ஹேர் ஜெல் யூஸ் பண்ணுவது நல்லதா? கெட்டதா?

ஹேர் ஜெல்
ஹேர் ஜெல்Intel
Published on

நவீன காலத்தில் மக்கள் வேகமாக ஓடி கொண்டிருக்கிறார்கள். யாருக்கும் தன்னை பராமரிப்பதில் நேரமே இல்லை. வீட்டில் இருந்து இயற்கையாக கவனிக்கும் பழக்கமே முற்றிலும் கைவிடப்பட்டது. இதனால் தான் பெண்கள் பலரும் பியூட்டி பார்லருக்கு படையெடுக்க தொடங்கி விட்டனர்.

அதே போன்று தான் முடியும் பராமரிக்கப்படுவதில்லை. இதனால் தலைமுடி நிறம் பிரவுனாகவும் மாறுகிறது, நிறைய கொட்டுகிறது. இதனால் சொட்டையோ, வழுக்கையோ விழுகிறது. அதற்கு பிறகு கவலை பட்டு என்ன பலன். இதனால் ஆண்களோ பெண்களோ தலைமுடியை தினசரி பராமரிப்பது அவசியமாகும். குறைந்தபட்சம் தினசரி எண்ணெய் தேய்தாலே முடி நன்றாக இருக்கும். சூடு தணிந்து உடலும் குளிர்ச்சியாகும்.

ஆனால் தற்போதைய மக்கள் தலைமுடிக்கு ஹேர் ஜெல் பயன்படுத்துகிறார்கள். ஹேர்ஜெல்லால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

ஹேர் ஜெல் பயன்படுத்தும்போது அவை நமது தலைமுடியை இயற்கையாகவே அடர்த்தியாக காண்பிக்கும். மேலும் அதில் கலந்துள்ள வேதிப்பொருட்களின் தன்மையைப் பொருத்தும் முடியின் அடர்த்தி மாறுபடும். சில குறிப்பிட்ட வகையான ஹேர் ஜெல் நமது தலைமுடி அனைத்தையும் ஒன்று சேர்த்து, அவை ஒன்றுடன் ஒன்று உராய்வதை தடுக்கிறது இதன் மூலம் அவை பார்ப்பதற்கு மிகவும் அடர்த்தியாக இருக்கும்.

சரியான ஹேர் ஜெல்லை நாம் பயன்படுத்தும் போது அவை சுருள் முடியை இன்னும் அழகாக காண்பிக்க உதவும். சரியான அளவிற்கு தலை முடியை மாய்சுரைஸ் செய்யும்போது, அவை இந்த ஹேர் ஜெல்லின் செயல் திறனை இன்னும் அதிகரிக்கிறது. இயற்கையான சுருள் முடி ஸ்டைலை பெறுவதற்கு தலைமுடி ஈரமாக இருக்கும்போது ஹேர் ஜெல் பயன்படுத்துவது சிறந்தது.

ஹேர்ஜெல்லால் ஏற்படும் பக்கவிளைவுகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

சொரிச்சல்: ஹேர் ஜெல்களில் காணப்படும் ஆல்கஹால் மற்றும் சில அமிலங்கள் முடி மற்றும் வேர்க்கால்களில் உள்ள ஈரப்பதத்தை குறைத்து வறட்சி மிக்கதாக மாற்றி விடுகிறது. மேலும் வேர்க்கால்களில் சுரக்கும் சீபம் மற்றும் ஈரப்பதத்தை குறைத்து தலைமுடியின் வலுவை குறைத்து விடுகிறது. இதன் காரணமாக அரிப்பு, எரிச்சல் ஆகியவை ஏற்படலாம்.

முடி உதிர்தல்: ஹேர் ஜெல்கள் தலையில் வறட்சியை உண்டாக்குவதால் அவை நமது தலைமுடியின் அடர்த்தியை குறைத்து, தலை முடி உதிர்வதற்கு காரணமாகிறது. மேலும் அதில் கலந்துள்ள வேதிப்பொருட்களை பொருத்தும் சில ஹேர் ஜெல்கள் நமது தலையில் உள்ள இறந்த செல்களோடு வேதிவினை புரிந்து தலை முடி உதிர்வதை அதிகரிக்கிறது.

பொடுகு தொல்லை: தினசரி நாம் ஹேர் ஜெல் பயன்படுத்தும் போது அவை கண்டிப்பாக நமது தலை முடியையும் வேர்க்கால்களையும் பாதிக்கும். தினசரி ஹேர் ஜெல் பயன்படுத்தும் போது நமது தலையில் இயற்கையாகவே சுரக்கும் எண்ணெய் பசைகளுடன் வேதி வினைபுரிந்து பொடுகுகள் உண்டாக வழி செய்கிறது. மேலும் பொடுகுகள் உண்டாவதால் அரிப்பு எரிச்சல் ஏற்படலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com