நகங்களை நீளமாகவும் அழகாகவும் பராமரிப்பதற்கான எளிய வழிகள்!

Gorgeous nails
Nail care
Published on

பொதுவாக பெண்கள் நீளமான நகங்களையே வளர்க்க வேண்டும் என்று ஆசைக்கொள்வார்கள். ஆனால், அழுக்குப் படிவது, நகம் உடைவது போன்றவை, அந்த ஆசைக்கு பல தடைகளைக் கொடுக்கின்றன.

நகங்களை நீளமாக வளர்க்க வேண்டுமென்று நினைப்பவர்கள் கண்டிப்பாக சுத்தமாக வைத்துக்கொள்ள என்ன செய்வது என்பதையும் தெரிந்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், ஒருவர் எவ்வளவு சுத்தமாக உள்ளார் என்பதை அவரின் கை நகங்களே காண்பித்துக் கொடுத்துவிடும். மெனிக்யூர் என்ற பெயரில் அழகான நகங்களை பராமரிக்க அதிக பணம் செலவிடுவதற்கு, நாம் வீட்டிலேயே அதனைப் பராமரிக்கலாம். அந்தவகையில் நகங்களைப் பராமரிப்பதற்கான சில வழிகளைப் பற்றி பார்ப்போம்.

நகத்தைப் பராமரிக்க நாம் என்ன ஸ்டெப் எடுத்தாலும், முதலில் நகங்களுக்கு வாஸ்லின் தடவ வேண்டும். ஏனெனில், இது முதலில் நகத்தின் வறட்சியைப் போக்கும். பின்னர், நமது செயல்முறைகளால் எரிச்சல், புண் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

 நகங்களில் இருக்கும் செல்களை அப்புறப்படுத்த Cuticle Pusher ஐ பயன்படுத்தலாம். இது செல்களை அப்புறப்படுத்துவதோடு, நகம் விரைவாக வளர வழி வகுக்கும். தனக்கு நகங்கள் சீக்கிரமாக வளரவே மாட்டேன் என்கிறது, என்று கவலைக் கொள்பவர்கள் இந்த Cuticle Pusher ஐ பயன்படுத்தலாம். மேலும் நகங்களின் கத்திரி என்றழைக்கப்படும் இதனைப் பயன்படுத்தினால், நகம் பளபளப்பாக மாறும்.

விரல்கள் மீது கோதுமை மாவு மற்றும் பாலின் கலவையை நன்றாகத் தடவி மசாஜ் செய்துவிட்டு 20 நிமிடங்கள் ஊற விடுங்கள். இது உங்களின் விரல்களின் தோல்கள் மற்றும் நகங்களைப் பளப்பளப்பாக மாற்றிவிடும்.

சுடுநீரில் எலுமிச்சைப் பழங்களை நறுக்கி உள்ளே போட்டு, அதில் 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதன்பிறகு எலுமிச்சைப் பழத்தை வெளியே எடுத்து, விரல்கள்  முழுவதும் மசாஜ் செய்ய வேண்டும். எப்போதும் மாய்ஸ்ட்ரைஸர் பயன்படுத்துவது அவசியம். இதற்கு நீங்கள் விளக்கெண்ணெய் உடன் வைட்டமின் எண்ணெய் சேர்த்து நகங்கள் மீது இரண்டு நிமிடங்களுக்கு மசாஜ் செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
Carrot Hair Mask: வலிமையான கூந்தலுக்கு சிம்பிளான கேரட் ஹேர் மாஸ்க்!
Gorgeous nails

வாரம் ஒருமுறை இதனைச் செய்து வந்தால், நகங்கள் சுத்தமாகவும் அழகாகவும் இருக்கும்.

பல் துலக்கும் பேஸ்ட்டை நகங்களின் மீது தடவி ஐந்து நிமிடங்களுக்கு ஊற விடுங்கள். அதன்பின்னர், டூத் பிரஷ் பயன்படுத்தி சுத்தம் செய்தால், அழுக்குகள் தங்காது.

இறுதியாக, பேஸ் கோட் போட்டு பாலிஷ் போடுவது மிகவும் அவசியம்.

இந்த வழிகளில் நீங்கள் நகங்களைப் பராமரித்தால், அழகான நகங்களை பார்லர் செல்லாமல் வீட்டிலேயே பராமரிக்கலாம். அழகான நகங்களைக் கொண்டு வருவதோடு விட்டுவிடாமல், தவராமல் தொடர்ந்து பராமரிப்பது மிகவும் அவசியமானது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com