பரமான முறையில் வடிவமைக்கப்பட்ட ஸ்டோல்கள் பெரும்பாலும் திருமணம் அல்லது முக்கிய நிகழ்வுகளில் எம்ப்ராய்டரி செய்யப்பட்டு அணியப்படுகின்றன.

●    Evening Stole - மாலை நேர உடை அல்லது காக்டைல் வகை ஆடைகளுக்கு கூடுதல் உடையாகவும் மற்றும் ஸ்டைல் ஸ்டேட்மென்ட்டாகவும் இந்த வகை ஸ்டோல்கள் அணியப்படுகின்றன.

●    Silk Stole – மென்மையான பட்டினைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த  ஸ்டோல்கள் ‘கேசுவல் வேர்’ ஆடைகளுக்கு ஏற்றதாகும்.  அதிக வேலைப்பாடுகள் இல்லாத சிம்பிள் உடைகளுடன் இவற்றை அணியும்போது, எடுப்பாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com