பதின் பருவ இளைஞிகளே! இது உங்களுத்தான்! சரும ஆரோக்கியத்திற்கான சில டிப்ஸ்!

Skin care tips...
Skin care tips...Image credit - pixabay.com

நாம் ஏதாவது முக்கிய நிகழ்ச்சிகளுக்கு செல்லும் அந்த சரியான நேரத்தில்தான் முகப்பருக்கள், சரும கறைகள் போன்றவை வந்து நம் முகத்தையே கெடுத்துவிடும். அவ்வாறு நேராமல் இருக்க, நாம் தொடர்ந்து சில முயற்சிகள் எடுத்து, சருமத்தைப் பராமரித்து வருவது மிகவும் அவசியம்.

Skin typeஐ கண்டுபிடியுங்கள்:

1. நமது முகத்தைப் பராமரிப்பதற்கு முதலில் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம், நமது ஸ்கின் டைப்பைத் தெரிந்துக்கொள்வதுதான்.

2. அதற்கு நாம் பார்லர் சென்று ஸ்கின் டெஸ்டர் மூலம் நம்முடை சருமம் உலர்ந்த சருமமா? அல்லது எண்ணெய் பசையுள்ள சருமமா? என்பதைக் கண்டுப்பிடிக்க வேண்டும்.

அழகுக் கலை நிபுணர் வசுந்தரா
அழகுக் கலை நிபுணர் வசுந்தரா

சருமத்தைத் தொடாதீர்கள்:

1. தேவையின்றி முகத்தைத் தொடுவதையும், வருடுவதையும், நகத்தால் சருமத்தைத் தீண்டுவதையும் தவிர்க்கவும். முகத்தை அடிக்கடித் தொட்டு, நகம் வைத்து கீறுவதால் சருமம் பாதிப்படைகிறது. இதனால் தழும்புகள் ஏற்பட்டு பல மாதங்கள் வரை அவை மறையாமல் இருக்கும். முகம் முழுவதும் பருக்கள் தோன்றி  பரவுவதற்கும் இது காரணமாகிறது.  

2. முகத்தில் ஃபேஸ்வாஷ், க்ரீம்கள், லோஷன்கள் போன்ற இதர அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தும் போதும் முகத்தைக் கழுவும்போதும் கைகளால் முகத்தை மிக கவனத்துடன் தொடவும்.

இறந்த செல்களை நீக்க வேண்டும்:

1. மிகவும் கடினமானப் பொருட்களைப் பயன்படுத்தி முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கக் கூடாது. இதற்கு ‘ஓட்ஸ் ஸ்க்ரப்’ நல்ல பலன் தரும். ஓட்ஸைப் பாலில் நன்றாக ஊறவைத்து அதனை முகத்தில் தடவி ஸ்க்ரப் செய்தால் இறந்த செல்கள் நீங்கி சருமம் சுத்தமாகும்.

2. இந்த மாதிரியான மென்மையானப் பொருட்களை வைத்து ஸ்க்ரப் செய்தால் கீறல்கள் ஏற்படாமல் தடுக்க முடியும். இதனை வாரம் இரண்டு முறை செய்யலாம்.

க்ரீம்கள்...
க்ரீம்கள்...Image credit - pixabay.com

மாய்ஸ்ச்சரைஸரைப் பயன்படுத்துங்கள்:

1. அனைத்து ஸ்கின் டைப் கொண்டவர்களும் மாய்ஸ்ச்சரைஸரைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும். இளமையான மற்றும் மென்மையான சருமம் கொண்டவர்கள் Gel அல்லது Light மாய்ஸ்ச்சரைஸர்களைப் பயன்படுத்தலாம்.

முகம் கழுவுதல் வேண்டும்:

1. எப்படி தினமும் இரண்டு முறை பல் துலக்குகிறோமோ, அதேபோல் இரண்டு முறைகளாவது முகத்தை கழுவ வேண்டும்.

இளம் வயதில் சருமத்தில் அதிகப் பருக்கள் வராமல் இருக்க தினமும் காலை மற்றும் இரவு தூங்குவதற்கு முன்னர் ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தைக் கழுவ வேண்டும்.

2. அதேபோல் மதிய நேரத்தில் அதிக வியர்வை தோன்றும்போது முகத்தை நன்றாகக் கழுவ வேண்டும். அப்படி முகம் கழுவும்போது oil free அல்லது ‘non comedogenic’ என்று குறிப்பிடப்பட்ட ஃபேஸ் வாஷ்களைப் பயன் படுத்தவும். இவை சருமத்தில் உள்ள ஓட்டைகளில் அடைந்திருக்கும் அழுக்குகளை நீக்க உதவும்.

make up...
make up...Image credit - pixabay.com

மேக்கப் ரிமூவிங்:

1. மேக்கப் போடுபவர்கள் இரவில் மேக்கப்பை முற்றிலுமாக நீக்கிவிட்டு முகத்தைக் கழுவ வேண்டும். உதடு, கண்கள் மற்றும் சருமத்திற்கான மேக்கப்களை அதற்கான மேக்கப் ரிமூவர் மற்றும் ஸ்பாஞ்சுகளைப் பயன்படுத்தி நீக்கிவிட வேண்டும். இப்படி நீக்குவதால் மேக்கப் பவுடர்கள் சருமத்தில் தேங்காமல் நிற்கும்.

2. மேக்கப் ஸ்பாஞ்ச் மற்றும் ப்ரஷ்களை தண்ணீர் பயன்படுத்தி நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். நீரில் கழுவ முடியாத ப்ரஷ்களை மேக்கப் ப்ரஷ் க்ளீனர் திரவம் பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.

pillow cover
pillow coverImage credit - pixabay.com

தலையணை உறைகளை மாற்ற வேண்டும்:

1. தலையணை உறையை அடிக்கடி மாற்றுவது அவசியம். ஏனெனில் நாம் தலையணையில் படுக்கும்போது முகத்திலிருக்கும் உலர்ந்த செல்கள் தலையணை உறையில் உதிரும்.

2. அடுத்த நாள் அதே தலையணையில் படுக்கும்போது சருமத்தில் பாதிப்பு ஏற்படும். ஆகையால் உறையை அடிக்கடி மாற்றுவது நல்லது. தலையணையின்மீது அளவான துண்டினைப் போட்டும் படுக்கலாம். இந்தத் துண்டை தினமும் தோய்த்து வெயிலில் காயவைத்து பயன்படுத்தலாம்.

மாய்ஸ்ச்சரைஸர், டோனர் மற்றும் க்ளென்சர் :

1. மாய்ஸ்ச்சரைஸர், டோனர் மற்றும் க்ளென்சர் போன்றவற்றைப் பயன்படுத்த ஆரம்பிக்கும்போது 2 முதல் 3 வாரங்கள் வரைத் தொடர்ந்துப் பயன்படுத்த வேண்டும். இந்த ‘ப்ராண்டு’ எந்த மாற்றத்தையும் தரவில்லை என்று பாதியில் நிறுத்தினாலோ அல்லது அடிக்கடி பிராண்டுகளை மாற்றினாலோ சருமம் பாதிப்புக்கு உள்ளாகும். பயனும் தெரியாது. ஆகையால் அதனை சில மாதங்கள் வரைத் தொடர்ந்துப் பயன்படுத்திவிட்டு பிறகு முடிவெடுக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
வயிற்று உப்புசத்தை தடுக்கும் முறைகள்!
Skin care tips...

ரெமடீஸ்:

எண்ணெய் பசை உள்ள முகச்சருமம் கொண்டவர்கள் வேப்பிலை மற்றும் துளசி நீரைப் பயன்படுத்தலாம். அதனை முல்தானி மெட்டியுடன் கலந்து ஃபேஸ் பேக் போட்டால் முகத்திலிருக்கும் பருக்கள் மற்றும் சரும கறைகள் நீங்கும்.

துளசி மற்றும் வேப்பிலை நீரைத் தலையில் தேய்த்துக் குளித்தால் பொடுகு நீங்கும்.

வல்லாரையை அரைத்து ஷாம்புவுடன் கலந்து தலையில் தேய்த்து குளித்தால் புத்துணர்வாக இருக்கும். அரைத்த வல்லாரையுடன் கடலை மாவோ அல்லது முல்தானி மெட்டியோ கலந்து முகத்தில் தேய்த்தால் முகச் சருமம் தெளிவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றினாலே உங்கள் சருமம் ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் இருக்கும் இளைஞிகளே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com