குளிர்காலத்தில் மென்மையான சருமம் பெற எளிய வழிமுறைகள்!

Skin care in winter
To get soft skin in winter
Published on

பெண்கள், ஆண்கள் என அனைவரும் தங்கள் அழகை பாதுகாப்பதில் சற்று அதிகமே கவனம் செலுத்துவார்கள். அதிலும் முகத்தில் ஏதேனும் வந்துவிட்டால் போதும். உடனே அதை மறைக்க அவர்கள் படும் போராட்டம் சொல்லவே இயலாது. அதில் ஒரு பிரச்னைதான் குளிர்காலங்களில் சருமம் வறட்சியடைவது.

குளிர் காலத்தில் பனிப்பொழிவதால் சருமத்தில் வெள்ளை வெள்ளையாக தென்படும். முகம், கை, கால் என பல இடங்களில் தென்படும். இதனை மறைக்கத்தான் அனைவரும் மாய்ஸ்சுரைசர் உபயோகப்படுத்துகின்றனர். அதுவும் இல்லாதவர்கள் கிராமப்புறங்களில் தேங்காய் எண்ணெய்யை தேய்ப்பார்கள். இப்படி வறண்டு போகும் சருமத்தை போக்க வீட்டிலேயே ஆர்கானிக் முறையில் சோப் செய்தால் அது நமது சருமத்தை பராமரிக்கும்.

இந்த சோப் தயாரிக்க நமக்கு முக்கியமாக தேவையானது கிளிசரின்தான். கிளிசரின் சருமத்தை எரிச்சலின்றி பஞ்சு போல மென்மையாக மாற்றும். இந்த சோப் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

வாசனை திரவியங்கள் ( ரோஸ் ஆயில், லாவெண்டர் எண்ணெய், பெப்பர்மின்ட் எண்ணெய்)

கிளிசரின் பேஸ், இயற்கை நிறமூட்டிகள் ( மஞ்சள் தூள், குங்குமப்பூ) சிலிக்கான் மோல்ட் (சோப் அச்சு)

செய்முறை:

கிளிசரின் பேசை எடுத்து குட்டி துண்டுகளாக நறுக்கி வையுங்கள். ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து அதனை மிதமான வெப்பத்தில் அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். நல்ல கைபிடியுடன் வாட்டமான பாத்திரத்தில் நறுக்கிய கிளிசரினை எடுத்து ஏற்கனவே சூடாகி கொண்டிருக்கும் நீரில் வைக்க வேண்டும். கவனமாக இருங்கள் பாத்திரம் மூழ்க கூடாது. இதை தான் டபுள் பாயிலிங் என்பார்கள். இந்த கிளிசரின் துண்டுகள் நன்கு உருகும் வரை சுத்தமான கரண்டியால் கிளறிவிடுங்கள்.

இதையும் படியுங்கள்:
அடர்த்தியான, அழகான புருவங்களைப் பெற என்ன செய்யலாம்?
Skin care in winter

உருகிய பிறகு அதனை இறக்கி வையுங்கள். இதனுடன் தேவையான வாசனை திரவியங்களை ஊற்றி கொள்ள வேண்டும். இந்த செயல்முறைக்கு பிறகு அறை வெப்பநிலையில் 2 மணி நேரம் குளிர விடவேண்டும். சருமத்திற்கு ஏற்ற ஆர்கானிக் சோப் தயார். வாசனை திரவியங்கள் கலந்த கிளிசரின் கலவையினை தாமதிக்காமல் சோப் மோல்டில் ஊற்றவேண்டும்.

கிளிசரின் தன்மையே உடனடியாக குளிர்வதுதான். ஆகவே அடுத்தடுத்த செய்முறைகளுக்கு கிளிசரின் உறையும் முன்பு தயாராக இருப்பது அவசியம். சோப் மோல்டில் ஊற்றிய பிறகு நமக்கு தேவைப்பட்டால் ரோஜா, பன்னீர் சோப், நலங்கு மாவு சோப், கற்றாலை சோப், சந்தனம் சோப், வேப்பிலை சோப், துளசி சோப் ஆகியவற்றை செய்யலாம்.

இதை நீங்கள் தினமும் உபயோகப்படுத்தி வர உங்கள் சருமம் மினுமினுப்பாக மாறும். முதல் முறையாக வீட்டில் சோப் செய்பவர்களாக இருந்தால், வீட்டில் சோப் தயாரிக்க சான்றிதழ் பெற்ற நிபுணரிடம் சென்று பாதுகாப்பான முறையில் கற்றுக்கொண்டு, உங்கள் வீட்டில் செய்ய தொடங்கலாம்!

-விஜி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com