ஆரோக்கியமான சருமம், தலைமுடி, நகங்களைப்பெற ஆறு வகை உணவுகள்!

Dry fruits!
Dry fruits!
Published on

ள பளப்பான முடியும், மின்னும் சருமமும், வலுவான நகங்களுமே ஒருவர் முழுமையான ஆரோக்கியத்துடன் உள்ளார் என்பதற்கான அடையாளமாகும். அப்படியானதொரு ஆரோக்கியத்தைப்பெற நாம் என்ன மாதிரியான உணவுகளை உண்ண வேண்டும் என்பதை இப்பதிவில் பார்ப்போம்.

முடி, நகம், சருமம்- இம்மூன்றும் நல்ல ஆரோக்கியம் பெற்றுத் திகழ தேவைப்படும் ஒரு பொருள் கேரட்டினோஸைட்ஸ் (Keratinocytes). அவை ஸ்டெம் செல்களை வளர்த்து அதில் கேரட்டின் (Keratin) என்ற ப்ரோட்டீனை உற்பத்தி செய்து சேமித்து வைக்கின்றன.

தாவர விதைகள் மற்றும் கொட்டை (Nuts & Seeds) களில் பயோட்டின், ப்ரோட்டீன், வைட்டமின் E போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. அவை ஆன்டிஇன்ஃபிளமேட்டரி குணம் கொண்டவை. அல்ட்ரா வயலட் கதிர்களிலிருந்து சக்தியை உறிஞ்ச உதவக் கூடியவை. சருமத்தை சிதைவிலிருந்து காக்கவும் செய்பவை.

அதிகளவு கேரட்டினாய்ட் கொண்டது ஸ்வீட் பொட்டட்டோ. வைட்டமின் A யின் முன்னோடியான பீட்டா கரோட்டின் இதிலுள்ளது. இது முடி, நகம், சருமம் ஆரோக்கியம் பெறத் தேவையான கேரட்டின் என்ற ப்ரோட்டீனை உற்பத்தி செய்ய உதவுகிறது.

ஆரோக்கியமான கொழுப்புகளும் ஊட்டச் சத்துக்களும் நிறைந்த அவகாடோ பழம் சருமம் மற்றும் செல்களின் வளத்தைப் பெருக்க உதவுகின்றன. மேலும் இப்பழத்தில் முடி, நகம், சருமம் ஆகியவற்றிற்கு நன்மை தரக்கூடிய வைட்டமின் A, C, & K ஆகிய சூப்பர் சத்துக்கள் நிறைந்துள்ளன.

அதிகளவு ப்ரோட்டீன் அடங்கிய முட்டை சாப்பிடுவதால் கேரட்டின் அளவு அதிகரித்து முடி நல்ல ஆரோக்கியத்துடன் வளரும்.

இதையும் படியுங்கள்:
வேலையை பறிக்குமா AI? மக்கள் எண்ணம் என்ன?
Dry fruits!

நல்ல ஊட்டச் சத்துக்கள் அடங்கிய பசலை, காலே, சுவிஸ் சார்ட், போக்சொய் போன்ற பச்சை இலைக் கீரைகள் முடி, நகம், சரும ஆரோக்கியத்தை முழுமையாக காக்கின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக சருமத்தையும் முடியையும் நல்ல நீரேற்றத்துடன் வைப்பது அவசியம். அதற்கு தண்ணீர் மட்டும் அருந்தினால் போதாது. நீர்ச்சத்து அதிகம் கொண்ட வெள்ளரி, தர்பூசணி, லெட்டூஸ், ஆப்பிள், செலரி, பீச், ஸ்ட்ரா பெரி, வாட்டர் கிரெஸ் ஆகிய உணவுகளையும் அடிக்கடி உண்பது அவசியம்.

மேற்கண்ட உணவு வகைகளை நாமும் தொடர்ந்து உட்கொண்டு முடி, நகம், சரும ஆரோக்கியத்தை முழுமையாக பெற்று சிறப்பாக வாழ்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com