வெயிலிலும் சருமம் பாதுகாப்பு: சன்ஸ்கிரீன் இல்லாமல் சருமத்தை பேண உதவும் 5 உணவுகள்!

healthy skin
healthy skin

வெயில்காலம் வந்துவிட்டால் போதும் சருமம் உலர்வதைத் தடுக்க லோஷன், சன்ஸ்கிரீன் போன்றவற்றை பயன்படுத்தியே சருமத்தை பாதுகாக்கும் சூழல் ஏற்படுகிறது. ஆனால் அவற்றிற்கு பதிலாக நாம் உணவு மூலமாகவும் சருமம் உலர்வதைத் தடுக்க முடியும்.

வெயில் காலங்களில் நீர்ச்சத்துகள் நிரம்பிய உணவுகள் உடலில் உள்ள சோடியம், பொட்டாசியம் மற்றும் மாங்கனீஸ் ஆகியவற்றை நிர்வகிக்க உதவுகின்றன. இவை இழந்த திரவத்தை மீண்டும் உடலில் கொண்டு வருகிறது. அதேபோல் ஊட்டச்சத்தையும் கொடுக்கிறது. உடலில் நீரேற்றம் இருந்தாலே சருமம் உலராமலும் வெப்பம் தொடர்பான பிற உடல்நலக் கேடுகள் வராமலும் தடுக்கும். அந்தவகையில் உடல் நீரேற்றத்துடன், சருமம் உலராமல் இருக்க என்னென்ன உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்பதைப் பார்ப்போம்.

1. தக்காளி: சூரியனின் வெப்ப கதீர்வீச்சு உட்பட சூரியனின் அனைத்து கேடுகளிலும் இருந்து நம் உடலைக் காப்பாற்றுவதில் பெரிய பங்கு வகிக்கிறது தக்காளி. ஏனெனில் இதில் UVA மற்றும் UVB போன்றக் கதீர்வீச்சுகளை எதிர்க்கும் லைகோபீன் உள்ளது. இதுதான் உங்கள் உடலில் சூரியனால் ஏற்படும் அனைத்து அபாயத்திலுமிருந்துத் தடுக்கும்.

2. க்ரீன் டீ: க்ரீன் டீ பொதுவாக சிலர் உடல் எடையைக் குறைப்பதற்காக தினமும் பருகுவார்கள். ஆனால் அனைவருமே வெயில் காலங்களில் க்ரீன் டீ எடுத்துக்கொள்ளலாம். இந்த டீயில் பாலிஃபீனால் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால் இது சூரிய ஓளியினால் உடலில் ஏற்படும் எதிர்மறை விளைவுகளைத் தடுக்கிறது.

3. தயிர் மற்றும் லஸ்ஸி: தயிர் சாதம், மோர் அல்லது லஸ்ஸி போன்றவைகளைக் கட்டாயம் வெயில் காலங்களில் எடுத்துக்கொள்ள வேண்டும். இவை வெயில்காலத்தில் மிகவும் நல்லது என்று கூறுவார்கள். ஆனால் இது உடலுக்கு மட்டுமல்ல நமது சருமத்தையுமே ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும். ஏனெனில் இது ஊட்டச்சத்துகளிலிருந்து இரும்பு உறிஞ்சுதலை ஆதரிக்கின்றது.

இதையும் படியுங்கள்:
வெயில் காலத்தில் சரும பொலிவை பேணும் இயற்கை அழகு குறிப்புகள்!
healthy skin

4. எலுமிச்சை சாறு: எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் வெளிப்புறத்தில் வெப்பத்தால் ஏற்படும் பல அபாயங்கள் வராமல் தடுக்கிறது. மேலும் இதில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் இது புற ஊதா கதிர்களை தடுத்து, சருமத்தில் ஏற்படும் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்கின்றது.

5. இளநீர்: இளநீர் ஒரு இயற்கையான மாய்ஸ்சரைசர் என்றழைக்கலாம். இது சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்ற உதவுகிறது. இது சருமத்திலிருக்கும் அழுக்குகளை நீக்கி நிறத்தை மேம்படுத்த உதவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com