நாம் தினமும் பயன்படுத்தும் ஸ்பாஞ்ச் உண்மையில் ஒரு செடியா?

Scrubbing sponge
Scrubbing sponge
Published on

ஸ்க்ரப்பிங் ஸ்பாஞ்ச் என்பது பெரும்பாலானோரின் வீட்டுக் குளியலரையிலும் இருக்கும் ஒரு பொருளாகும். நமது உடலை ஸ்கிரப் செய்து குளிப்பதற்காக இது பயன்படுத்தப்படுகிறது. இந்த ஸ்க்ரப்பிங் ஸ்பாஞ்சின் மூலம் ‘லுஃபா’ என்ற பெயரையுடையத் தாவரமாகும். லூஃபா என்ற பெயரானது 17ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய தாவரவியலாளர்களால் எகிப்திய அரேபிய பெயரான ‘லுஃப் லூஃப்’ என்பதிலிருந்து எடுக்கப் பட்டதாகும்.

லூஃபா ஸ்பாஞ்ச் தாவரங்களிலிருந்து இயற்கையான முறையிலும் அதுமட்டுமின்றி செயற்கை முறையிலும் உற்பத்தி செய்யப்படுகிறது.

லூஃபா என்ற இந்த காய், பிஞ்சு பருவத்தில் இருக்கும்போது, உணவாகப் பயன்படுகிறது என்றால் நம்புவீர்களா? அதே அது முதிர்ந்ததும் காய்ந்து நாராகி குளிப்பதற்கும் பாத்திரங்களைக் கழுவுவதற்கும் ஸ்கிரப்பராக பயன்படுத்தப்படுகிறது. இன்று பெரும்பாலானோரின் தரமான குளியலுக்கு காரணமாக இருக்கும்  இந்த லூஃபா ஸ்பாஞ்சின் பயன்பாடு குறித்து பார்ப்போமா?

லூஃபா ஸ்பாஞ்ச்  பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

*இதை பயன்படுத்தும்போது, ஷவர் ஜெல் அல்லது பாடி வாஷில் இருந்து, லூஃபா ஸ்பாஞ்ச்  மேல் இரண்டு, மூன்று சொட்டுக்கள் ஊற்றினாலும், நிச்சயமாக ஒரு நல்ல குளியலுக்கு ஏதுவாக  நிறையளவிலான நுரையைப் பெறுவீர்கள்.

*லூஃபா ஸ்பாஞ்ச்  நம்முடையத் சருமத்தை நன்றாக சுத்தம் செய்கிறது. அனைத்து அழுக்கு துகள்களையும் நீக்குவதோடு சருமத் துளைகளையும் திறக்கிறது.

*இது நம்முடைய சருமத்தை மென்மையாக ஆக்கும். மந்தமாக காணப்படும் இறந்த சரும செல்கள் அனைத்தையும் நீக்கி, சருமத்தின் பொலிவைக் கூட்டும்.

*உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.

*ஷவர் ஜெல் / பாடி வாஷ் பாட்டிலை நீண்ட நாள் வரை  நீடிக்க வைப்பதன் மூலம் உங்கள் பணத்தை மிச்சப்படுத்த  உதவுகிறது.

*இது ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான  சருமத்தைப் பெற நமக்கு உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
மிஸ் பண்ணாதீங்க! உங்களுக்காக சில பயனுள்ள அப்டேட்ஸ்!
Scrubbing sponge

லூஃபா ஸ்பாஞ்ச் எவ்வாறு பராமரிக்க வேண்டும்?

*பொதுவாகவே குளியலறையில் ஈரப்பதம் நிறைந்த சூழலில் இந்த ஸ்பாஞ்ச்கள்  மணிக்கணக்கில் தொங்கவிடப்படுகின்றன. இதனால் இதில் நுண்ணுயிர்கள் அதிகமாகத் தங்கி பெருக வாய்ப்புள்ளது.

*உங்கள் உடலை ஸ்க்ரப் செய்து குளித்த பிறகு, ஸ்பாஞ்சில்  இருக்கும் நுரையை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டியது அவசியமாகும்.

*ஒரு ப்ளீச்சிங் கரைசலை தயார் செய்து, போதுமான அளவு நீரில் இந்த ஸ்க்ரப்பிங் ஸ்பாஞ்சினை 5-7 நிமிடங்கள் ஊற வைக்கவும். அதன்பிறகு கரைசலில் இருந்து வெளியே எடுத்து,  ஓடும் நீரில் நன்கு கழுவி,  தண்ணீரை உதறிவிட்டு நன்றாக உலர விடவும்.

*குளிப்பதற்கு முன்பும் பின்பும் அவற்றை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். சரியாக அதன்மேல் கவனம் செலுத்தவில்லை எனில் அவை நமது சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தலாம்.

Scrubbing sponge
லூஃபா ஸ்பாஞ்ச்...

எப்பொழுது பயன்படுத்தக்கூடாது?

*பிறப்புறுப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் முகத்தில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

*நம்முடைய உடம்பில் உள்ள முடிகளை ஷேவ் செய்யும் நாளில் தொடங்கி, அடுத்த 4-5 நாட்களுக்கும் இந்த ஸ்க்ரப்பிங் ஸ்பாஞ்சினை பயன்படுத்துவதைத் தவிர்த்துக்கொள்வது நல்லது.

இதை பயன்படுத்துவதால் நோய் தொற்று ஏற்படுமா?

இதை நாம் ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் நன்றாக சுத்தம்செய்து உலர்த்த வேண்டும். இல்லையேல் அது  பாக்டீரியா மற்றும் கிருமிகளை அதனுடைய உட்பகுதியில் பாதுகாக்கும். அதனால், இது நமக்கு சருமம் சார்ந்த நோய்த்தொற்றுகள், வெடிப்புகள் மற்றும் பிற  பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

இதையும் படியுங்கள்:
லிப்ஸ்டிக் வாங்கும்போது நீங்க செய்யும் இந்த 'சின்ன தப்பு' உங்க அழகையே கெடுத்துடும்!
Scrubbing sponge

லூஃபா ஸ்பாஞ்ச்  மூலம் உடலை ஸ்க்ரப் செய்வது நல்லதா அல்லது கெட்டதா?

லூஃபா ஸ்பாஞ்ச் மூலம் அதிகமாக அல்லது ஆக்ரோஷமாக தினமும் ஸ்க்ரப்பிங் செய்வது சரும எரிச்சலை ஏற்படுத்தும். குறிப்பாக மிகவும் மென்மையான சருமம் உள்ளவர்களுக்கு, இது சிவத்தல், அரிப்பு மற்றும் வீக்கத்தையும் ஏற்படுத்தலாம். 

எத்தனை நாட்கள் வரை இதனை பயன்படுத்தலாம்?

மென்மையான மிருதுவான சருமம் உடையவர்கள் லூஃபா ஸ்பாஞ்ச் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. அல்லது தினந்தோறும் பயன்படுத்தாது வாரம் ஒரீரு முறை மட்டுமே பயன்படுத்தலாம். அது மட்டுமின்றி, அது இயற்கை சார்ந்த தாவர வகையைச் சேர்ந்ததாக இருந்தால், மூன்று வாரங்களுக்கு ஒருமுறை அதை புதியதாக கட்டாயம் மாற்ற வேண்டும். உங்கள் ஸ்க்ரப்பிங் ஸ்பாஞ்ச் பிளாஸ்டிக் அல்லது செயற்கையாக இருந்தால், இரண்டு - மூன்று மாதங்களுக்குப்பிறகு அதை மாற்றிகொள்ளலாம்.

Scrubbing sponge
லூஃபா ஸ்பாஞ்ச்...

எல்லாம் சரி, லூஃபா எந்த தாவர வகையைச் சேர்ந்தது? எந்த காயிலிருந்து இந்த ஸ்கரப்பிங் ஸ்பாஞ்ச் நமக்கு கிடைக்கிறது?

லூஃபா என்பது நார்ச்சத்து மிக்க காய்கறிகளுள் ஒன்றான பீர்க்கங்காய் இனத்தைச் சேர்ந்தது. பிஞ்சு பீர்கங்காய் உணவுக்கும், நன்கு முத்தி காய்ந்து போன ‘பீர்க்கம் பஞ்சு’ சரும ஸ்க்ரப்பராகவும் பயன்படுவது ஆச்சரியம்தானே?!

-த. கண்மணி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com